VidaaMuyarchi:தீவிர மோதலுக்குத் தயாராகுங்கள்; விடாமுயற்சி அப்டேட்: வெளியானது நடிகர்கள் சஞ்சய் சாரா, தசராதியின் மாஸ் லுக்-vidaamuyarchi stars sanjay sara and dasarathi is mass look revealed by lyca productions in kollywood news - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vidaamuyarchi:தீவிர மோதலுக்குத் தயாராகுங்கள்; விடாமுயற்சி அப்டேட்: வெளியானது நடிகர்கள் சஞ்சய் சாரா, தசராதியின் மாஸ் லுக்

VidaaMuyarchi:தீவிர மோதலுக்குத் தயாராகுங்கள்; விடாமுயற்சி அப்டேட்: வெளியானது நடிகர்கள் சஞ்சய் சாரா, தசராதியின் மாஸ் லுக்

Marimuthu M HT Tamil
Aug 20, 2024 05:16 PM IST

VidaaMuyarchi: தீவிர மோதலுக்குத் தயாராகுங்கள்; விடாமுயற்சி அப்டேட்: வெளியானது நடிகர்கள் சஞ்சய் சாரா, தசராதியின் மாஸ் லுக் குறித்த அப்டேட்டைப் பார்க்கலாம்.

VidaaMuyarchi:தீவிர மோதலுக்குத் தயாராகுங்கள்; விடாமுயற்சி அப்டேட்: வெளியானது நடிகர்கள் சஞ்சய் சாரா, தசராதியின் மாஸ் லுக்
VidaaMuyarchi:தீவிர மோதலுக்குத் தயாராகுங்கள்; விடாமுயற்சி அப்டேட்: வெளியானது நடிகர்கள் சஞ்சய் சாரா, தசராதியின் மாஸ் லுக்

ஐந்தாவது முறையாக அஜித்துடன் ஜோடி சேர்ந்த திரிஷா:

இப்படத்தில் நடிகை திரிஷா, ஜி, கிரீடம், மங்கத்தா, என்னை அறிந்தால் ஆகியப் படங்களுக்குப் பின் நடிகர் அஜித் குமாருடன் ஜோடி சேர்ந்துள்ளார். மேலும் இப்படத்தில் ரெஜினா, அர்ஜூன், ஆரவ் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்துவருகின்றனர்.

மகிழ் திருமேனி இயக்கும் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகளை அஜர்பைஜானில் படமாக்கியுள்ளார். இந்நிலையில் இப்படமானது அக்டோபர் 31ஆம் தேதி, தீபாவளியை ஒட்டி, ரிலீஸ் செய்யப்படவுள்ளதாகத் தெரிகிறது.

இந்த ‘விடாமுயற்சி’ படத்தில் அஜித் இரண்டு வேடங்களில் நடிப்பதாகவும் தகவல் வெளியாகியது. அவர் இரட்டை வேடத்தில் நடித்த எந்தவொரு படமும் இதுவரை தோல்வியைத் தழுவியது கிடையாது. குறிப்பாக, வாலி, வில்லன், வரலாறு, அட்டகாசம், பில்லா 1, அசல் ஆகியப்படங்களில் நடித்து இருந்தார்.

மேற்கூறிய அனைத்துப் படங்களும் அஜித்துக்கு நற்பெயரையும் தயாரிப்பாளருக்கு லாபத்தையும் ஈட்டித்தந்தன. அந்தவகையில் அஜித் இந்த சென்டிமென்ட் காரணமாக, விடாமுயற்சி படத்திலும் டபுள் ஆக்‌ஷனில் நடித்து இருப்பதாகத் தெரிகிறது.

ரசிகர்களை ஈர்த்த விடாமுயற்சி படத்தின் வெவ்வேறு லுக்குகள்:

சமீபத்தில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பின்போது, நடிகர் அஜித் டிரைவ் செய்யும்போது நடந்த விபத்தும், அதில் உடன்பயணித்த ஆரவ்வை காப்பாற்றும் விதமாக அஜித் நடந்துகொண்ட விதமும் பலரால் பாராட்டப்பட்டது.

