Karthik Subbaraj: ‘ஜெயிச்ச பிறகுதான் கல்யாணமா?.. உன் லவ்வே தேவையில்லன்னு சொல்லிட்டா’ -கார்த்திக் சுப்புராஜ் காதல் கதை!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Karthik Subbaraj: ‘ஜெயிச்ச பிறகுதான் கல்யாணமா?.. உன் லவ்வே தேவையில்லன்னு சொல்லிட்டா’ -கார்த்திக் சுப்புராஜ் காதல் கதை!

Karthik Subbaraj: ‘ஜெயிச்ச பிறகுதான் கல்யாணமா?.. உன் லவ்வே தேவையில்லன்னு சொல்லிட்டா’ -கார்த்திக் சுப்புராஜ் காதல் கதை!

Published Jun 24, 2024 10:09 PM IST Kalyani Pandiyan S
Published Jun 24, 2024 10:09 PM IST

Karthik Subbaraj: கல்யாணம் முடிந்து விட்டது. என்னுடைய மனதில் நாளைய இயக்குநர் மூலம் கிடைத்த புகழ் காரணமாக, உடனே தயாரிப்பாளர் கிடைப்பார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் எனக்கு தயாரிப்பாளர் கிடைக்கவில்லை. - கார்த்திக் சுப்புராஜ் காதல் கதை!

Karthik Subbaraj: ‘ஜெயிச்ச பிறகுதான் கல்யாணமா?.. உன் லல்வே தேவையில்லன்னு சொல்லிட்டா’ -கார்த்திக் சுப்புராஜ் காதல் கதை!

(1 / 6)

Karthik Subbaraj: ‘ஜெயிச்ச பிறகுதான் கல்யாணமா?.. உன் லல்வே தேவையில்லன்னு சொல்லிட்டா’ -கார்த்திக் சுப்புராஜ் காதல் கதை!

கார்த்திக் சுப்புராஜூம், அவரது மனைவி சத்யா பிரேமாவும் தங்களுடைய காதல் கதையை அவள் விகடன் யூடியூப் சேனலுக்கு பகிர்ந்து இருக்கின்றனர். விட்டுச்செல்லாத அன்பு அதில் பிரேமா பேசும் போது, “கார்த்திக் சுப்புராஜூம், நானும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு எடுத்தவுடன், அவர் என்னிடம், முதல் படம் கிடைத்தவுடன் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்றார். உடனே , நீங்கள் வாழ்க்கையில் வெற்றியை தொட்ட பின்னர்தான், நான் உங்கள் வாழ்க்கைக்குள் வர வேண்டும் என்றால், அது எனக்கு தேவையில்லை. நான் அந்த கஷ்டமான பயணத்திலும், உங்களுடன் இருக்க வேண்டும். அப்போதுதான் அது அர்த்தமுள்ளதாக இருக்கும் என்று கூறினேன்.   

(2 / 6)

கார்த்திக் சுப்புராஜூம், அவரது மனைவி சத்யா பிரேமாவும் தங்களுடைய காதல் கதையை அவள் விகடன் யூடியூப் சேனலுக்கு பகிர்ந்து இருக்கின்றனர். 

விட்டுச்செல்லாத அன்பு 

அதில் பிரேமா பேசும் போது, “கார்த்திக் சுப்புராஜூம், நானும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு எடுத்தவுடன், அவர் என்னிடம், முதல் படம் கிடைத்தவுடன் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்றார். உடனே , நீங்கள் வாழ்க்கையில் வெற்றியை தொட்ட பின்னர்தான், நான் உங்கள் வாழ்க்கைக்குள் வர வேண்டும் என்றால், அது எனக்கு தேவையில்லை. நான் அந்த கஷ்டமான பயணத்திலும், உங்களுடன் இருக்க வேண்டும். அப்போதுதான் அது அர்த்தமுள்ளதாக இருக்கும் என்று கூறினேன்.

