Rajinikanth: ‘சகுனிகள் மத்தியில நியாயவாதியா இருந்தா.. காசு சாமி இருந்தா எல்லா ஆசாமியும் ஆமா சாமிதான்!’ - ரஜினிகாந்த்-superstar rajinikanth latest speech at amitabh bachchan fahadh faasil anirudh tj gnanavel vettaiyan audio launch - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rajinikanth: ‘சகுனிகள் மத்தியில நியாயவாதியா இருந்தா.. காசு சாமி இருந்தா எல்லா ஆசாமியும் ஆமா சாமிதான்!’ - ரஜினிகாந்த்

Rajinikanth: ‘சகுனிகள் மத்தியில நியாயவாதியா இருந்தா.. காசு சாமி இருந்தா எல்லா ஆசாமியும் ஆமா சாமிதான்!’ - ரஜினிகாந்த்

Kalyani Pandiyan S HT Tamil
Sep 21, 2024 10:09 AM IST

Rajinikanth: “சகுனிகளே இருக்கக்கூடிய இந்த சமுதாயத்தில, நீ நியாயவாதியா இருந்தா பொழைக்கிறது ரொம்ப ரொம்ப கஷ்டம். அதனால சாணக்கியத்தனமும் வேணும். சாமர்த்தியமும் வேணும்.” - ரஜினிகாந்த் அனல் பேச்சு!

Rajinikanth: ‘சகுனிகள் மத்தியில நியாயவாதியா இருந்தா.. காசு சாமி இருந்தா எல்லா ஆசாமியும் ஆமா சாமிதான்!’ - ரஜினிகாந்த்
Rajinikanth: ‘சகுனிகள் மத்தியில நியாயவாதியா இருந்தா.. காசு சாமி இருந்தா எல்லா ஆசாமியும் ஆமா சாமிதான்!’ - ரஜினிகாந்த்

நல்ல இயக்குநர்கள் கிடைக்கிறது கஷ்டமா இருக்கு

 “ கடைசியா நேரு உள் விளையாட்டு அரங்கத்துல என்னோட  ‘ஜெயிலர்’ (முழு நீளப்படம்) படத்தோட ஆடியோ லான்ச் நடந்துச்சு அதுக்கப்புறம் இப்பதான் உங்க எல்லாத்தையும் நான் பார்க்கிறேன். இது நான் முழுமையா நடிச்சிருக்கிற படம். ஒரு நடிகருக்கோ, ஒரு இயக்குநருக்கோ, அவர் இயக்கிய ஒரு படம் தோத்துப் போச்சுன்னா, அடுத்த படம் ஹிட் கொடுக்கிற வரைக்கும் அவங்களால நிம்மதியா இருக்கவே முடியாது. அவ்வளவு டென்ஷனா இருக்கும். அவ்வளவு மன உளைச்சலா இருக்கும். அதே மாதிரிதான் ஒரு பெரிய ஹிட் படம் கொடுக்கும் போதும். அப்பவும் அதே மாதிரியான டென்ஷன் இருக்கும். 

எப்படின்னு சொன்னா, இவ்வளவு நிமிஷத்துக்குள்ள இவ்வளவு தூரம் ஓடி நாம ஒரு ரெக்கார்டு செஞ்சுட்டோம்னா, அடுத்த முறை அந்த ரெக்கார்ட விட நாம அதிகமான ஓடணும். அப்படி இல்லன்னா கூட, அந்த ரெக்கார்டுக்கு சமமாவாது நம்ம ஓட்டம் இருக்கணும். அப்படி இல்லன்னா, நம்மள ஃபார்ம்ல இல்லன்னு சொல்லிடுவாங்க. படம் எடுக்கும் எல்லாருமே படம் நல்லா போகணும்தான் நினைப்பாங்க. 

