Rajinikanth: ‘எப்படா விழுவான்னு காத்துக்கிட்டு இருப்பாங்க.. நம்மள மிதிக்கணும்னு நினைக்கிறவன நாம’ -வெறியான ரஜினிகாந்த்!
Rajinikanth: “மும்பை திரைதுறையுலமே மிகப்பெரிய கொண்டாட்டத்துல இருந்துச்சு. ரொம்ப வேகமா உயர பறந்தா, எப்படா விழுவான்னு காத்துகிட்டு இருப்பாங்க..” - மேடையில் வெறியான ரஜினிகாந்த்!
‘வேட்டையன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், தன்னுடைய நண்பரான அமிதாப்பச்சன் குறித்து பேசினார்.
அமிதாப்தான் அத செஞ்சார்
அவர் பேசியதாவது, “ஹிந்தியில ‘அந்தா கனூன்’ படத்துல நான் நடிக்கிறதுக்கு காரணமே அமிதாப்பச்சன்தான்.அப்ப ஹிந்தில கமலோட ‘ஏக் துஜே கேலியே’ படம் நல்லா போயிட்டு இருந்துச்சு. தெலுங்குல ‘அந்தா கனூன்’ படம் ஹிட் ஆனதுனால, அந்த படத்தை ஹிந்திலையும் எடுக்கணும்னு முடிவு பண்ணாங்க. அப்ப அந்த படத்துல வேறொரு நடிகரை நடிக்க வைப்பதற்கான வேலைகள் நடந்துக்கிட்டு இருந்துச்சு.
அப்ப அமிதாப்பச்சன் தான் அந்த படத்துல நான் நடிச்சா நல்லா இருக்கும்ன்னு சொன்னதோட மட்டும் இல்லாம, அதுல கெஸ்ட் ரோல்ல நடிக்கிறதுக்கும் ஒத்துக்கிட்டார். அந்த படத்துல நடிக்கும் போது, எனக்கும் அவருக்கும் ஒரு நல்ல நட்பு உருவாச்சு. எனக்கும் அவர ரொம்ப பிடிச்சு போச்சு. அவரையும் எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு. அதனாலயே அவர் ஏதாவது படங்கள்ல நடிக்கணும்னா ரஜினிய கூப்பிடுங்கன்னு சொல்லிடுவார். அதுக்கப்புறமா நானும் அவரும் ‘கெராஃப்தார்’ ‘ஹம்’ உள்ளிட்ட படங்கள்ல சேர்ந்து நடிச்சோம்.
7 டு 8 டப்பிங்
அந்த மூணு படங்களுமே ரொம்ப பெரிய ஹிட் படங்கள். அவர் ஒரு ஆர்டிஸ்ட்டா எப்படின்னு நான் இங்க சொல்றேன். எப்பவுமே ஹிந்தி நடிகர்கள் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு 11 மணிக்கு மேல தான் வருவாங்க. ஆனா, அமிதாப்பச்சன் அப்படி கிடையாது. அவர் ரொம்ப பிசியா இருக்கும் போதே, 7 மணிக்கெல்லாம் டப்பிங் பேச வந்துருவாரு. அது அவருடைய வழக்கமா இருந்துச்சு.
காலைல 7 டு 8 மணி டப்பிங். 8 மணியில இருந்து 9 மணிக்குள்ள படப்பிடிப்புக்கு போயி மேக்கப் போட்டு ரெடியா உட்கார்ந்து இருப்பாரு.அவ்வளவு ஒழுக்கமா இருப்பார். அவர் செட்டுக்கு வந்துட்டார்னா பத்து நாள் சாப்பிடாமல் இருந்த ஒருவன், எப்படி சாப்பாட்டை தேடுவானோ, அப்படித்தான் சீன் எங்க, எங்கன்னு கேட்பார். சீன் பேப்பர படிச்சு, சந்தேகத்த கேட்டதுக்கு அப்புறமாதான் எல்லோருக்கும் குட் மார்னிங் சொல்லி, வேலைய ஆரம்பிப்பார். அவர் காமெடி சீன்ல நடிச்சா அந்த அரங்கமே சிரிப்பால அதிரும். அவர் சீரியஸான காட்சியில நடிச்சா செட் பின்ட்ராப் சைலன்ஸா இருக்கும். அந்தளவு மனஷன் டெடிகேட்டடா இருப்பார்.
அப்பா பெரிய ரைட்டர்
அவருடைய அப்பா மிகப்பெரிய ரைட்டர், கவிஞர். அம்மா, இந்திரா காந்தியுடைய நெருங்கிய நண்பி. ராஜீவ் காந்தியும், அமிதாப்பச்சனும் ஒரே பள்ளியில் படிச்சவங்க. இது யாருக்குமே தெரியாது. இந்த மாதிரியான குடும்பத்தில் பிறந்த அமித்ஜிக்கு நடிக்கணும்னு ரொம்ப ஆசை. அவர் குடும்பத்துல இருந்த பணத்துக்கும், பின்புலத்துக்கும், அவர் என்ன வேணும்னாலும் பண்ணி இருக்கலாம்.
