அவர் கூட இருந்தாலே அப்படி ஒரு ஃபீல் ஆக இருக்கும்.. டைரக்டர் பக்கா பிளானோடு இருப்பார் - யாரைச் சொல்கிறார் நடிகை அபிராமி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அவர் கூட இருந்தாலே அப்படி ஒரு ஃபீல் ஆக இருக்கும்.. டைரக்டர் பக்கா பிளானோடு இருப்பார் - யாரைச் சொல்கிறார் நடிகை அபிராமி

அவர் கூட இருந்தாலே அப்படி ஒரு ஃபீல் ஆக இருக்கும்.. டைரக்டர் பக்கா பிளானோடு இருப்பார் - யாரைச் சொல்கிறார் நடிகை அபிராமி

Marimuthu M HT Tamil
Oct 06, 2024 04:24 PM IST

அவர் கூட இருந்தாலே அப்படி ஒரு ஃபீல் ஆக இருக்கும்.. டைரக்டர் பக்கா பிளானோடு இருப்பார் என நடிகை அபிராமி வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

அவர் கூட இருந்தாலே அப்படி ஒரு ஃபீல் ஆக இருக்கும்.. டைரக்டர் பக்கா பிளானோடு இருப்பார் - யாரைச் சொல்கிறார் நடிகை அபிராமி
அவர் கூட இருந்தாலே அப்படி ஒரு ஃபீல் ஆக இருக்கும்.. டைரக்டர் பக்கா பிளானோடு இருப்பார் - யாரைச் சொல்கிறார் நடிகை அபிராமி

நடிகை அபிராமி வேட்டையன் படத்துக்கான புரோமோஷனுக்காக மின்னம்பலம் பிளஸ் யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறிய பதில்களின் தொகுப்பினைக் காணலாம்,

‘’வேட்டையன் படத்தில் என்கவுன்ட்டர் பேசுபொருளாக இருக்கப்போகிறது. அதுபற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: என்கவுன்ட்டர் பற்றி நம் கருத்து சொல்லமுடியாது. அது காவல் துறை மற்றும் நீதித்துறை சேர்ந்து எடுக்கக்கூடிய விஷயமாகும். தனிப்பட்ட முறையில் அது வேண்டாம் என்பது தான் என் கருத்து. இருந்தாலும் சில விஷயங்களுக்காக தான் அது நடத்தப்படுது. அப்படியிருக்கையில், கருத்து சொல்லமுடியாது.

நடிப்பினை சீரியஸாக எடுத்து செய்ய ஆரம்பிச்சது எப்போது?

பதில்: அது ஒரு நான்கைந்து படங்களுக்கு அடுத்து வந்தது. நான் சினிமா குடும்பத்தில் இருந்து வரவில்லை. நான் வொர்க் செய்த இயக்குநர்கள்கிட்டயிருந்தும் உடன் நடித்த நடிகர், நடிகைகளிடம் இருந்தும் கற்றுக்கொண்ட விஷயங்கள் தான். சில படங்களுக்கு அப்புறம் தான், சீரியஸாக நடிக்கிறது வந்தது.

மிடில்கிளாஸ் மாதவன் படத்தில் ரொம்ப அடக்கமாகவும், விருமாண்டி அன்னலட்சுமி மாதிரி ஒரு தைரியமான பெண்ணாகவும் எப்படி நடிக்குறீங்க?

பதில்: எனக்குத் தெரியாதுங்க. இயக்குநர் என்ன கேட்கிறாரோ அதுதான். இயக்குநர் கேட்கிற விஷயங்களை நம்மால் முடிந்தளவு செய்கிறோம். நடிப்பில் வெரைட்டி கொடுத்துட்டு இருந்தால் தான் நம்மளுக்கும் போர் அடிக்காது. பார்ப்பவர்களுக்கும் போர் அடிக்காது. அதுதான் என் மனதில் இருப்பது.

ரஜினியைவிட சிவாஜிராவ் கெய்க்வாட்டை ரொம்பப்பிடிக்கும் என்று சொல்கிறீர்கள். ரஜினியின் ரியல் லைஃப் ஆரா(ஒளி) எப்படி உங்களுக்கு தாக்கத்தைத் தருகிறது?

பதில்: சில பேர் பத்து அடி தூரத்தில் உட்காரும்போதே எனர்ஜி நமக்கு ஃபீல் ஆகும். பாஸிட்டிவ் வைப் ஃபீல் ஆகும். அது ரொம்ப ரொம்ப குறைவான மனிதர்களிடத்தில் தான் அப்படி ஃபீல் ஆகும். அவங்க கூடயே டிராவல் பண்ணனும்னு தோணும். ஒருத்தர் பலரையும் அட்ராக்ட் பண்றார் அப்படியென்றால், அது சாதாரணமாக நடிப்பு மற்றும் ஸ்டைலால் மட்டும் அது நடந்துவிடாது. அதைத்தாண்டி ஏதோ ஒன்று ரஜினி சார்கிட்ட இருக்கு.

ஒரு மனிதனாக அவர் இன்னொருத்தருக்குக் கொடுக்கும் மரியாதை, இன்னொருத்தருக்கு கொடுக்கும் டைம், நம் எல்லோரும் அப்படி தான் இருப்போம். ஆனால், அவ்வளவு பெரிய இடத்தில் இருக்கும் ஒரு மனிதர் அப்படி செய்யும்போது, அது பலமடங்கு பெரியதாகத் தெரிகிறது.

ரஜினி சார் உடைய நிஜ கேரக்டரை, நினைவுப்படுத்தும் சினிமா கேரக்டர் எது?

பதில்: அவரே சொன்னது, பாபா தான். அவருடைய ரியல் லைஃப் கதையை யார் அவருடைய படத்தில் செய்திருக்காங்கன்னு தெரியல. ஒருவேளை அவரே ஒரு புக் எழுதி, அது படமானால் தான் உண்டு.

வேட்டையன் படத்தில் உங்களுடைய கேரக்டரை சொல்லமுடியுமா?

பதில்: வேட்டையன் படத்தில் நான் நடித்த ஸ்வேதா கேரக்டரைப் பற்றி சொல்லமுடியாது. ஆனால், படத்தில் ஒரு முக்கியமான பங்களிப்பு என்னோடது இருக்கு. நம்பிக்கையான கூர்மையான ஆர்வமான ஒரு லேடி தான்.

இயக்குநர் ஞானவேல் ஒரு பத்திரிகையாளராக இருந்து இயக்குநர் ஆனவர். அவரது இயக்கத்தில் நடித்தது எப்படி இருந்தது?

பதில்: ரொம்ப புத்துணர்ச்சியாக தான் இருந்தது. ஞானவேல் சார் இதுக்கு முன்னாடி இரண்டே இரண்டு படங்கள் தான் செய்திருக்கார். யாரிடமும் உதவி இயக்குநராக அவர் பணியாற்றவில்லை. தெளிவான மனநிலையில் இருப்பார். அதிகமாக ஒரு பத்து நிமிஷம் கூட எடுக்கமாட்டார். தேவைக்கு அதிகமான ஷாட்களையும் எடுக்கமாட்டார். அவ்வளவு பக்காவான பிளானிங் இருக்கும்’’ என பேசினார், நடிகை அபிராமி

நன்றி: மின்னம்பலம் பிளஸ் மற்றும் தொகுப்பாளர் ஷா

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.