தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Nani Next Nani 32 Announced Sujeeth To Write And Direct The Film. Details

Nani 32: வைலன்ஸ்.. வைலன்ஸ்.. ஆக்‌ஷன் மோடு ஆன்.. நானி 32 அறிவிப்பு - படத்தின் ஒன் லைன் என்ன தெரியுமா?

Kalyani Pandiyan S HT Tamil
Feb 25, 2024 12:46 PM IST

நடிகர் நானியின் பிறந்த நாள் கொண்டாட்டமாக இப்படத்தின் டீசரை வெளியிட்டு, ரசிகர்களை மகிழ்வித்த தயாரிப்பு நிறுவனம், இன்னொரு செய்தியையும் தற்போது அறிவித்திருக்கிறது.

நானி 32
நானி 32

ட்ரெண்டிங் செய்திகள்

நடிகர் நானியின் பிறந்த நாள் கொண்டாட்டமாக இப்படத்தின் டீசரை வெளியிட்டு, ரசிகர்களை மகிழ்வித்த தயாரிப்பு நிறுவனம், இன்னொரு செய்தியையும் தற்போது அறிவித்திருக்கிறது.

ஆம், நானியின் 32 ஆவது படத்தையும் டி.வி.வி என்டர்டெயின்மென்ட் பேனரே தயாரிக்க இருக்கிறது. DVV தனய்யா மற்றும் கல்யாண் தாசரி இணைந்து தயாரிக்கும் இந்த புதிய படத்தை இயக்குநர் சுஜீத் இயக்கவுள்ளார்.

தற்போது படப்பிடிப்பில் இருக்கும் பவர் ஸ்டார் பவன் கல்யாணுடனான "ஓஜி" படத்தை இயக்கி வரும் சுஜீத், தனது அடுத்த படத்தில் நானியுடன் இணையவுள்ளார். சூர்யாவின் சனிக்கிழமை படப்பிடிப்பு முடிந்தவுடன், நானி 32 படத்தின் பணிகள் துவங்கும்.

இது குறித்து நடிகர் நானி வலைத்தளத்தில் "இது முழுமையான சுஜீத் படம். பவருக்குப் பிறகு... இந்த லவ்வரிடம் வருவார் 😉♥️ #Nani32" என்று மகிழ்ச்சியாக பகிர்ந்து இருக்கிறார்.

அதிரடியான ஆக்சன் படமாக உருவாகவுள்ள இப்படத்தின் அறிவிப்பு, ஒரு அழகான கான்செப்ட் வீடியோ மூலம் வெளியிடப்பட்டது.

ஒரு வன்முறையாளன் அகிம்சையாளனாக மாறினால், அவனது உலகம் தலைகீழாக மாறும். இதுதான் படத்தின் அடிப்படைக் கதை. இந்தத்திரைப்படம் 2025 இல் வெளியாக இருக்கிறது. இத்திரைப்படத்தின் மற்ற விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிட இருக்கிறார்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்