Indian 2: இந்தியன் 2 படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் ஏன் இசை அமைக்கவில்லை.. அனிருத் வந்தது எப்படி?-இயக்குநர் ஷங்கர் பதில்
- இந்தியன் 2 படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை நாடு முழுவதும் ஏற்படுத்தியுள்ளது. பிரமாண்டத்துக்கு பெயர் போன ஷங்கர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு ஏர்.ஆர்.ரகுமானுக்கு பதிலாக அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார். அது ஏன் என இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.

(1 / 6)
இந்தியன் படம் 1996 ம் ஆண்டு ரிலீஸ் ஆனது. லஞ்சத்துக்கு எதிரான படமான இது, மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. (Photo by Sujit JAISWAL / AFP)(AFP)
(2 / 6)
இந்தியன் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்தார். பாடல்கள், பின்னணி இசை சிறப்பாக இருந்தது. (PTI Photo) (PTI)
(3 / 6)
ஆனால், இந்தியன் 2 படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவில்லை. மாறாக அனிருத் இசையமைத்துள்ளார். ஷங்கர் படங்களில் பெரும்பாலானவற்றுக்கு ஏ.ஆர்.ரகுமானே இசையமைத்து இருந்தார். இந்நிலையில், அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைத்திருந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. (PTI Photo) (PTI)
(4 / 6)
2.0 படத்துக்கு பின்னணி இசை அமைத்துக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் தான் இந்தியன் 2 கதையை கமல் சாரிடம் கூறினேன். அவருமே ஓகே சொல்லிவிட்டார் என்றார் ஷங்கர்.
(5 / 6)
2.0 படத்துக்கு மிகப் பெரிய வேலை பளு இருந்ததால், ஏ.ஆர்.ரகுமானுக்கு பதிலாக அனிருத்தை இசையமைப்பாளராக இந்தியன் 2 படத்திற்குள் சேர்த்தோம் என்றார் இயக்குநர் ஷங்கர்.
மற்ற கேலரிக்கள்