Parhiban: எவ்வளவு ட்ரை பண்ணினாலும் நாட்டாமை பண்ண மாட்டேன்! கரார் காட்டிய பார்த்திபன்
Parthiban: தமிழ் சினிமா வரலாற்றில் தவிர்க்க முடியாத வெற்றிப் படமாக அமைந்த நாட்டாமை திரைப்படத்தில் நடிக்க முடியாது என இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் கராராக கூறியுள்ளார். இதற்காக அவர் கூறிய காரணங்களை இங்கு காணலாம்.

தமிழ் திரையுலகில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்- சரத்குமார், விஜயகுமாரின் கூட்டணியில் 1994ம் ஆண்டு வெளியான திரைப்படம் நாட்டாமை. சினிமா காட்சிகள், பாடல்கள் என படம் மக்களில் ஏகோபித்த ஆதரவைப் பெற்று மாபெரும் வெற்றி பெற்றதுடன் வசூலிலும் சாதனை படைத்தது.
இந்தத் திரைப்படத்தில் சரத்குமார் கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் முதலில் அணுகியது நடிகரும் இயக்குநருமான பார்த்திபனைத் தான். ஆனால் அவர் அந்தப் படத்தில் நடிக்க தன்னால் முடியாது என திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதற்கான காரணம் குறித்து அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
அந்தப் பேட்டியில், தமிழில் சிறிய பட்ஜெட்டில் எடுத்து வசூலை வாரி குவித்த நாட்டாமை படத்தை இன்றும் மக்களால் மறக்க முடியாது. இந்தப் படத்திற்கு ஈரோ சௌந்தர் கதை எழுதியிருந்தார். கே.எஸ்.ரவிக்குமார் படத்தை இயக்கினார். இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்குமாறு முதலில் கே.எஸ்,ரவிக்குமார் என்னிடம் கேட்டார். பின் படத்தின் கதையையும் விளக்கி கூறினார்.