தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Meesai Rajendran: ‘அழைத்து அசிங்கப்படுத்திய வடிவேலு’ -மீசை ராஜேந்திரன் உருக்கம்!

Meesai Rajendran: ‘அழைத்து அசிங்கப்படுத்திய வடிவேலு’ -மீசை ராஜேந்திரன் உருக்கம்!

Stalin Navaneethakrishnan HT Tamil
Dec 09, 2022 06:45 AM IST

ரசிகருடன் போட்டோ எடுத்துக் கொண்ட நடிகர் மீசை ராஜேந்திரன்
ரசிகருடன் போட்டோ எடுத்துக் கொண்ட நடிகர் மீசை ராஜேந்திரன் (Karthick Prince Facebook)

ட்ரெண்டிங் செய்திகள்

‘‘வடிவேலு ஒரு நாள் அழைத்தார். நானும போனேன். என் முன்னாடி போனில் ஒருவரை தொடர்பு கொண்டார். ‘ம்… நம்ம மீசை ராஜேந்திரன் இருக்கார்ல… ஆமா ஆமா… சாமி படத்துல எல்லாம் வருவார்ல… அவர் தான். சரி பாங்காளி அவரை போட்டுடலாம், நாளைக்கு அவரை வரச்சொல்லிடுறேன்’ என்று பேசி போனை வைத்தார்.

பிறகு என்னிடம் பேச ஆரம்பித்தார். ‘சரி நீங்க காலை 7 மணிக்கு டிஆர் கார்டன் வந்துருங்க’ என்று வடிவேலு கூறினார். நானும் சரியாக 7 மணிக்கு அங்கே போய்விட்டேன். போனால், அங்கு சிங்கமுத்து மகன் ஹீரோவாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. படத்தின் பெயர் மாமதுரை என நினைக்கிறேன்.

தெனாலி ராமன் படத்தில் வடிவேலு - கோப்பு படம்
தெனாலி ராமன் படத்தில் வடிவேலு - கோப்பு படம்

எல்லாரும் காஸ்ட்யூம் போட்டி படப்பிடிப்பு நடக்கிறது. டீக்கடையில் ஒரு சீன், வடிவேலு-பெசண்ட் ரவி இருவரும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது வடிவேலு உடன் இருப்பவர்கள் என்னிடம் எதற்காக நிற்கிறீர்கள் என்று கேட்டார்கள். நேற்று வடிவேலு அண்ணனை சந்தித்தேன், அவர் தான் இன்று வரச் சொன்னார் என்று கூறினேன்.

‘நீங்க வேற… நீங்க பண்றதை தான் பெசண்ட் ரவியை வெச்சு எடுத்துட்டு இருக்காங்க’ என்று கூறினார்கள். அது முடிய 8:30 மணி ஆகிடுச்சு. ஷூட் முடித்துவிட்டு, நாற்காலியில் அமர்ந்திருந்தார் வடிவேலு. நான் போய், ‘அண்ணே வணக்கம்… வரச் சொல்லிருந்தீங்க’ என்றேன்.

‘நீங்கெல்லாம் விஜயகாந்த் ஆளு… உங்களுக்கெல்லாம் சான்ஸ் இல்லை’ என்று முகத்தில் அடித்த மாதிரி பேசினார். எனக்கு பயங்கர கோபம். ஆனாலும், சினிமாவில் அவர் பெரிய ஆளாச்சே. அதனால் நான் எதுவும் சொல்லவில்லை. ‘அண்ணே… நீங்க தானே வரச்சொன்னீங்க, நான் சிவனேனு தானே உட்கார்ந்திருந்தேன். நீங்க தான் டைரக்டரிடம் போன் செய்து பேசுனீங்க, நீங்க தான் காலையில் வரச்சொன்னீங்க. ஒரே ஒரு விசயம் மட்டும் சொல்றேன் அண்ணே, இனிமே இந்த மாதிரி யாருக்கும் பண்ணாதீங்கண்ணே’ என்று கூறிவிட்டு வந்துவிட்டேன்.

விஜயகாந்த் - கோப்புபடம்
விஜயகாந்த் - கோப்புபடம்

இரண்டு நாள் கழித்து தேமுதிக அலுவலகம் போயிருந்தேன். மாடியில் இருந்த கேப்டன் விஜயகாந்த், என்னை பார்த்துவிட்டார். இன்டர்காமில் ராஜேந்திரநாத்தை மேலே வரச்சொல்லு என அழைத்தார். நான் மேலே போனேன்.

‘டிஆர் கார்டனில் என்ன நடந்தது’ என்று கேட்டார். அதுக்குள்ள அவருக்கு செய்தி போய்விட்டது. ‘நீ ஏன் அவரை சும்மா விட்டுட்டு வந்த’ என்று கோபப்பட்டார். ‘இவ்வளவு தூரம் பண்ணிருக்காரு… சும்மா வந்திருக்க’என்று கேப்டன் கேட்க, ‘இனிமே சும்மா விடமாட்டேன் கேப்டன்’ என்று கூறினேன்.

‘நடிகர் சங்கமெல்லாம் இருக்கு கேப்டன், அதான்…’ என்றேன். ‘என்ன பெரிய நடிகர் சங்கம், என்னை மீறி நடிகர் சங்கம் போயிடுமா… சொல்லக்கூடாது தான், ஆனாலும் சொல்றேன், சின்னகவுண்டரில் நான் தான் அவனை போட்டேன். மாத்து துணி கூட இல்லாமல் இருந்தான். 8 வேட்டி, 8 சட்டை நான் வாங்கி கொடுத்தேன் வடிவேலுக்கு. இனிமே அவர் படத்துக்கெல்லாம் கூப்பிட்டாலும் போகாத’ என்றார்,’’

என்று அந்த பேட்டியில் மீசை ராஜேந்திரன், தனக்கு நடந்ததை பகிர்ந்துள்ளார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்