Tirupathi Laddu: திருப்பதி லட்டு விவகாரம்... சாரி சொல்லி சிரித்த ரஜினி காந்த்... என்ன நடந்தது?-actor rajnikanth reaction on tirupathi laddu issue - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tirupathi Laddu: திருப்பதி லட்டு விவகாரம்... சாரி சொல்லி சிரித்த ரஜினி காந்த்... என்ன நடந்தது?

Tirupathi Laddu: திருப்பதி லட்டு விவகாரம்... சாரி சொல்லி சிரித்த ரஜினி காந்த்... என்ன நடந்தது?

Malavica Natarajan HT Tamil
Sep 28, 2024 01:29 PM IST

Tirupathi Laddu: திருப்பதி லட்டு விவகாரம் நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த், இந்த விவகாரம் குறித்து பேசியுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.

Tirupathi Laddu: திருப்பதி லட்டு விவகாரம்... சாரி சொல்லி சிரித்த ரஜினி காந்த்... என்ன நடந்தது?
Tirupathi Laddu: திருப்பதி லட்டு விவகாரம்... சாரி சொல்லி சிரித்த ரஜினி காந்த்... என்ன நடந்தது?

இந்த நிலையில், தேசிய அளவில் பேசுபொருளான இந்த விவகாரம் குறித்து நடிகர் ரஜினிகாந்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், ஸாரி. நோ கமெண்ட் என பதிலளித்து இந்த விவகாரம் குறித்து பேசாமல் கடந்து சென்றுள்ளார்.

திருப்பதி லட்டில் விலங்கு எச்சம்!

உலகம் முழுவதுமுள்ள பக்தர்கள் திருப்பதி ஏழுமலையானிடம் நேரில் சென்று சரணடைந்து தரிசனம் செய்தால், தங்கள் வாழ்வின் துயர் நீங்கும் என நினைத்து வருகின்றனர். இந்த நிலையில், திருப்பதியில் பக்தர்களுக்கு பிரசாதமாக அளித்துவரும் லட்டில் விலங்குகளின் எச்சம் கலந்த லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டு வந்ததாக ஆந்திர முதலமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

ஆவேசமான பவன் கல்யாண்

இந்துக்களின் மதநம்பிக்கையை புண்படுத்தும் விதமாக நடந்திருக்கும் இந்த நிகழ்வு தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக் குழுவை ஆந்திர மாநில அரசு நியமித்துள்ளது.

இந்த விவகாரத்தில், கடந்த ஜெகன்மோகன் ஆட்சிக்கு கண்டனம் தெரிவித்தும், திருப்பதி வெங்கடேசப் பெருமாளிடம் மன்னிப்புக்கோரும் விதமாகவும், ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் 11 நாள்கள் விரதத்தைத் தொடங்கியுள்ளார்.

அதேபோல் திருப்பதி லட்டு விவகாரத்தில் கோயில் புனிதம் கெட்டுவிட்டதால், அதற்குப் பரிகாரமாக 3 நாட்கள் சிறப்பு யாகங்களையும் திருப்பதி தேவஸ்தானம் நிர்வாகம் செய்தது.

லட்டு குறித்து பேசிய நடிகர் கார்த்தி

திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக ஹைதராபாத்தில் நடைபெற்ற ‘சத்யம் சுந்தரம்’(மெய்யழகன் படத்துக்கு தெலுங்கில் சூட்டிய பெயர்) பட நிகழ்ச்சியின்போது தொகுப்பாளர் நடிகர் கார்த்தியிடம்,சிறுத்தை படத்தில் வரும் கண்ணா லட்டு தின்ன ஆசையா என காமெடியாக நடிகர் கார்த்தி பேசும் காட்சியை மீம் ஆக மாற்றி. ‘லட்டு வேணுமா? இன்னொரு லட்டு வேணுமா சார்’ என நகைச்சுவையாகக் கேட்டார்.

அதற்குப் பதில் அளித்த நடிகர் கார்த்தி, "லட்டு குறித்து இப்போது பேசக்கூடாது. இது சென்ஸிடிவ் ஆன டாப்பிக்காக தற்போது உள்ளது. எனவே, லட்டு தற்போது வேண்டாம்" என்று சிரித்தவாறே சொன்னார்.

தொகுப்பாளர் விடாமல், மோட்டசூர் லட்டு வேணுமா? என்று கேட்டார். அதற்குப் பதிலளித்த கார்த்தி, "லட்டு இப்போது வேண்டாம்" எனப் பதில் கூறினார்.

சூடான பவர் ஸ்டார்

நடிகர் கார்த்தி பேசிய வீடியோ டோலிவுட்டில் வைரலான நிவையில், " லட்டு பற்றி பலருக்கு சிரிப்பாக உள்ளது. ஒரு சினிமா நிகழ்ச்சியில்கூட லட்டு, சென்சிட்டிவ் ஆன டாபிக் என ஹீரோ சொல்வதைப் பார்த்தேன்.

ஒருபோதும் யாரும் அப்படி பேசவேண்டாம். நான் அந்த ஹீரோவை ஒரு நல்ல நடிகராக மதிக்கிறேன். சனாதன தர்மத்தைப் பற்றி பொது இடத்தில் பேசுவதற்கு முன், ஒரு முறைக்கு நூறு முறையாவது சிந்திக்க வேண்டும்" என்று பவன் கல்யாண் காட்டமாகப் பேசினார்.

திருப்பதி லட்டு- ரஜினி ரியாக்ஷன்

இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்திடம் பத்திரிகையாளர் திருப்பதி லட்டு விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ரஜினி காந்த், "ஸாரி, நோ கமெண்ட்ஸ்" என பதிலளித்துவிட்டு சிரித்துள்ளார்.

முன்னதாக நடிகர் கார்த்தி இந்த விவகாரத்தில் இதேபோன்று பதிலளித்ததற்கு ஆந்த துணை முதலமைச்சரான பவன் கல்யாண் ஆவேசமடைந்தார். நடிகர் ரஜினியும் தற்போது இதேபோன்று பதிலளித்துள்ளதால், இதுகுறித்தும் பவன் கல்யாண் கருத்து தெரிவிப்பாரா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

வேட்டையன் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'கூலி' திரைப்படத்தில் நடிகர் ரஜினி காந்த் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை வந்த ரஜினியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

தற்போது திருப்பதி லட்டு விவகாரம் குறித்து ரஜினி கூறிய கருத்துகள், எந்த மாதிரியான எதிர்வினையை அளிக்கும் என்பது தெரியாமல் அவரது ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.