Rana Daggubati: தெறி டிரைலர்.. ராணா டகுபதியுடன் இணைந்து மிரட்டும் வெங்கடேஷ்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rana Daggubati: தெறி டிரைலர்.. ராணா டகுபதியுடன் இணைந்து மிரட்டும் வெங்கடேஷ்!

Rana Daggubati: தெறி டிரைலர்.. ராணா டகுபதியுடன் இணைந்து மிரட்டும் வெங்கடேஷ்!

Manigandan K T HT Tamil
Feb 16, 2023 12:07 PM IST

Rana Naidu: வெங்கடேஷும், ராணாவும் சிறந்த நடிகர்கள் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபிக்கும் வகையில் ராணா நாயுடு படம் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

நடிகர்கள் ராணா, வெங்கடேஷ்
நடிகர்கள் ராணா, வெங்கடேஷ் (AFP)

இது இணையத் தொடராக நெட்பிளிக்ஸில் மார்ச் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்தத் தொடரில் வெங்கடேஷின் மகனாக ராணா நடித்துள்ளார் என்பது டிரைலர் மூலம் தெரிய வருகிறது.

பாகுபலியில் மிரட்டல் நடிப்பை வழங்கிய ராணா டகுபதி, பீம்லா நாயக் படத்தில் பவன் கல்யாண் உடன் இணைந்து நடித்தார். தமிழில் பிரபு சாலமன் இயக்கத்தில் காடன் படத்தில் யானைகளை காக்கும் இயற்கை ஆர்வலராக நடித்து அசத்தியிருந்தார்.

நீண்ட காலமாக தெலுங்கு திரையுலகில் கோலோச்சி வரும் வெங்கடேஷும் இந்தப் படத்தில் வயதான தோற்றத்தில் வருகிறார். மலையாளத்தில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற த்ரிஷ்யம் படத்தில் அற்புதமான நடிப்பால் ரசிகர்களை திரையரங்கை நோக்கி படையெடுக்க வைத்தார் வெங்கேடஷ். சமீபத்தில் த்ரிஷ்யம் பாகம் 2 இல் நடித்து மீண்டும் தான் சிறந்த நடிகர் என்பதை நிரூபித்தார்.

வெங்கடேஷும், ராணாவும் சிறந்த நடிகர்கள் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபிக்கும் வகையில் ராணா நாயுடு படம் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

ஹேட் ஸ்டோரி படத்தில் நடித்து இளைஞர்களின் மனதை கொள்ளையடித்த சுர்வீன் சாவ்லா இந்தப் படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார்.

நடிகை சுர்வீன் சாவ்லா, உடன் நடிகர் ராணா.
நடிகை சுர்வீன் சாவ்லா, உடன் நடிகர் ராணா. (AFP)

தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் இந்த இணையத் தொடர் தயாராகி உள்ளது. கரண் அன்சுமன் கதையை எழுதியுள்ளார். சுபர்ன் வ்ரமா, கரண் அன்சுமன் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர்.

நெட்பிளிக்ஸ் இந்தியா யூ-டியூப் சேனலில் இந்த தொடரின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று வருகிறது.

நிஜத்திலும் ராணா டகுபதியின் உறவினர் வெங்கடேஷ் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் இணைந்து நடிப்பதால் இந்தத் தொடருக்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

"பல காரணங்களுக்காக இந்த இணையத் தொடர் எனக்கு ஸ்பெஷல். ராணா நாயுடு கதாபாத்திரத்தில் நடித்தது எனக்கு மிகவும் சவாலாக இருந்தது. தந்தையுடன் முரண்படும் மகன் கதாபாத்திரம். உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டும். இது நிச்சயம் ரசிகர்களை கவரும்" என்றார் ராணா.

நடிகர் வெங்கடேஷ் கூறுகையில், "எனது உறவினர் ராணாவுடன் இணைந்து நடிக்க கிடைத்த வாய்ப்பை பெரிதாக நினைக்கிறேன். எனது கதாபாத்திரம் முற்றிலும் புதிதாக இருக்கும். இதுபோன்ற ஒரு கதாபாத்திரத்தை இதுவரை நான் செய்ததில்லை" என்றார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.