பொது இடத்தில் நடிகைக்கு முத்தம்.. ஒரே வருஷத்தில் 2 கல்யாணம்.. கிசுகிசுக்கு பதில் அளித்த நடிகர் ஜெயராம்
விருது வழங்கும் விழாவில் நடிகர் ஜெயராம், நடிகை அபிராமிக்கு பிளைன் கிஸ் கொடுத்து ஆராவாரம் செய்துள்ளார். இந்த வீடியோ இப்போது வைரலாகியுள்ளது.

நடிகர் ஜெயராம் தமிழ், மலையாள மொழி படங்களில் கடந்த 37 வருடங்களாக நடித்து மக்களை மகிழ்வித்து வருகிறார். இவர் சமீபத்தில் விருது வழங்கும் விழா ஒன்றில் பங்கேற்று பேசிய வீடியோ ஒன்று இப்போது வைரலாகி வருகிறது.
தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டிருந்தாலும் நடிகர் ஜெயராம் மலையாள திரையுலகின் மூலமே மக்களுக்கு பரிட்சையமானார். அங்கு அவர் தன்னுடைய நடிப்பினாலும், கலகலப்பான பேச்சினாலும் மக்களை கவர்ந்து வந்த நிலையில், முறை மாமன் திரைப்படத்தின் மூலம் தமிழ் மொழி ரசிகர்களுக்கு அறிமுகமானார்.
முறைமாமனாக மாஸ் காட்டிய ஜெயராம்
தனது முதல் படத்திலேயே நடிகர் கவுண்டமனியினுடன் ஜோடி சேர்ந்து அவர் செய்திருக்கும் ரகளை மக்களை வெகுவாக ஈர்த்தது. ஆத்தங்கரையில் சேர் போட்டு உட்கார்ந்து சைட் அடிப்பது, நாயிடம் கவுண்டமணி மாட்டிக்கொள்வது, வீட்டில் சண்டையிட்டு கவுண்டமணியும் ஜெயராமும் சேர்ந்து சமைத்துவிட்டு, சாப்பிடப்போகும்போது, அது சரியில்லாமல் போக கொடுக்கும் ரியாக்ஷன் அனைத்தும் இப்படத்தில் ரசிக்கும்படியாக இருந்தன. குறிப்பாக, அண்ணன் அண்ணன் என்ற வசனமும், எங்க அக்கா மகளே இந்து என கவுண்டமணி செய்யும் மாடுலேஷனும் சுந்தர்.சியின் முறை மாமன் படத்தை பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக்கியது.