ஆனா அவங்க குடும்பத்துல, அவங்க பேர பயன்படுத்தாம கூடாதுன்னு சொல்லிட்டாங்க. அதன்படியே அமித் ஜியும் செஞ்சாரு.. அதுக்கு அப்புறமா மும்பை வந்து, ஒரு சின்ன லாட்ஜில தங்கி இருந்து, தியேட்டர்கள்ல வாய்ஸ் கொடுத்து, கொஞ்சம் கொஞ்சமா முயற்சி பண்ணி, அவரே பெரிய ஆக்டரா மாறுனாரு. அதுவரைக்கும் அவர் யார் அப்படிங்கிற உண்மை யாருக்குமே தெரியாது. அவர் மார்க்கெட் உச்சத்துல இருந்தப்ப அவருக்கு ஒரு முறை விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
ஓடி வந்த இந்திரா காந்தி
அப்போது அவர பார்க்குறதுக்கு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி வந்தார். அப்போதுதான் அமித்ஜி யார் அப்படிங்கறது எல்லாத்துக்குமே தெரிஞ்சது. அப்ப புகழ், பணம் அப்படின்னு தன்னுடைய வாழ்க்கையோட உச்சத்தில் இருந்தார் அமிதாப். அவருக்கு அப்ப சரியா 58 வயசு. அவருக்கு சினிமாதுறை கொஞ்சம் போர் தட்ட ஆரம்பிச்சிருச்சு. அதுக்கப்புறமா போதும் முடிவெடுத்தவர் சுவிட்சர்லாந்துல ஒரு அப்பார்ட்மெண்ட் எடுத்து, தனியா இருந்தாரு.
அவருக்கான வேலைகள் எல்லாத்தையுமே அவரே பார்த்துகிட்டு இருந்தாரு. ஒரு வருஷம் அங்க இருந்தவரு, அதுக்கு அப்புறமா ஏதாவது பண்ணனும்னு சொல்லிட்டு, தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, கிட்டத்தட்ட 500 பேருக்கு வேலை கொடுத்து, ஒரு கார்ப்பரேட் கம்பெனி மாதிரி ஒரு நிறுவனத்த செட் பண்ணார். பல மொழிகள்ல பல படங்களை தயாரிச்சாங்க. ஆனா எல்லா படங்களும் தோல்வி அடைஞ்சு, மிகப்பெரிய அளவுல நஷ்டம் வந்துருச்சு. சினிமா துறை அப்படித்தான். நீங்க ஒழுங்கா அதை முன்னாடி பாத்து போலன்னா நீங்க தரமட்டத்துக்கே வந்துருவீங்க.
இதக்கிடையில, ஒரு தனியார் நிகழ்ச்சி உன்ன அவர் எடுத்து நடத்துறதா சொல்லி, எல்லாம் முடிஞ்சு, அது கைக்கு வரக்கூடிய நேரத்துல கேன்சல் ஆயிடுச்சு. அப்போ அவருக்கு 62 வயசு. அதுலையும் அவருக்கு அவ்வளவு கடன். அதையெல்லாம் அடைக்க அவருடைய எல்லா சொத்தையும் விற்க வேண்டிய நிலைமை வந்துருச்சு. அவருடைய வீடும் ஏலத்துக்கு வந்துருச்சு.
கொண்டாட்டத்தில் மும்பை
மும்பை திரைதுறையுலமே மிகப்பெரிய கொண்டாட்டத்துல இருந்துச்சு. ரொம்ப வேகமா உயர பறந்தா, எப்படா விழுவான்னு காத்துகிட்டு இருப்பாங்க.. விழ வேண்டாம், கொஞ்சம் தடுமாறுனாலே போதும். விழுந்துட்டான்னு சொல்லிடுவாங்க. டிரைவர், வாட்ச்மேன் சமையல்காரன் யாருக்கும் சம்பளம் கொடுக்க முடியல. அதனால, பக்கத்துல இருந்த பிரபல இயக்குநர்ட்ட அவரே போய் வேலை கேட்டாரு. அவர் கொடுத்த செக்லதான் எல்லாருக்கும் சம்பளம் கொடுத்தார். நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சி ஹிந்தில ஸ்டார்ட் பண்ணாங்க அந்த நிகழ்ச்சியிலும் தானே முன்வந்து பண்றேன்னு சொல்லி நடிச்சார்.
கிடைச்ச விளம்பரங்கள் எல்லாத்துலையும் நடிச்சார். எல்லாரும் அவரைப் பார்த்து சிரிச்சாங்க.. அப்ப அவருக்கு 64 வயசு. உடம்புல ஆயிரம் ப்ராப்ளம் இருக்கு. அந்த மூணு வருஷம்.. ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைச்சார் அமிதாப். அதன் மூலமா முழு கடனையும் அடைச்சி, இழந்த வீட்டையும் மீட்டு, அதே ரோட்ல இன்னும் மூணு வீடு வாங்கினார். அதுதான் அமிதாபச்சன். அதனாலதான் அவருக்கு இவ்வளவு மரியாதை. இப்போ அவருக்கு 82 வயசு. இப்பவும் அவர் பத்து மணி நேரம் உழைக்கிறார். அதுதான் லைஃப். வாழ்க்கையில சவால் வேணும். என்ன வந்தாலும் நம்ம நிக்கணும். நம்ம தலையில மிதிக்கணும்னு கங்கணம் கட்டி அலையுறவன் தலைய மிதிச்சு நம்ம மேல ஏறனும்." இவ்வாறு அவர் நிகழ்ச்சியில் பேசினார்.
டாபிக்ஸ்