Parthiban: ‘அவ என் மேல வச்ச காதல் அவ்வளவு.. சீதாவ அப்பவே போக விட்ருக்கணும்; முட்டாளா இருந்துட்டேன் - பார்த்திபன்
Parthiban: “சாதரணமாக ஆளாக இருந்த பொழுது, நீ பெரிய ஆளாக வருவாய்.. முதல் படத்திலேயே நீ வீடு, பங்களா உள்ளிட்டவை வாங்குவாய் என்று ஜோசியம் சொன்னது. அந்த ஜோசியம்தான் அந்த காதல். அது கொடுத்த உத்வேகம், உலகத்தில் எங்கிருந்தும் எனக்கு கிடைத்ததில்லை. - பார்த்திபன்

பிரபல நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் தனக்கும், சீதாவிற்கும் இடையே இருந்த உறவு குறித்து பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசி இருக்கிறார்.
அதில் அவர் பேசும் போது, “என்னுடைய அம்மா பத்மாவதியின் பிரதிபலிப்புதான், என்னுடைய முக்கால்வாசி என்று சொல்லலாம். என்னுடைய குணங்களில் பலவை அவருடையதுதான். அப்பாவிடம் இருந்து தோரணை, நேரத்திற்கு வருவது உள்ளிட்ட விஷயங்கள் என்னுள் வந்து விட்டன.
சீதா காட்டிய காதல்
சீதாவின் உடைய காதலை பற்றி பேசும் போது, "எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. அதில் ஒன்று என்னுடைய திருமணமும்.. நான் காதலை முதன் முதலில் அதிகமாக உணர்ந்தது சீதாவிடம் இருந்துதான். அந்த காதல் எப்படி இருந்தது என்றால், நான் மிகவும் சாதாரணமாக ஆளாக இருந்த பொழுது, நீ பெரிய ஆளாக வருவாய்.. முதல் படத்திலேயே நீ வீடு, பங்களா உள்ளிட்டவை வாங்குவாய் என்று ஜோசியம் சொன்னது. அந்த ஜோசியம்தான் அந்த காதல். அது கொடுத்த உத்வேகம், உலகத்தில் எங்கிருந்தும் எனக்கு கிடைத்ததில்லை. அதன் மூலமாக நடந்த எல்லா விஷயங்களுமே எனக்கு சந்தோஷமாகத்தான் இருந்தது.இந்த நேரத்தில் நான் எதைப் பற்றியும் பொய் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது என்று நினைக்கிறேன்.காரணம், காதலையும் கடந்து விட்டோம். பொய்யையும் கடந்து விட்டோம்.