 

 

 

கார்த்திக் சுப்புராஜ்: நான் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். சினிமாவின் மீது உள்ள காதலால், அந்த வேலையை விட்டுவிட்டு, நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் பங்கேற்று, போட்டியில் கலந்து கொண்டேன். அதில் இயக்கிய படங்களுக்காக, நான் சம்பாதித்த அனைத்து பணத்தையும் செலவு செய்தேன். நாளைய இயக்குநர் இறுதிபோட்டி வரும் போதுதான் நாங்கள் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தோம். இறுதி போட்டிக்கு அடுத்த நாள் எங்களுக்கு நிச்சயதார்த்தம் நடப்பதாக இருந்தது. டிசம்பரில் கல்யாணம் என்று முடிவு செய்யப்பட்டிருந்தது இந்த சமயத்தில் தான் இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில், ஒரு படம் தொடங்குவதாக இருந்தது. அந்த படத்தில் நான் அசோசியேட் இயக்குநராக வேலை பார்க்கிறேன் என்று கூறியிருந்தேன். அந்தப்படமும் டிசம்பரில் தொடங்குவதாக இருந்தது. இந்த நிலையில் மணிகண்டன் என்னை அழைத்து, திருமணம் முடிந்த உடனே அசோசியேட்டாக வேலை பார்க்க முடியாது என்றார். இதனையடுத்து கல்யாணத்தை நான் அக்டோபர் மாதத்திற்கு கொண்டு வந்தேன். ஆனால், அந்தப்படம் நடக்கவில்லை.  

(3 / 6)

கார்த்திக் சுப்புராஜ்: நான் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். சினிமாவின் மீது உள்ள காதலால், அந்த வேலையை விட்டுவிட்டு, நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் பங்கேற்று, போட்டியில் கலந்து கொண்டேன். அதில் இயக்கிய படங்களுக்காக, நான் சம்பாதித்த அனைத்து பணத்தையும் செலவு செய்தேன். நாளைய இயக்குநர் இறுதிபோட்டி வரும் போதுதான் நாங்கள் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தோம். இறுதி போட்டிக்கு அடுத்த நாள் எங்களுக்கு நிச்சயதார்த்தம் நடப்பதாக இருந்தது. டிசம்பரில் கல்யாணம் என்று முடிவு செய்யப்பட்டிருந்தது

 

இந்த சமயத்தில் தான் இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில், ஒரு படம் தொடங்குவதாக இருந்தது. அந்த படத்தில் நான் அசோசியேட் இயக்குநராக வேலை பார்க்கிறேன் என்று கூறியிருந்தேன். அந்தப்படமும் டிசம்பரில் தொடங்குவதாக இருந்தது. இந்த நிலையில் மணிகண்டன் என்னை அழைத்து, திருமணம் முடிந்த உடனே அசோசியேட்டாக வேலை பார்க்க முடியாது என்றார். இதனையடுத்து கல்யாணத்தை நான் அக்டோபர் மாதத்திற்கு கொண்டு வந்தேன். ஆனால், அந்தப்படம் நடக்கவில்லை. 

 

அவ்வளவு கஷ்டங்கள்கல்யாணம் முடிந்து விட்டது. என்னுடைய மனதில் நாளைய இயக்குநர் மூலம் கிடைத்த புகழ் காரணமாக, உடனே தயாரிப்பாளர் கிடைப்பார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் எனக்கு தயாரிப்பாளர் கிடைக்கவில்லை. பிரேமா ஒரு மருத்துவமனையில் பல் மருத்துவராக வேலை பார்த்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில், இருவரும் சென்னைக்கு வந்து ஒரு சிங்கிள் பெட்ரூம் அபார்ட்மெண்ட் எடுத்து, வாடகைக்கு இருந்தோம். தினமும் காலை நான் அவளை மருத்துவமனையில் கொண்டு விட்டுவிட்டு, நான் தயாரிப்பாளரை  தேடிச் செல்வேன்.  