ஆனா, சில சமயங்கள்ல ஒரு மேஜிக் நடக்கும். படம் நாம எதிர்பார்க்கிறதை விட பெரிய ஹிட் ஆயிடும். அது எப்படின்னு நமக்கு தெரியாது.  ‘ஜெயிலர்’ ரொம்ப பெரிய ஹிட்டானதுக்கு அப்புறமா, அடுத்த படம் என்ன பண்றதுன்னு யோசனை பண்ணிக்கிட்டு இருந்தேன். படம் தயாரிக்கிறதுக்கு தயாரிப்பாளர்கள் ரெடியா இருக்காங்க. ஆனா நல்ல இயக்குநர்கள் கிடைக்கிறது கஷ்டமா இருக்கு… வெற்றிமாறன் உள்ளிட்ட நல்ல இயக்குநர்கள் சினிமால இருக்காங்கதான். ஆனா ஒரு ஆக்ஷன் மாஸ் ஹீரோவுக்கு படம் பண்ற இயக்குநர்கள் கிடைக்கிறது கஷ்டமா இருக்கு. 

பிரம்மிப்பா இருந்துச்சு.

எம்ஜிஆர், சிவாஜி காலத்துல கதை, திரைக்கதை வேலைகள எழுத்தாளர் பாத்துப்பார். டைரஷன இயக்குநர் பார்ப்பார். ஆனா இப்ப அப்படி இல்ல. கதை,திரைக்கதை, வசனம் இயக்கம்னு எல்லாத்தையும் ஒருத்தரே பண்றாங்க. அவங்க ரொம்ப காலமா மனசுல தேக்கி வச்ச கதைய, முதல் படமா பண்ணுவாங்க. அந்த படம் ரொம்ப பெரிய ஹிட் ஆயிடும். 

அடுத்த படமும் ஹிட் கொடுத்துருவாங்க. அதுக்கப்புறம் அவங்க மேல, மக்கள் வச்சிருக்குற எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யறது ரொம்ப கஷ்டமான வேலை. இப்பல்லாம் ஒரு படத்துல மாஸ் ஹீரோ மட்டும் இருந்தா படம் ஹிட்டாகும்ன்னு சொல்ல முடியாது. படம் தயாரிக்கிற நிறுவனமும், படத்தை இயக்குநர இயக்குநரையும் வச்சுதான் அந்த படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கும்.

சௌந்தர்யாதான்  ‘ஜெய் பீம்’ படத்த பார்க்க சொன்னாங்க. அந்த படத்த பார்த்த போது எனக்கு ரொம்ப பிரம்மிப்பா இருந்துச்சு. காரணம் என்னன்னா, அந்த படம் ஞானவேலுக்கு அது இரண்டாவது படம். இதுக்கும் அவர் வேற யார்கிட்டயும் உதவி இயக்குனரா வேலை செஞ்சது கிடையாது அந்த கண்ணோட்டத்தோட மறுபடியும் அந்த படத்தை பார்த்தேன் டெக்னிக்கலா அந்த படத்துல எந்த தப்பையும் நம்ம கண்டுபிடிக்க முடியாது. அதே மாதிரி, இரண்டாவது படத்துல, அவ்வளவு தேர்ந்த நடிப்பை அந்த படத்தில் நடிச்ச நடிகர்கள்ட்ட இருந்து அவர் வாங்கிருப்பாரு. 

லோகேஷ் கனகராஜ் மாதிரி பண்ண மாட்டேன் 

அதுகப்புறமா அவர் கூட சேர்ந்து வேலை செய்யலாம்னு முடிவு செஞ்சு ஒன் லைன் கேட்டேன். அவர் சொன்ன லைன் ரொம்ப பிடிச்சது. நம்மள நம்பி கோடி கோடியா கொட்றாங்க. அதனால உங்க கதையில எனக்கான கமர்சியல் எலிமெண்ட்ஸ்  இருக்குற மாறி பாத்துக்கோங்கன்னு சொல்லி அனுப்பி, கதைய டெவலப் பண்ணா சொன்னேன். அப்படியே பண்ணி எடுத்துட்டு வந்தார். பத்து நாள் டைம் எடுத்துகிட்டார் திரும்பவும் என்ன வந்து பார்த்தார். அப்ப அவர் என்கிட்ட நெல்சன் மாதிரியோ, லோகேஷ் கனகராஜ் மாரியோ உங்கள நான் ஸ்டைலா காட்ட மாட்டேன். என்னுடைய கதையில, உங்களோட ஸ்டைல நான் பயன்படுத்தி காட்றேன்னு சொன்னார். நானும் அவர்கிட்ட எனக்கும் அதான் வேணும்னு சொன்னேன். 

