தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ajith Kumar: நடிகர் அஜித்தின் வீட்டில் சோகம்! தந்தை உடல் நலக்குறைவால் மரணம்

Ajith Kumar: நடிகர் அஜித்தின் வீட்டில் சோகம்! தந்தை உடல் நலக்குறைவால் மரணம்

Pandeeswari Gurusamy HT Tamil
Mar 24, 2023 09:15 AM IST

நடிகர் அஜித்துமாரின் தந்தை உடல் நலக்குறைவால் காலமானார்

அஜித் தந்தை மரணம்
அஜித் தந்தை மரணம்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்நிலையிலி இன்று காலை 9.30 மணியளவில் அவரது உடல் பெசண்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. 

நடிகர் அஜித் குமாரின் தந்தை பி.சுப்பிரமணியம் இவருக்கு வயது 86. தாய் மோகினி. அஜித் குமாரின் பெற்றோர் சென்னையில் பெசன்ட் நகரில் இருந்த வீட்டில் தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில் எதிர்பாராத விதமாக அஜித்தின் தந்தை கடந்த 2020ம் ஆண்டு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதனால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். பக்கவாதத்தால் கடும் உடல் உபாதைகளை எதிர்கொண்டு வந்த சுப்பிரமணியம் இன்று அதிகாலை உயிரிழந்தார்.

இன்றுகாலை அவரது உடல் பெசன்ட் நகரில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் அஜித் தந்தை உடலுக்கு நேரில் சென்று மலர் வலையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

இந்நிலையில் தமிழ் திரை  உலகில் பல்வேறு நடிகர் நடிகைகளும் அஜித்தின் தந்தை மரணத்திற்கு தங்கள் இரங்கல்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் அஜித் ரசிகர்கள் அவரது தந்தை மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து அஜித் தனது அப்பாவுடன் இருக்கும் புகைப்படங்களை வைரலாக்கி வருகின்றனர்.

இந்நிலையில் அஜித் குடும்பத்துடன் துபாய்க்கு சென்றிருந்தார். அவர் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருந்தது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில்  கடந்த சில நாட்களாக வைரலாகி வந்தது . இந்நிலையில் அவரது நடந்துள்ள இந்த இழப்பு அவர்களது ரசிகர்கள் மத்தியில் கடும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்