(4 / 6)

அவ்வளவு கஷ்டங்கள்

கல்யாணம் முடிந்து விட்டது. என்னுடைய மனதில் நாளைய இயக்குநர் மூலம் கிடைத்த புகழ் காரணமாக, உடனே தயாரிப்பாளர் கிடைப்பார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் எனக்கு தயாரிப்பாளர் கிடைக்கவில்லை. பிரேமா ஒரு மருத்துவமனையில் பல் மருத்துவராக வேலை பார்த்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில், இருவரும் சென்னைக்கு வந்து ஒரு சிங்கிள் பெட்ரூம் அபார்ட்மெண்ட் எடுத்து, வாடகைக்கு இருந்தோம். தினமும் காலை நான் அவளை மருத்துவமனையில் கொண்டு விட்டுவிட்டு, நான் தயாரிப்பாளரை  தேடிச் செல்வேன்.

 

 

அந்த சமயத்தில், நான் நிறைய பிரச்சனைகளை சந்தித்தேன். ஆனால் அதை எல்லாம் இப்போது பார்ப்பதற்கு அழகாக, சந்தோஷமாக இருக்கிறது. இறைவி திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யா தன்னுடைய படம் ரிலீஸ் ஆகாத காரணத்தினால் மன அழுத்தத்திற்குள் சென்று மதுவுக்கு அடிமையாக இருப்பார். அதேபோல, நானும் கஷ்டமான தருணங்களில் சரக்கு அடித்து விட்டு மன அழுத்தத்திற்குள் சென்றிருக்கிறேன்  

(5 / 6)

அந்த சமயத்தில், நான் நிறைய பிரச்சனைகளை சந்தித்தேன். ஆனால் அதை எல்லாம் இப்போது பார்ப்பதற்கு அழகாக, சந்தோஷமாக இருக்கிறது. இறைவி திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யா தன்னுடைய படம் ரிலீஸ் ஆகாத காரணத்தினால் மன அழுத்தத்திற்குள் சென்று மதுவுக்கு அடிமையாக இருப்பார். அதேபோல, நானும் கஷ்டமான தருணங்களில் சரக்கு அடித்து விட்டு மன அழுத்தத்திற்குள் சென்றிருக்கிறேன் 

 

நல்லதிற்காக தான் நடக்கிறதுபிரேமா: இவருக்கு படங்கள் கிடைக்காத பொழுது மிகவும் மன அழுத்தத்துடன் வருவார். அவரை சாந்தப்படுத்துவது மட்டும்தான் என்னுடைய வேலையாக இருந்தது. அது தவிர மற்றபடி எனக்கு வேற எந்த கஷ்டமும், பெரிய கஷ்டமாக தெரியவில்லை. காரணம் எல்லாமே இங்கு ஒரு காரணத்திற்காக தான் நடக்கிறது. எல்லாமே நல்லதிற்காக தான் நடக்கிறது என்பது என்னுடைய நம்பிக்கை” என்று பேசினார். 

(6 / 6)

நல்லதிற்காக தான் நடக்கிறது

பிரேமா: இவருக்கு படங்கள் கிடைக்காத பொழுது மிகவும் மன அழுத்தத்துடன் வருவார். அவரை சாந்தப்படுத்துவது மட்டும்தான் என்னுடைய வேலையாக இருந்தது. அது தவிர மற்றபடி எனக்கு வேற எந்த கஷ்டமும், பெரிய கஷ்டமாக தெரியவில்லை. காரணம் எல்லாமே இங்கு ஒரு காரணத்திற்காக தான் நடக்கிறது. எல்லாமே நல்லதிற்காக தான் நடக்கிறது என்பது என்னுடைய நம்பிக்கை” என்று பேசினார். 

மற்ற கேலரிக்கள்