முந்தைய படத்துல கதிர் அவரோட கேமராமேனா வொர்க் பண்ணி இருந்தார். இந்த படத்துலையும் அவரே வேணும்னு கேட்டார்.  அவர் ஒரு பாதி பாலு மகேந்திரா மாதிரி. செட்ல நானும், ஞானவேலும் பேசும் பொழுது, ஏதாவது சந்தேகம் வந்துச்சுன்னா கதிர்ட்டதான் கேப்போம். சண்டை இயக்கத்துக்கு அன்பறிவு வேணும்னு கேட்டாரு.. உண்மையிலே அவங்க ரொம்ப பிஸி. ரொம்ப காஸ்ட்லியும் கூட ஆனாலும் அவங்களையும் வரவச்சோம். அப்புறமா எனக்கு அனிருத் தான் 200% வேணும்னு சொன்னார். உடனே நான் அவர்கிட்ட உங்களுக்கு 200% தான் அனிருத் வேணும் ஆனா எனக்கு 1000% அனிதான் வேணும்னு சொன்னேன். 

அமிதாப் வேணும்னு கேட்டார்

நடிகர்கள் அப்படின்னு வரும் போது, இந்தப்படத்துல வர்ற சத்யதேவ் கேரக்டருக்கு, அமிதாப்பச்சன் வேணும்னு கேட்டார். உண்மையிலேயே அந்த கேரக்டர்ல இங்க யாராவது நடிக்கணும்னா, சிவாஜி சார் இருந்துருந்தா அவர்தான் பண்ணிருக்கனும். இல்ல அப்படின்னா அமிதாப் பச்சன் தான் சரியான தேர்வா இருக்கும். அவர் அப்படி சொன்ன உடனே, எனக்கு தூக்கி வாரி போட்ருச்சு. 

நானும் அமிதாப் பச்சனும் இணைஞ்சு நடிச்ச மூனு  படங்களுமே ரொம்ப பெரிய ஹிட். அதுக்கப்புறம் எங்க ரெண்டு பேரையும் சேர்த்து வச்சு படம் எடுக்க, நிறைய தயாரிப்பாளர்கள் வந்தாங்க ஆனா நாங்க ரெண்டு பேருமே ஒத்துக்கல. நான் உடனே இத நீங்க அமிதாப்பச்சன்ட கேளுங்கன்னு சொல்லிட்டேன். ரெண்டு நாள்ல பேசிட்டு வந்தவரு, அமிதாப்பச்சன் அந்த கேரக்டர்ல நடிக்கிறதுக்கு ஒத்துக்கிட்டார்ன்னு சொன்னாங்க. 

பகத் பாசில் அசாத்தியம் 

அப்புறமா வில்லனா ராணா வேணும்னு கேட்டார். படத்தில் இன்னொரு கேரக்டர் இருக்கு. அந்த மாதிரி கேரக்டர நான் எந்த படத்துலையுமே பார்த்ததும் இல்ல. கேட்டதும் இல்லை. அந்த கேரக்டருக்கு பகத் பாசில் தான் வேணும்ன்னு கேட்டார். நான் அவரோட படங்கள்ல மாமன்னனும், விக்ரமும்தான் பார்த்துருக்கேன். ரெண்டு படத்தளையுமே அவர் வில்லன் ரோல்ல தான் நடிச்சிருப்பாரு.. அப்படி நடிச்ச ஒருத்தர் இது எப்படி நடிப்பார்ன்னு எனக்கு சந்தேகம் வந்துருச்சு.  உடனே ஞானவேல் அவரோட மலையாள படங்கள பாருங்க சார்.. 

