Tamil Movies: காலத்தால் அழியாத வசந்த மாளிகை.. உப்பு இல்லாமல் சாப்பிட்டு உடம்பை தயார் செய்த சூர்யா
Tamil Movies: தமிழ் சினிமாவில் இன்றைய ( செப் 29 ) நாளில் காலத்தால் அழியாத வசந்த மாளிகை, கஜினி உள்ளிட்ட சில படங்கள் வெளியாகி இருந்தது.
வசந்த மாளிகை
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்ற பெயரை சொன்னால் நினைவுக்கு வரும் படங்களில் ஒன்றாக இருப்பது வசந்த மாளிகை. ரெமாண்டிக் மெலே டிராமா பாணியில் உருவாகியிருக்கும் அந்த படம் இத்தனைக்கும் ரீமேக் என்றாலும் ஒரிஜினலை விட அதிக நாள்கள் ஓடிய படமாகவே ரசிகர்களின் இதயத்துக்கு நெருக்கமான படமாகமாக மாறியதற்கு சிவாஜி கணேசனின் தனித்துவமான நடிப்பு திறமை முக்கிய காரணங்களில் ஒன்றாக அமைந்தது.
தெலுங்கில் 1971இல் வெளியாகி ஹிட்டடித்த பிரேம நகர் என்ற படத்தை தமிழில் ரீமேக் செய்தனர். இதில் சிவாஜி கணேசன் - ஜெயலலிதா நடிப்பதாக இருந்தது. ஆனால், தாயாரின் இறப்பு காரணமாக ஜெயலலிதா கடைசி நேரத்தில் நடிக்க முடியாமல் போனது. அந்த கதாபாத்திரத்தில் தெலுங்கில் நடித்த வாணிஸ்ரீயை நடிக்க வைத்தார்.
தெலுங்கில் இயக்கிய பிரகாஷ் ராவ், தமிழிலிலும் இயக்கினார். ஆனால் தமிழ் தான் ஒரிஜினல் என்று கூறும் அளவுக்கு தனது அற்புத நடிப்பால் மெருகேற்றியிருந்தார் சிவாஜி கணேசன். படத்தில் சிவாஜி கணேசன் - வாணிஸ்ரீ இடையிலான காதல், அன்பு, பாசம் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதமாக இருந்த எமோஷனல் காட்சிகள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து கிளாப்ஸ்களை அள்ளின. இந்த படம் வெளியாகி இன்றுடன் 52 ஆண்டுகள் ஆகிறது.
கருணை உள்ளம்
‘கருணையினால் அல்ல’ நாவலை தழுவி உருவாக்கிய படம் ‘கருணை உள்ளம்’. ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி.எம். சவுந்தரராஜன்,
ஸ்ரீகாந்த், கே.ஆர்.விஜயா, சுகுமாரி, விஜயகுமார், சோ நடித்தனர். பழம்பெரும் தயாரிப்பாளர் ஆர்.கல்யாணராமன் தயாரித்த படம். படம் வியாபாரம் ஆகாததால் சென்னையில் ரிலீஸ் ஆகவில்லை.
கஜினி
2005 ஆம் ஆண்டு சூர்யா, அசின், நயன்தாராநடிப்பில் வெளியான கஜினி திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியான கஜினி திரைப்படம் அங்கும் சூப்பர் ஹிட்டானது. இதைத்தொடர்ந்து இந்தப் படம் இந்தியில் ஆமிர்கான் நடிப்பில் அதே பெயரில் 2008ஆம் ஆண்டில் ரீமேக் செய்யப்பட்டது. இந்திப் பதிப்பிலும் அசின் கதாநாயகியாக நடித்தார்.
கஜினி படத்தின் வெற்றிக்கு பின்னர் சூர்யாவுடன், நடிகர் மாதவன் உரையாடியது தொடர்பாக பிரபல சினிமா இணையத்தளம் குறிப்பிட்டிருப்பதாவது: " கஜினி படத்தின் கதையை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் என்னிடம் சொன்னார். படத்தின் கதை, குறிப்பாக இரண்டாம் பாதியில் என்னை இணைத்துக்கொள்ளும் விதமாக இல்லாத காரணத்தால் நிராகரித்தேன். பின்னர் அந்தக் கதை உங்களிடம் வந்தது பற்றி அறிந்தேன். படத்தில் உங்களது நடிப்பை பார்த்து மிகவும் சந்தோஷபட்டேன்.
உங்களது நடிப்பு திறமை காக்க காக்க படத்தில் சிறப்பாக இருந்தது. பின்னர் கஜினி சரியான நபருக்குதான் சென்றுள்ளது என்பதை உணரும் விதமாக சிறப்பாக நடித்து நீங்கள் நிருபித்தீர்கள்.
கஜினி படத்தின் வெற்றி மிகப் பெரிய விஷயம். இந்தப் படத்தில் நடிப்பதற்கு சிக்ஸ் பேக் உடல் அமைப்பை பெற நீங்கள் கடினமான முயற்சித்ததை நேரடியாக பார்த்து மிகவும் வியந்துபோனேன்.
சிக்ஸ் பேக்குக்கு தகுந்த உடல்வாகு பெறுவதற்கு நீங்கள் ஒரு வாரம் வரை உப்பு சேர்க்காமல் இருந்தது எனக்கு நினைவு இருக்கிறது. அப்போது, ஒரு கதாபாத்திரத்துக்காக இந்த அளவு உழைப்பை போடுகிறோமா என என்னை நானே கேள்வி கேட்டுக்கொண்டேன். எனது சினிமா வாழ்க்கையிலும், நான் நடித்த படங்களுக்கும் போதிய அளவு நியாயம் செய்யவில்லை என்பதை இப்போது உணர்கிறேன். உங்களை நான் ஒரு உதாரணமாகவே நான் வைத்துள்ளேன்" என்று கூறியுள்ளார்.
டாபிக்ஸ்