இயக்குனர் பாலச்சந்தர் அறிமுகம் படுத்திய நடிகை.. நடிப்பால் அனைவரையும் கவர்ந்த நாயகி சரிதா பிறந்தநாள் இன்று!
Saritha Birthday Today : கீழ் வானம் சிவக்கும் படத்தில் சிவாஜி கணேசன் அவர்களுக்கு இணையான நடிப்பை தந்திருப்பார். இந்த நிலையில் பல வருடங்களாக சினிமாவை விட்டு விலகி வெளிநாட்டில் செட்டில் ஆகி இருந்த சரிதாவை நடிகர் சிவகார்த்திகேயன் மீண்டும் மாவீரன் படத்தில் நடிக்க வைத்திருக்கிறார்.
1978ஆம் ஆண்டு மரோசரித்ரா என்ற தெலுங்கு படத்தில் கே. பாலசந்தர் அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டவர் நடிகை சரிதா. அதே ஆண்டு பாலசந்தராலேயே தமிழில் தப்பு தாளங்கள் படத்தில் அறிமுகம் ஆனார். தமிழ் சினிமாவில் 80ஸ்களில் கொடி கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை சரிதா.
தனித்துவமான நடிப்பால் அனைவரையும் ஈர்த்த நாயகி
இவர் "தப்புத்தாளங்கள்" என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானார். தமிழில் 150கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சரிதா அறிமுகம் ஆன காலத்தில் நாயகி என்றால் நல்ல கலராக இருக்க வேண்டும், ஒல்லியாக இருக்க வேண்டும் என்ற எழுதப் படாத விதிகள் இருந்தது. இந்த விதிகள் எல்லாம் தகர்த்து சாதித்து காட்டியவர் சரிதா. ஒரு நடிகைக்கு நல்ல நடிப்பு திறமை மட்டும் இருந்தால் போதும் என்று தன்னுடைய தனித்துவமான நடிப்பால் அனைவரையும் ஈர்த்த நாயகி சரிதா.தனது நடிப்பால் பார்ப்போரை வாய்பிளக்க வைத்தவர்.
நடிகை சரிதா பார்ப்பதற்கும் யதார்த்தமான பெண் போல இருப்பதும் அனைவர் மனதில் சீக்கிரம் இடம் பிடிக்க ஒரு காரணம். பாலசந்தர் அறிமுகம் செய்த வைத்த நடிகை சரிதா. பொதுவாக இயக்குனர் பாலச்சந்திரன் தன்னுடைய திரைப்படங்களுக்கு தகுந்த மாதிரி பல நடிகர் நடிகைகளை அவராகவே அறிமுகப்படுத்தி இருக்கிறார். அதனாலேயே இயக்குனர் பாலச்சந்திரனின் 22 படங்களில் சரிதா நடித்திருக்கிறார். மிக அற்புதமான நடிப்பை சரிதா வெளிப்படுத்தி இருப்பார். அவற்றில் சில,
தப்புத்தாளங்கள்
அச்சமில்லை- அச்சமில்லை
அக்னி சாட்சி
மௌன கீதங்கள்
நெற்றிக்கண்
எங்க ஊரு கண்ணகி
கோயில் புறா
நெஞ்சில் ஒரு ராகம்
புதுக்கவிதை
சிம்ம சொப்பனம்
வேதம் புதிது என பல ஹிட் படங்கள் சரிதா நடிப்பில் வெளியானது.
மீண்டும் மாவீரன் படத்தில்
அக்னி சாட்சி படத்தில் இவர் மன நிலைபாதிக்கப்பட்ட பெண்ணின் உணர்வுகளை மிக வித்தியாசமாக வெளிப்படுத்தி இருப்பார். கீழ் வானம் சிவக்கும் படத்தில் சிவாஜி கணேசன் அவர்களுக்கு இணையான நடிப்பை தந்திருப்பார். இந்த நிலையில் பல வருடங்களாக சினிமாவை விட்டு விலகி வெளிநாட்டில் செட்டில் ஆகி இருந்த சரிதாவை நடிகர் சிவகார்த்திகேயன் மீண்டும் மாவீரன் படத்தில் நடிக்க வைத்திருக்கிறார்.
சரிதா 1975இல் இவர் சுப்பையா என்பவரை திருமணம் செய்திருக்கிறார். அந்த திருமண வாழ்க்கை ஒரே ஆண்டில் முடிவிற்கு வந்துவிட்டது. இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து இருந்தனர். அதற்குப் பிறகு 12 வருடம் கழித்து 1988இல் முகேஷ் என்ற நடிகரை திருமணம் செய்து இரண்டு மகன்களையும் பெற்று எடுத்திருக்கிறார். அவரோடு 23 வருடங்கள் வாழ்ந்த பிறகு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரையும் கடந்த 2011 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து விட்டார். இந்த நிலையில் சினிமாவிலிருந்து விலகி பல ஆண்டுகளாக தன்னுடைய மகன்களோடு வெளிநாட்டில் செட்டில் ஆகி இருந்தார்.
சரிதாவின் விவாகரத்து கதை
பிரபல நடிகையான சரிதாவின் விவாகரத்து கதையை செய்யாறு பாலு தமிழ் சேனலுக்கு பகிர்ந்தார். அந்த பேட்டியில் அவர் பேசும் போது, “நடிகை சரிதா மலையாளத்தில் நடிகர் முகேஷ் உடன் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். அப்போது அவருடன் சரிதாவிற்கு காதல் ஏற்பட்டது. அந்த காதல் நல்ல புரிதலாக மாற, இருவரும் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்ற முடிவை எடுக்கிறார்கள். இரு தரப்பு வீட்டாரும் காதலுக்கு சம்மதம் சொல்ல இருவருக்கும் திருமணம் நடந்தது. இரண்டு குழந்தைகள் பிறந்தன. நன்றாக வாழ்க்கை சென்று கொண்டிருந்த சமயத்தில்தான் இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாக தகவல் வெளியானது.
இந்த செய்தி அப்போது திரைத்துறையில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் பொழுதே முகேஷ் நாட்டிய பெண்மணி ஒருவரை கல்யாணம் செய்து கொண்டார். இதைக் கேட்டு அதிர்ந்து போன சரிதா, நியாயம் கேட்பதற்காக நேராக நீதிமன்றத்திற்கே சென்று விட்டார். போனவர் அங்கு மயக்கம் போட்டு கீழே விழுந்து விட்டார்.
நாயகி சரிதா பிறந்தநாள் இன்று
அது தொடர்பான புகைப்படங்கள் பத்திரிகைகளில் வந்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தனக்கு இனி, எதுவும் வேண்டாம் என்று சொல்லி சரிதா தன்னுடைய இரண்டு குழந்தைகளை அழைத்துக்கொண்டு துபாய் கிளம்பி சென்று விட்டார். குழந்தைகளை நன்றாக படிக்க வைத்தார். மூத்த மகன் டாக்டராக மாறினார். இரண்டாவது மகனை நியூசிலாந்திற்கு அனுப்பி படிக்க வைத்தார்” என கூறி இருப்பார்.
தனது நடிப்பால் அனைவரையும் கட்டிப்போட்ட நாயகி சரிதா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இன்றைய தினம் அவருக்கு வாழ்த்து கூறுவோம். இந்துஸ்தாம் டைம்ஸ் தமிழ் சார்பாக வாழ்த்துக்கள்.
டாபிக்ஸ்