அவர் ஒரு பிரமாதமான ஆக்டர்ன்னு சொன்னார். அதுக்கு அப்புறமா அவர் கிட்ட பேசிட்டு என்கிட்ட பேசணும்ன்னு சொன்னார். அப்புறமா என்கிட்ட வந்தவர், பஹகத்துக்கு கதை ரொம்ப புடிச்சிருக்கு. காசே தரலன்னா  கூட நான் நடிக்கிறேன்னு சொல்லிட்டார். ஆனா அவர் ரொம்ப பிசியா இருக்கார். அவருக்கு ரெண்டு மாசம் டைம் கொடுத்தீங்கன்னா அவர் கமிட்மெண்ட்ஸை முடிச்சிட்டு வந்துறேன்னு சொல்றார்னு சொல்றார்னு சொன்னார். அத்தோடு நாம ரெண்டு மாசம் வெயிட் பண்ணி பண்ணலாமான்னு கேட்டார். 

லோகேஷ் கத ஒழுங்கா பண்ணல 

உடனே நான் இத என்னோட அடுத்த பட தயாரிப்பாளரான கலாநிதி மாறன்கிட்டயும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்கிட்டையும்தான் கேட்கணும்னு சொன்னேன். லோகேஷ் இத சொன்னப்போ சார் ப்ளீஸ் எடுத்துக்கோங்க அப்படின்னு சொன்னார். அப்போமே எனக்கு தெரிஞ்சு போச்சு. அவர் கூலி கதைய இன்னும் ஒழுங்கா பண்ணல அப்படின்னு.. அதுக்கு அது தான் அர்த்தம். இரண்டு மாசம் வெயிட் பண்ணி அவர உள்ள கொண்டு வந்தோம். பகத்பாசில் என்ன மாதிரியான ஒரு ஆர்ட்டிஸ்ட். இந்த மாதிரியான ஒரு நேச்சுரலான ஆக்டர் நான் பார்த்ததே இல்ல. அவர் செட்லஎங்க இருக்கார் அப்படின்னு தெரியாது ஆனா ஷூட்டிங்னா கரெக்டா அங்க வந்துட்டு டக் டக் டக்குனு பண்ணிட்டு போயிட்டே இருப்பார். அசாத்தியம்

அமிதாப் ஜி எனக்கு ரோல் மாடல் 

அமிதாப் ஜி, ஒரு கட்டத்துல ரொம்ப பெரிய கடன்ல மாட்டிக்கிட்ட்டார். அதுக்கப்புறம் அவர் அதில் இருந்து மீண்டு வர கடுமையான போராட்டத்தை சந்திச்சார்.. அவருடைய வீடு வரைக்கும் ஏலம் வந்துருச்சு.. அதுல இருந்து மீள்றதுக்கு, விளம்பரம் சின்ன சின்ன ரோல்கள் அப்படின்னு எதுக்கு கிடைச்சாலும் நடிச்சு பணம் சம்பாதிக்க ஆரம்பிச்சார். 

எல்லாருமே அவரை பார்த்து கிண்டல் பண்ணாங்க.. சிரிச்சாங்க. அப்ப அவருக்கு 64 வயசு. உடம்புல வேற நிறைய பிராபளம். ஆனாலும், ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைச்சாரு. மூணு வருஷத்துல கடன் எல்லாத்தையும் அடைச்சு முடிச்சுட்டு.. ஏலத்துக்கு வந்த அந்த வீட்டையும் வாங்கிட்டு, அதே ரோட்ல மூணு பெரிய வீடுகள வாங்கினார். அதுதான் அமிதாப் பச்சன். அதுக்குத்தான் அவருக்கு இவ்வளவு மரியாதை. 

காசு ரொம்ப ரொம்ப முக்கியம்.

