Sivaji vs Rajinikanth: கடனில் மூழ்கிய சிவாஜி குடும்பம்..நடிகர் ரஜினிகாந்த் செய்த உதவி என்ன தெரியுமா?-actor rajinikanth help to actor sivaji ganesans family - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Sivaji Vs Rajinikanth: கடனில் மூழ்கிய சிவாஜி குடும்பம்..நடிகர் ரஜினிகாந்த் செய்த உதவி என்ன தெரியுமா?

Sivaji vs Rajinikanth: கடனில் மூழ்கிய சிவாஜி குடும்பம்..நடிகர் ரஜினிகாந்த் செய்த உதவி என்ன தெரியுமா?

Karthikeyan S HT Tamil
Sep 01, 2024 07:48 PM IST

Sivaji vs Rajinikanth: நடிகர் சிவாஜியின் வீடான அன்னை இல்லம் விற்பனைக்கு என்றதும் அதைக் காப்பாற்றவேண்டும் என்பதற்காக ரஜினி நடித்துக் கொடுத்த படம் 'சந்திரமுகி'

Sivaji vs Rajinikanth: கடனில் மூழ்கிய சிவாஜி குடும்பம்..நடிகர் ரஜினிகாந்த் செய்த உதவி என்ன தெரியுமா?
Sivaji vs Rajinikanth: கடனில் மூழ்கிய சிவாஜி குடும்பம்..நடிகர் ரஜினிகாந்த் செய்த உதவி என்ன தெரியுமா?

இதைத்தொடர்ந்து வரிசையாக 'கர்ணன்', 'திருவிளையாடல்', 'வீர பாண்டிய கட்டபொம்மன்', 'மனோகரா', 'அன்னையின் ஆணை', 'அன்பு', 'இரத்ததிலகம்' என பல படங்களில் தனது நவரச நடிப்புத் திறனை வெளிப்படுத்தினார். வீரபாண்டிய கட்டபொம்மன், கர்ணன் என யாரை நினைத்தாலும் சிவாஜிதான் ரசிகர்கள் கண் முன்பு வந்து செல்வார்கள்.

நடிகர் சிவாஜி கணேசனின் சொந்த வீடுதான் அன்னை இல்லம். இந்த வீடு சிவாஜி கணேசன் சினிமாவில் சம்பாதித்து ஆசை ஆசையாய் கட்டியது. மேலும், சிவாஜிகணேசனுக்கு ரஜினிகாந்த் மிகவும் நெருக்கமானவர். இவர்கள் இருவரும் இணைந்து ‘படிக்காதவன்’, ‘விடுதலை’ மற்றும் ‘படையப்பா’ ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தனர்.

படையப்பாவில் நடித்த சிவாஜி

"படையப்பா" படத்திற்காக ரஜினி சிவாஜியிடம் போய் நடிப்பதற்காகக் கேட்கிறார். அதற்கு உடல்நிலை காரணமாக சில கண்டிஷன்கள் போடுகிறார்கள். 'அதுக்கென்ன நான் அப்பாவை நல்லபடியா பார்த்துக்கறேன்'னு ரஜினி சொல்கிறார். அதன்பிறகே நடிக்க அனுப்புகின்றனர். மைசூர்ல படப்பிடிப்பு நடக்கிறது.

அப்போது சிவாஜி ரஜினியிடம் கேட்கிறார். 'நான் இறந்த பிறகு இறுதி ஊர்வலத்தில் முதல் ஆளா வந்து நிற்பாயா'ன்னு கேட்கிறார். 'என்னப்பா இப்படி எல்லாம் கேட்குறீங்க'ன்னு ரஜினி அதிர்ச்சியோடு கேட்கிறார். 'இல்ல. நீ திடீர்னு வெளிநாட்டுல இருக்கேன்னு சொல்வ.

இல்லன்னா இமயமலைக்குப் போயிடுவ. திடீர்னு சாமியாரா ஆகிடுவ. உன்னைப் பிடிக்கிறது பெரிய கஷ்டமா இருக்கும். அந்தத் தகவல் கேட்டா நீ வந்து நிக்கணும். என் ஊர்வலத்து முன்ன முதல் ஆளா வந்து நிக்கணும். அதைப் பண்ணுவியா நீ...'ன்னு சிவாஜி கேட்குறாரு. ரஜினி உருகிப்போய் 'அப்படி எல்லாம் கேட்காதீங்க'ன்னு சொல்றாரு.

"படையப்பா" படம் சூட்டிங் முடியுது. சிவாஜி கணேசன் இறந்துவிட்டார்னு செய்தி வருது. பதறியடித்து ரஜினி அங்கு செல்கிறார். மைசூர்ல சொன்னது எல்லாம் ஞாபகத்துக்கு வருது. 'தீர்க்கத்தரிசி மாதிரி சொன்னாரே...'ன்னு நினைக்கிறாரு. அதன்பிறகு படம் பண்ணக்கூடாது என்ற முடிவில் இருந்த ரஜினிகாந்தின் காதுகளுக்கு ஒரு செய்தி வருகிறது.

ரஜினியோட ராசியான எண்

'அன்னை இல்லம் விற்பனைக்கு' என்று நாளிதழில் செய்தி வர ரசிகர்கள் கொந்தளித்து அந்த பத்திரிகையை எரித்தார்களாம். உடனே ரஜினி ராம்குமாருக்கு போன் போட்டு படம் பண்ணலாமான்னு கேட்கிறார். பி.வாசு தான் டைரக்டர்னதும் உடனே ஒத்துக்கிட்டாங்க. அது தான் “சந்திரமுகி”. 804 நாள்கள் ஓடியது. அதென்ன 804 நாள்னு கேட்கலாம். அதைக் கூட்டிப்பார்த்தால் 3 வரும். அது ரஜினியோட ராசியான எண். அது அவரோட பிறவி எண்.

சிவாஜி குடும்பத்திற்கு உதவிய ரஜினி

அன்னை இல்லம் விற்பனைக்கு என்றதும் அதைக் காப்பாற்றவேண்டும் என்பதற்காக ரஜினி நடித்துக் கொடுத்தார். தி.நகருக்கே அது தான் அடையாளமா இருந்தது. சிவாஜியின் இழப்பால் அவரது குடும்பமே நொடிந்து போய் இருந்ததால் தான் அன்னை இல்லம் விற்பனைக்கு என்று செய்தி வந்துள்ளது. அவர்களுக்கு உதவ வேண்டுமே என்று ரஜினி போன் போட்டது தான் அவரது பெருந்தன்மை. மேற்கண்ட தகவலை பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.