தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Amala Paul : ‘அந்த மாதிரி’யே நடிச்சாச்சு, அப்புறம் இதெல்லாம் ஒரு மேட்டரா? - எதைச் சொல்கிறார் அமலா பால்?

Amala Paul : ‘அந்த மாதிரி’யே நடிச்சாச்சு, அப்புறம் இதெல்லாம் ஒரு மேட்டரா? - எதைச் சொல்கிறார் அமலா பால்?

Priyadarshini R HT Tamil
Apr 25, 2023 11:47 AM IST

Malayalam Movie Aadu Jeevidham : ஆடு ஜீவிதம் படத்தில் லிப் லாக் காட்சியில் நடித்ததுள்ளார் அமலாபால். அதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

ஆடு ஜீவிதம் படக்காட்சி
ஆடு ஜீவிதம் படக்காட்சி

ட்ரெண்டிங் செய்திகள்

பிருத்விராஜ், இந்தப் படத்தில் கால மாறுதலுக்கு ஏற்ப, மூன்று விதமான தோற்றங்களில் நடிக்கிறார். அதில் ஒன்றுதான் துபாயில் ஆடு மேய்க்கும் வேலை செய்பவனின் தோற்றம்.

பிரபல மலையாள எழுத்தாளர் பெஞ்சமின் எழுதிய ஆடு ஜீருடா நாவலை அடிப்படையாகக் கொண்டு இப்படத்திற்கு பிளஸ்சி திரைக்கதை அமைத்துள்ளார். இப்படத்தில் நடிகர் பிருத்விராஜ் மனைவியாக அமலா பால் நடித்துள்ளார்.

கடனில் சிக்கித் தவிக்கும் பிருத்விராஜ், கடனை அடைக்க பணம் சம்பாதிக்க வெளிநாடு செல்ல முடிவு செய்து சவுதி அரேபியா செல்கிறார். அங்கு ஆடு மேய்ப்பவனாக வரும் அவர் சந்திக்கும் பிரச்னைகளை யதார்த்தமாக முன்வைக்கும் படம் ஆடுஜீவதம். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஆஸ்கார் விருது பெற்ற சவுண்ட் டிசைனர் ரசூல் பூக்குட்டியும் இப்படத்தில் பணியாற்றியுள்ளார்.

சமீபத்தில் வெளியான ஆடு ஜிவிதம் படத்தின் டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருக்கிறது. பாலைவனத்தில் ஆடு மேய்க்கும்போது அவர் படும் கஷ்டங்களைப் பார்த்து கண்ணீர் விட்டு கதறும் அளவுக்கு உக்கிரமான காட்சிகள் நிறைந்த படமாக இது இருக்கும் என்று டிரெய்லர் பார்க்கும்போது தெரிகிறது. மறுபுறம், அமலாபாலுடன் டிரெய்லரில் உதட்டுடன் உதடு முத்தமிடும் லிப் லாக் காட்சியும் உள்ளது. 

படத்தில் லிப் லாக் காட்சி குறித்து அமலா பால் மிகவும் கூலாக பதில் அளித்துள்ளார். ஆடு ஜீவிதம் கதையை கூறும்போது, படத்திற்கும் கதைக்கும் லிப் லாக் தேவைப்பட்டதால் அதில் நடித்ததாக அமலா தெரிவித்துள்ளார். லிப்லாக் காட்சி தனக்கு பெரிய விஷயமில்லை என்றும், நிர்வாணமாகவே நடித்துள்ளேன் என்றும் அமலா பால் தெளிவுபடுத்தியுள்ளார். ஆடை படத்தில் அமலா பால் நிர்வாணமாக நடித்துள்ளார் என குறிப்பிடதக்கது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்