அதன்பின் வெளியிடப்பட்ட ‘விடாமுயற்சி’ ஃபர்ஸ்ட் லுக்கில் தனி ஒரு நபராக அஜர்பைஜானில் ஒரு பணப்பையைத் தூக்கிக்கொண்டு, தன் சால்ட் அண்ட் பெப்பர் தலையுடன் ஸ்டைலாக நடந்துவருகிறார், அஜித். அதன்பின், காரில் வேகமாக வண்டி ஓட்டும் படமும் மார்பில் கை வைத்த நிலையில் இருந்த படத்தினையும் கொலாஜ் செய்து, செகண்ட் லுக்காக வெளியிட்டது படக்குழு. இந்நிலையில், நடிகை திரிஷாவுடன் இளமையான தோற்றத்தில் இருக்கும் படத்தை மூன்றாவது லுக்காக வெளியிட்டுள்ளது, விடாமுயற்சி படக்குழு. அதில் அஜித் கண்ணாடி அணிந்து, கருகரு முடியுடன், திரிஷாவுடன் நிற்கும் சிரித்த மூன்றாவது லுக்கினை சில நாட்களுக்கு முன் படக்குழு வெளியிட்டது.

அதன்பின், விடாமுயற்சி படத்தில் நடிக்கும் ரெஜினா கசாண்ட்ராவின் புதிய லுக்கை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. அந்த லுக்கில், தனியாக சாலையில் நடந்து வரும் ரெஜினாவின் பின்புலத்தில், அஜித்தும் திரிஷாவும் இருப்பதுபோல் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. மேலும், டேக் லைன் ஆக வீரத்திற்கு எல்லையே இல்லை எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

வெளியான விடாமுயற்சி படத்தில் நடித்தவர்களின் புதிய லுக்:

தற்போது வெளியிடப்பட்ட விடாமுயற்சி படத்தின் புதிய தோற்றத்தில், நடிகர் கணேஷ் சரவணன் என்கிற சஞ்சய் சாராவின் புதிய லுக்கும், நடிகர் தசராதியின் புதிய லுக்கும் இணைந்துள்ளது.

இதுதொடர்பான தகவலை வெளியிட்டுள்ள லைகா புரோடக்‌ஷன்ஸ், ‘’விடாமுயற்சி படத்தில் நடித்த நடிகர் சஞ்சய் சாரா மற்றும் தசராதியின் தோற்றத்தை முன்வைக்கிறோம். தீவிர மோதலுக்குத் தயாராகுங்கள்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு நடிகர்களின் பின்னணியில் அஜித்தின் தோற்றம் காட்டப்பட்டுள்ளது.

குட் பேட் அக்லிக்காகவும் சிரத்தை காட்டும் அஜித்:

விடாமுயற்சி படத்திற்கு இடையே, குட் பேட் அக்லி படத்தில் கமிட் ஆனார் அஜித்குமார். இந்தப்படத்தை அஜித்தின் ரசிகரும், மார்க் ஆண்டனி படம் மூலமாக 100 கோடி வசூலித்து கொடுத்த இயக்குநருமான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். இந்தப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து இரண்டாவது கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில் 'குட் பேட் அக்லி’ படக்குழுவினர் சார்பில், குட் பேட் அக்லி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மே 19ல் வெளியிடப்பட்டு அதிமான நபரால் பார்க்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆத்விக் ரவிச்சந்திரன், மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா ஆகியோரின் அதிகாரப் பூர்வ டிவிட்டர் கணக்கில் மட்டும் இதுவரை, 41 மில்லியன் பார்வையாளர்களைத் தாண்டி, குட் பேட் அக்லி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பார்த்து ரசிக்கப்பட்டுள்ளது.

 

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.