Bluesattai Maran: திருப்பதி லட்டு விஷயம்..என்னப்பா தம் கட்டி சவுண்ட் விடலயா? கவுண்டமணி ஸ்டைலில் சத்யராஜுக்கு ட்ரோல்-bluesattai maran trolls actor sathyaraj for his silence in tirupati laddu issue with goundamani meme - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bluesattai Maran: திருப்பதி லட்டு விஷயம்..என்னப்பா தம் கட்டி சவுண்ட் விடலயா? கவுண்டமணி ஸ்டைலில் சத்யராஜுக்கு ட்ரோல்

Bluesattai Maran: திருப்பதி லட்டு விஷயம்..என்னப்பா தம் கட்டி சவுண்ட் விடலயா? கவுண்டமணி ஸ்டைலில் சத்யராஜுக்கு ட்ரோல்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Sep 27, 2024 06:00 PM IST

Bluesattai Maran: திருப்பதி லட்டு விஷயம் தொடர்பாக கவுண்டமணி ஸ்டைலில் சத்யராஜை ட்ரோல் செய்திருக்கும் பிரபல யூடியூப் விமர்சகர் ப்ளூசட்டை மாறன், அவர் அமைதியாக இருப்பதற்கான பின்னணி காரணம் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

Bluesattai Maran: திருப்பதி லட்டு விஷயம்..என்னப்பா தம் கட்டி சவுண்ட் விடலயா? கவுண்டமணி ஸ்டைலில் சத்யராஜுக்கு ட்ரோல்
Bluesattai Maran: திருப்பதி லட்டு விஷயம்..என்னப்பா தம் கட்டி சவுண்ட் விடலயா? கவுண்டமணி ஸ்டைலில் சத்யராஜுக்கு ட்ரோல்

தற்போது லேட்டஸ்டாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், திரைப்படங்களில் தனது நக்கல் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவருமான சத்யராஜ்ஜை சீண்டியுள்ளார்.

லட்டு பத்தி கருத்து சொல்லலையா?

கடவுள் மறுப்பு, பொரியரிசம் பற்றி மேடைக்கு மேடை தனது பேச்சிலும், பல்வேறு பேட்டிகளிலும் பேசி வருபவராக நடிகர் சத்யராஜ் இருந்துள்ளார். இவரது சமீபத்திய ரிலீசான தோழர் சேகுவேரா என்ற படத்தில் கூட பெரியரிசம் கருத்துகள், இடஓதுக்கீடு, மாட்டுக்கறி சாப்பிடுவது போன்ற போல்டான விஷயங்களை பற்றி காட்சிகள் அனல் தெறிக்கும் வசனங்களை பேசியிருந்தார் சத்யராஜ்.

இந்த சூழ்நிலையில் தற்போது நாடு முழுவதும் பேசு பொருள் ஆகியிருக்கும் திருப்பதி லட்டு குறித்து சத்யராஜ் எந்த விஷயமும் இதுவரை வாய் திறக்காமல் இருப்பதாக ப்ளூசட்டை மாறன் சாடியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கவுண்டமணி, செந்தில், சத்யராஜ் இடம்பெறும் சேனாதிபதி காட்சியின் ஸ்டில்லை மீம் போல் பகிர்ந்து ட்ரோல் செய்துள்ளார்.

ப்ளூசட்டை மாறன் தனது பதிவில், "'ஏம்பா...முன்ன எல்லாம் தமிழர்களுக்கு ஒரு பிரச்னை வந்தா தம் கட்டி சவுண்ட் விடுவ. அதிரடியா நாத்திகம் பேசுவ. இப்ப ஏன் சைலன்ட் ஆகிட்ட? லட்டு பத்தி கருத்து சொல்லலையா?'

'இப்ப நான் பான் இண்டியா நடிகர். குறிப்பா தெலுங்குல. நமக்கு எதுக்கு வம்புன்னு பம்மிட்டேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

லட்டு விவகாரத்தில் நடிகர் கார்த்தி ட்ரோல்

முன்னதாக, திருப்பதி லட்டு விவகாரத்தில் மெய்யழகன் படத்தின் தெலுங்கு பதிப்பான சத்யம் சுந்தரம் பட நிகழ்ச்சியின்போது ஆங்கர் கார்த்தியிடம் லட்டு வேணுமா சார் கேட்ட கேள்விக்கு, "லட்டு குறித்து இப்போது பேசக்கூடாது. அது உணர்ச்சிபூர்வமான டாப்பிக்காக தற்போது உள்ளது. லட்டு வேண்டாம்" என்று சிரித்தவாறோ சொன்னார்.

கார்த்தியின் இந்த பேச்சுக்கு தெலுங்கு சினிமா மெகா ஸ்டாரும், ஆந்திரா துணை முதலமைச்சருமான பவன் கல்யாண் கடும் கண்டனம் தெரிவிக்க, நடிகர் கார்த்தி உடனடியாக தனது எக்ஸ் பக்கத்தில் மன்னிப்பு கோரினார்.

இந்த விவகாரத்தை கையில் எடுத்த ப்ளூசட்டை மாறன், தமிழ்நாடு மக்கள் எப்படி போனா நமக்கென்ன. பக்கத்த ஸ்டேட்ல நம்ம படம் ரிலீஸ் ஆகனும்ன்னு கார்த்தி மன்னிப்பு கேட்டார் என கிண்டல் செய்தார்.

அத்துடன், "சகுனித்தனமாக எந்த கேள்வி கேட்டாலும் தலீவர் (ரஜினிகாந்த்) மாதிரி சாணக்யத்தனமாக பதில் சொல்ல வேண்டும்.

இதுவே தன்மானத்தமிழன் விஜயகாந்தாக இருந்திருந்தால் நிச்சயம் மன்னிப்பு கேட்டிருக்க மாட்டார்.

பாகுபலி ரிலீஸ் சமயத்தில் காவிரி விவகாரத்தில் கர்நாடகத்திற்கு எதிராக பேசியதற்கு மன்னிப்பு கேட்டார் சத்யராஜ். இப்போது ஆந்திர நடிகர் பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்கிறார் கார்த்தி." எனவும் பல்வேறு மீம்களை பகிர்ந்து கிண்டல் செய்தார்.

இதையடுத்து இந்த லட்டு விவகாரத்தில் இதுவரை வாய் திறக்காமல் அமைதியாக இருந்து வரும் சத்யாராஜை தற்போது வம்புக்கு இழுத்துள்ளார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.