அவருக்கு இப்ப 82 வயசு. இப்பவும்  ஒரு நாளைக்கு 10 மணி நேரம் வேலை செய்றார். 64 வயசுல அப்படி கீழே விழுந்து மேல வந்தார். அதுதான் லைஃப். வாழ்க்கையில சவால் வேணும்.. நம்ம தலைய மிதிக்கணும்னு நினைக்கிறவன் தலைய  நம்ம மிதிச்சு ஏறி மேல வந்துடனும். அந்த காசு, இந்த காசு இல்லைங்க. அந்த சாமி, இந்த சாமி இல்லைங்க.. காசு சாமி தான். காசு சாமி நம்ம கிட்ட இருந்தா எல்லா ஆசாமியும் ஆமா சாமி தான். அதுக்காக காசுதான் வாழ்க்கைன்னு சொல்லல. 

காசு ஆக்சிஜன் மாதிரி.. நம்ம வாழ்றதுக்கு காசு ரொம்ப ரொம்ப முக்கியம். காலம் ஒரே நைட்ல நம்மள எங்கேயோ கொண்டு போயிரும். அதே போல  ஒரே நைட்ல கீழ போட்டு தர மட்டம் ஆகிரும்.  நம்ம எவ்வளவு கவனமா இருந்தாலும், நம்ம மூளைய எவ்வளவுதான் கச்சிதமா பயன்படுத்தினாலும் இடி இடிக்கிற மாதிரி அது நடந்து முடிஞ்சிடும் அதனால ரொம்ப ஆடக்கூடாது. காச ஒரே இடத்துல வச்சா கெட்டுப் போயிடும். அது ஒரு ஆறு மாதிரி போய்கிட்டே இருக்கணும். அத நாம பயன்படுத்தணும்.

அனி என் புள்ள 

அனி அப்ப சின்ன பையன்.  ‘மன்னன்’  பட ஷூட்டிங்ல அவர அங்க இருந்த ஒரு சிம்மாசனத்துல வச்சு போட்டோ எடுத்தேன். ஆனா இன்னைக்கு அவர் இசை அப்படிங்கிற சிம்மாசனத்துல உட்கார்ந்து இருக்கிறார். இங்க அவர் பாடுன 12 நிமிஷத்தில அரங்கத்தையே தூள் கிளப்பிட்டார். இத இரண்டு மணி நேரம் கேட்டா எப்படி இருக்கும். அனி இசை நிகழ்ச்சின்னு சொன்னா, அரை மணி நேரத்துல அவர் இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் எல்லாம் வித்து தீந்துரும். இப்ப கூட அமெரிக்கா போயிருந்தாங்க. ஒரு நிகழ்ச்சியில கமிட் ஆகிட்டாங்க.  

அவருக்கு 102. டிகிரி குளிர் காய்ச்சல். அங்க 10 ஆயிரம் டிக்கெட்கள் வித்துருச்சு. நிகழ்ச்சிய எப்படி கேன்சல் பண்ண முடியும். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் அந்த நிகழ்ச்சி நடத்தி கஷ்டப்பட்டு நடத்தி முடிச்சாங்க. அத முடிச்சிட்டு இங்க வந்த உடனே ஜூனியர் என்டிஆர் உடைய தேவார வேலைகளை கவனிக்க ஆரம்பிச்சாங்க.  உழைக்கிற நேரத்துலதான் உழைக்கணும் காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ளணும் அனிருத் கிட்ட இருக்கக்கூடிய இன்னொரு குவாலிட்டி படத்தை பாத்துட்டு. இந்த படம் ஓடும் ஓடாதுங்கிற கரெக்ட்டா சொல்லிருவார். அவர் எனக்கு ஒரு பிள்ளை மாதிரி அவருடைய ஆஃபீஸ் போனா 10 அடில என்னோட போட்டோ தான் வச்சிருக்கார். 

