Surya 44: கேங்க்ஸ்டர் திரைப்படம்.. லீட் ரோலில் முக்கிய நடிகர்.. இது சம்பம் செய்யும் கூட்டணி!-actor prakash raj taken lead role in surya 44 movie - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Surya 44: கேங்க்ஸ்டர் திரைப்படம்.. லீட் ரோலில் முக்கிய நடிகர்.. இது சம்பம் செய்யும் கூட்டணி!

Surya 44: கேங்க்ஸ்டர் திரைப்படம்.. லீட் ரோலில் முக்கிய நடிகர்.. இது சம்பம் செய்யும் கூட்டணி!

Malavica Natarajan HT Tamil
Sep 29, 2024 12:02 PM IST

Surya 44: கேங்க்ஸ்டர் தீமில் நடிகர் சூர்யா நடத்துவரும் அவரது 44வது படம் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அந்தத் தகவலில் இந்தப் படத்தின் லீட் ரோலில் நடிப்பவர் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Surya 44: கேங்க்ஸ்டர் திரைப்படம்.. லீட் ரோலில் முக்கிய நடிகர்.. இது சம்பம் செய்யும் கூட்டணி!
Surya 44: கேங்க்ஸ்டர் திரைப்படம்.. லீட் ரோலில் முக்கிய நடிகர்.. இது சம்பம் செய்யும் கூட்டணி!

இதனால் 2024ல் இவர் கதாநாயகனாக நடித்து எந்தப் படமும் இதுவரை ரிலீஸ் ஆகாததால் இவரது ரசிகர்கள் சூர்யாவின் அடுத்த படம் எப்போது ரிலீஸ் ஆகும் என காத்திருக்கின்றனர். இந்த நிலையில், அவர் கதாநாயகனாக நடித்து வரும் படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

சூர்யா 44

நடிகர் சூர்யா, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்றில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். கேங்ஸ்டர் தீமில் உருவாகிவரும் இந்தப் படத்தை நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனமும், கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனமும் தயாரிக்கிறது.

இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயாகியாக நடிக்கிறார். இவர்களுடன், நடிகர்கள் ஜெயராம், கருணாகரன் போன்றோரும் நடித்து வருகின்றனர். இதற்கிடையில், சூர்யாவின் 44வது படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூன் மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில், நடிகை பூஜா ஹெக்டே சூர்யா 44 படத்திற்கான தனது அனைத்து படபிடிப்பையும் நிறைவு செய்துள்ளார். அதனை கொண்டாடி அவர் கேக் வெட்டியும் கொண்டாடி தனது மகிழ்ச்சியை பதிவு செய்துள்ளார்.

முக்கிய அப்டேட்

இதைத் தொடர்ந்து தான் சூர்யா 44 படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. கேங்க்ஸ்டர் திரைப்படமான இதில், பிரகாஷ் ராஜ் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை இன்னும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில், இந்தத் தகவல் உண்மையாக இருக்க வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ஏனெனில் சூர்யா- பிரகாஷ் ராஜ் கூட்டணியில் இதற்கு முன் வெளியான சிங்கம் படம் ரசிகர்களை பரவசப்படுத்தியது. இவர்கள் இருவரும் திரைப்படத்தில் தங்கள் கேரக்டருக்கு நியாயம் சேர்த்து நடித்திருந்தது படத்தின் வெற்றிக்கு முக்கியமாக அமைந்தது. அதுமட்டுமல்லாமல் அது ரசிகர்களையும் பெரிதாக கவர்ந்தது.

இதனால், சூர்யாவின் 44வது திரைப்படத்திலும் பிரகாஷ் ராஜ் நடித்தால், அது நல்ல கூட்டணியாக இருக்கும். படம் வெற்றி பெறவும் இது உதவும் என கோலிவுட் வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகிறது.

கங்குவா

இதற்கு முன்னதாக, வரலாற்று பின்னணியில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் வரும் நவம்பர் மாதம் திரைக்கு வர இருக்கிறது. இது 2 பாகங்களாக வெளியிடப்படும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது.

அண்மையில், கங்குவா படக்குழு படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டது. இது ரசிகர்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தாலும், இதுவரை பேமிலி சென்டிமென்ட் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து படத்தை எடுத்து வந்த நிலையில், அவர் வரலாற்று பின்னணி படத்தை எப்படி எடுத்துள்ளார் என்பது பலரையும் யோசிக்க வைத்துள்ளது. இதனால், படம் ரிலீஸாகும் வரை ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

அத்துடன் சூர்யா 44 திரைப்படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வேகமாக எடுத்து வருவதால், சூர்யாவின் படங்கள் குறைந்த காலத்திற்குள் அடுத்தடுத்து வெளியாகவும் வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

நிலமை இப்படி இருக்க, நடிகர் சூர்யா கார்த்திக் சுப்புராஜின் படத்தை முடித்துவிட்டு, அடுத்ததாக நடிகரும் இயக்குநருமான ஆர்.ஜே.பாலாஜி திரைப்படத்தில் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Whats_app_banner
தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.