தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Actor Black Pandi Spoke About Actress Anjali In An Interview

Anjali: நானும் அஞ்சலியும் ரொம்ப நெருக்கம்.. நடிகர் பிளாக் பாண்டி வருத்தம்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 26, 2024 10:47 AM IST

Actor Black Pandi: நடிகர் பிளாக் பாண்டி பேட்டி ஒன்றில் நடிகை அஞ்சலி குறித்து தெரிவித்துள்ளார்.

நடிகர் பிளாக் பாண்டி
நடிகர் பிளாக் பாண்டி

ட்ரெண்டிங் செய்திகள்

இயக்குனர் ஒரு ராம் திரைப்படமான கற்றது தமிழ் படத்தின் மூலம் தமிழில் அஞ்சலி அறிமுகமானார். அந்த திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு பெற்று தந்தது. பிறகு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அவருக்கு கிடைக்க ஆரம்பித்தன.

அதன் பின்னர் பல திரைப்படங்களில் அவர் நடித்திருந்தார். அங்காடித்தெரு திரைப்படம் இவருக்கு தனித்துவமான நல்ல நடிகை என்ற பெயரை பெற்று தந்தது. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு சினிமாவிலும் சிறப்பான இடத்தை பிடித்தார். தனது நடிப்பு திறமையால் முன்னாடி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தார்.

நடிப்பில் தனக்கென ஒரு தனித்துவத்தை வைத்திருந்தாலும் சில சிக்கல்கள் காரணமாக சில காலம் சினிமாவில் இருந்து காணாமல் போயிருந்தார். அதற்குப் பிறகு நடிகர் ஜெயம் ரவியோட இணைந்து சகலகலா வல்லவன் படத்தில் நடித்தார். இருப்பினும் பெரிதாக அவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

அதற்குப் பிறகு சினிமாவில் அதிகம் கவனம் செலுத்திய அஞ்சலி தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட திரைப்படங்களில் கவர்ச்சி நடனங்கள் ஆடினார். அதன் பின்னர் தற்போது இயக்குனர் ராம் உருவாக்கி வரும் ஏழு கடல் ஏழு மலை படத்தில் நடித்து வருகிறார்.

அங்காடித்தெரு திரைப்படத்தில் இவரோடு இணைந்து நடித்த நடிகர் பிளாக் பாண்டி தனியார் யூட்யூப் சேனலில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகை அஞ்சலியின் நட்பு குறித்து தெரிவித்துள்ளார்.

அப்போது பேசிய, “அவர் நடிகை அஞ்சலியும் நானும் அங்காடித்தெரு திரைப்படத்தில் இணைந்து ஒன்றாக நடித்தோம். அதற்கு முன்னதாகவே அஞ்சலிக்கும் எனக்கும் நட்பு ரீதியாக நெருங்கிய பழக்கம் இருந்தது. அதாவது அவரிடம் உரிமையோடு விளையாடும் அளவிற்கு எனக்கு பழக்கம் இருந்தது. டான்ஸ் மாஸ்டர் ஜெயந்தியிடம் நாங்கள் இருவரும் மாணவர்களாக இருந்தோம்.

அந்த வகுப்பில் அஞ்சலி நடனமாடும் பொழுது நான் அவரை ஒழுங்காக ஆடு என பலமுறை கிண்டல் செய்திருக்கிறேன். அங்காடி தெரு திரைப்படத்திற்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து சகலகலா வல்லவன் திரைப்படத்தில் நாங்கள் இருவரும் இணைந்து நடித்தோம்.

அப்போது நான் அவரை சந்தித்து பேசினேன். அவர் என்னிடம் சரியாக பேசவில்லை. நான் அவரிடம் நேரடியாக சென்று ஏதாவது நமக்குள் சிக்கல்கள் இருக்கின்றதா? என கேட்டேன் அதற்கு அவர் ஒன்றும் இல்லை எனக் கூறினார். அதன் பின்னர் அவருக்கு நான் மெசேஜ் அனுப்பியும் பார்த்தேன் எந்த பதிலும் வரவில்லை.

இது குறித்து நான் எதுவும் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை ஒருவர் மற்றொருவரிடம் பேச வேண்டும் பேசக்கூடாது என்பது அவர்களுடைய தனிப்பட்ட விருப்பம் அதை நான் தொந்தரவு செய்யக்கூடாது என விட்டுவிட்டேன்” என தெரிவித்தார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.