Hoote App:சௌந்தர்யா ரஜினிகாந்தின் ஹூட் ஆப் நிறுவனம் இழுத்து மூடல் - காரணம் என்ன?
- பயனர்களின் வரவேற்பு இல்லாத காரணத்தால் சமீபத்தில் மூடப்பட்ட Koo செயலியை தொடர்ந்து சௌந்தர்யா ரஜினிகாந்தின் Hoote செயலியும் தனது செயல்பாட்டை நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- பயனர்களின் வரவேற்பு இல்லாத காரணத்தால் சமீபத்தில் மூடப்பட்ட Koo செயலியை தொடர்ந்து சௌந்தர்யா ரஜினிகாந்தின் Hoote செயலியும் தனது செயல்பாட்டை நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
(1 / 7)
கடந்த 2021 ஆம் ஆண்டு Hoote (ஹூட்) என்கிற குரல் சமூக ஊடக தளத்தை ரஜினிகாந்தின் மகள் செளந்தர்யா துவங்கினார். அம்டெக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தமிழ் உள்ளிட்ட 15 இந்திய மொழிகள் மற்றும் சர்வதேச மொழிகளிலும் இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்டது.
(2 / 7)
இந்த செயலியில் படிக்காதவர்கள் கூட எளிமையாக குரல் வழியாக தங்களின் கருத்தை தெரிவிக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டிருந்தது. ஹூட் ஆப் மூலம் வாய்ஸ் மெசேஜாக யார் வேண்டுமானாலும் உலகின் எந்த மூலையில் இருந்தும் தங்கள் மனதில் தோன்றும் கருத்தை சமூக வலைதளங்களில் பதிவிட முடியும்.
(3 / 7)
ஃபேஸ்புக், எக்ஸ், வாட்ஸ் ஆப் போன்ற சமூக ஊடக தங்களுக்கு போட்டியாக Hoote செயலி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த ஆப்பை பயன்படுத்தும் பயனாளர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டதால், இந்த நிறுவனத்தை இழுத்து மூட சௌந்தர்யா ரஜினிகாந்த் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.
(4 / 7)
முன்னதாக, போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால் Koo என்கிற செயலி சமீபத்தில் மூடப்பட்டது. இதைத் தொடர்ந்து சௌந்தர்யா ரஜினிகாந்தின் Hoote செயலியும் தனது செயல்பாட்டை நிறுத்தியுள்ளதாக தெரிகிறது.
(5 / 7)
மேலும், WhatsApp-க்கு மாற்றாக Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தொடங்கிய Arattai செயலியும் வெறும் 100,000 பதிவிறக்கங்கள் மட்டுமே பெற்று மக்களின் வரவேற்பை பெற தவறியுள்ளது.
(6 / 7)
Koo, Hoote, Arattai ஆகிய 3 இந்திய செயலிகளும் கொரோனா ஊரடங்குக்கு மத்தியில், Facebook, Twitter போன்ற நிறுவனங்கள் மத்திய அரசின் கட்டுப்பாடுகளை எதிர்கொண்ட போது தொடங்கப்பட்டவை ஆகும்.
மற்ற கேலரிக்கள்