சூர்யாவிற்கு பதில் 

இந்தப் படம் யாருக்காக ஹிட் ஆகுதோ இல்லையோ ஞானவேலுக்காக ஹிட் ஆகணும். காரணம் என்ன அப்படினா சமூகத்துக்கு தேவையான, மக்களுக்கு உபயோகப்படுகிற கருத்தை அவர் சொல்றார். எப்போ நாங்க படத்துக்கு பூஜை போட்டமோ, அப்பவே படம் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ்ன்னு முடிவு பண்ணிட்டோம். ஆனா லைக்கா தரப்புல நிறைய படங்கள் இருந்ததுனால,  அதை அதிகாரப்பூர்வமா நாங்க அறிவிக்கல. எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம் ஞானவேல் என்கிட்ட ஒரு நாள் பேசனும்ணு சொன்னார். என்கிட்ட வந்த அவர் நீங்க ஒரு என்ன மாதிரியான ஆக்டர் தெரியுமா சார். ‘தளபதி’ எல்லாம் நான் அத்தனை முறை பார்த்திருக்கேன். 

நீங்க அந்த மாதிரியான ஒரு ஆக்டிங்கை இந்த படத்துல கொடுக்கணும்னா  சொன்னார். அதைக் கேட்ட உடனே நீங்க தளபதில ஓகே ஆன டேக்கை தான் பார்த்தீங்க. அதுக்கு முன்னாடி கிட்டத்தட்ட 15, 20 டேக்குகள் போச்சு.  ‘முள்ளும் மலரும்’ படத்துல மகேந்திரன் ஓகே சொன்னாலும், பாலு மகேந்திரா ஒன் மோர் சொல்லி நடிக்க வச்சு என்ன கிழி கிழின்னு கிழிப்பாங்க. காளி படத்த பார்த்தாலே உங்களுக்கு தெரியும். அதுல மகேந்திரனுடைய சாயல் அப்படியே இருக்கும்.  ‘புவனா ஒரு கேள்விக்குறி’ படத்தோட  ஷூட்டிங் போனப்ப கிட்டத்தட்ட டயலாக் மட்டுமே 11 பக்கம் இருந்துச்சு. நான் அந்த படமே வேணாம்னு சொல்லிட்டு கிளம்பிட்டேன் அதுக்கப்புறம் எஸ்பி முத்துராமன் என்ன  பேசி, சமாதானப்படுத்தி அந்த படத்துல நடிக்க வச்சார். 

நல்ல நடிகன் அப்படின்னு சொன்னது ஏதோ அதுவா நடந்து போச்சு.  அத அப்படியே சிரிச்சு நான் மெயின்டெயின் பண்ணிட்டு இருக்கேன். நான் அதைப்பற்றி ரொம்ப பேசினா கதை கந்தல் ஆயிடும்.  ‘தளபதி’  ‘முள்ளும் மலரும்’  பாதையில நான் போனா நம்ம கதை கந்தல்தான். நல்ல வேளையா  ‘போக்கிரி ராஜா’  ‘முரட்டுக்காளை’ படங்கள் நம்ம ட்ராக்க சேஞ்ச் பண்ணிடுச்சு. நான் ஸ்டைலா சில விஷயங்கள் பண்றேன். அதுவே நல்லா போயிட்டு இருக்கு. அப்புறம் ஏன் அதுல போய் நம்ம கஷ்டப்படணும். அதனால என்னை நடிக்க வைக்கிறேன்ன்னு சொல்லி எதையும் பண்ணாதீங்க. சகுனிகளே இருக்கக்கூடிய இந்த சமுதாயத்தில, நீ நியாயவாதியா இருந்தா பொழைக்கிறது ரொம்ப ரொம்ப கஷ்டம். அதனால சாணக்கியத்தனமும் வேணும். சாமர்த்தியமும் வேணும். அப்பதான் நீ மேல வர முடியும். அவர்கிட்ட இது ரெண்டுமே இருக்கு. அவர் பொழச்சுப்பாரு. நம்ம கெட்டவங்ககிட்ட தான் நல்லதே கத்துகிறோம்.” இவ்வாறு அவர் நிகழ்ச்சியில் பேசினார்

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.