Fahadh Faasil: அட அட அட.. இதுவல்லவா படம்.. சூப்பர் ஸ்டார்களுக்கு மத்தியில் ரத்னவேலு புகழ் ஃபஹத் ஃபாசில் - என்னவாம்!-a picture of rathnavelu fame fahad fazil standing amidst superstars rajinikanth and amitabh bachchan has gone viral - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Fahadh Faasil: அட அட அட.. இதுவல்லவா படம்.. சூப்பர் ஸ்டார்களுக்கு மத்தியில் ரத்னவேலு புகழ் ஃபஹத் ஃபாசில் - என்னவாம்!

Fahadh Faasil: அட அட அட.. இதுவல்லவா படம்.. சூப்பர் ஸ்டார்களுக்கு மத்தியில் ரத்னவேலு புகழ் ஃபஹத் ஃபாசில் - என்னவாம்!

Marimuthu M HT Tamil
Aug 08, 2024 05:13 PM IST

Fahadh Faasil: அட அட அட.. இதுவல்லவா படம்.. சூப்பர் ஸ்டார்களுக்கு மத்தியில் ரத்னவேலு புகழ் ஃபஹத் ஃபாசில் நிற்கும் புகைப்படம் வைரல் ஆகியுள்ளது. இன்று அவரது பிறந்த நாளை ஒட்டி, இந்தப் படம் தான் ட்ரெண்டிங்கில் உள்ளது.

Fahadh Faasil: அட அட அட.. இதுவல்லவா படம்.. சூப்பர் ஸ்டார்களுக்கு மத்தியில் ரத்னவேலு புகழ் ஃபஹத் ஃபாசில்- என்னவாம்!
Fahadh Faasil: அட அட அட.. இதுவல்லவா படம்.. சூப்பர் ஸ்டார்களுக்கு மத்தியில் ரத்னவேலு புகழ் ஃபஹத் ஃபாசில்- என்னவாம்!

தமிழ்சினிமாவில் கவனம் ஈர்த்த ஃபகத் ஃபாசிலுக்கு பிறந்த நாள்:  

பிரபல மலையாள நடிகர் ஃபகத் ஃபாஸில் இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். கமல்ஹாசனின் விக்ரம், உதயநிதி நடித்த'மாமன்னன்’ படத்திலும் நடித்து தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர், ஃபஹத் ஃபாசில். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘ஆவேசம்’ என்னும் மலையாளப் படமும் தமிழ் ரசிகர்களிடம் வரவேற்பினைப் பெற்றது. மேலும் இப்படத்தில் இடம்பெற்ற ‘இல்லுமினாட்டி’ என்னும் பாடலும், தமிழகமெங்கும் ஹிட்டடித்தது. இந்நிலையில் ஃபஹத் பாசில், சூப்பர் ஸ்டார்களான ரஜினி மற்றும் அமிதாப்பச்சனுடன் சேர்ந்து ‘வேட்டையன்’ படத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில், ஃபஹத் ஃபாசில் வேட்டையன் படத்திற்காக சென்னையில் டப்பிங் செய்து வந்தார். இதன் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வைரலாகின. 

இந்நிலையில் ஃபஹத் ஃபாசிலின் பிறந்தநாளை ஒட்டி, ‘வேட்டையன்’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான, லைகா புரொடக்‌ஷன்ஸ் ஃபஹத் ஃபாசிலின் வலது பக்கம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும்,  இடதுபக்கம் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும் இருக்கும் படத்தை வெளியிட்டு, ஃபஹத் ஃபாசிலுக்கு வாழ்த்து கூறியுள்ளது. எக்ஸ் தளத்தில் வெளியான இப்பதிவுக்குப் பலரும் எதிர்வினையாற்றி வருகின்றனர். 

தமிழில் வேட்டையன் தவிர, தெலுங்கில் அல்லு அர்ஜுனுடன் புஷ்பா 2, டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள், ஆக்சிஜன் ஆகியப் படங்களில் ஃபஹத் ஃபாசில் நடித்து வருகிறார். மலையாளத்தில் ஓடும் குதிர சாடும் குதிரா, பூகெய்ன்வில்லா ஆகியப் படங்கள் ஃபஹத் ஃபாசிலின் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ளன.

வேட்டையன் திரைப்படம் எத்தகையது?:

'ஜெய் பீம்’ பட இயக்குநர் டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடித்திருக்கும் திரைப்படம் ’வேட்டையன்’. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சென்னை, திருவனந்தபுரம், ஆந்திரா மாநிலம் - கடப்பா போன்ற பகுதிகளில் நடந்தது. படத்தின் ஆரம்ப கட்டப்பணிகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 

'வேட்டைன்’ திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில், ராணா டகுபதி ஆகியோரும் படம் முழுக்க நடித்துள்ளனர். மஞ்சு வாரியர் கதையின் நாயகியாக நடித்துள்ளார். மேலும் துஷாரா விஜயன், ரித்திகா சிங், ரக்‌ஷன் உள்பட பலரும் நடித்துள்ளார்கள்.

’’வேட்டையன்’’ படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு படம் உருவாகி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் இணைந்து நடித்துள்ளார்கள். ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பிலோமின் ராஜ் எடிட்டிங்கினை மேற்கொண்டுள்ளார். 

வேட்டையன் ரிலீஸ் எப்போது?:

இந்நிலையில் வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வரும் எனத் தெரிகிறது. அக்டோபர் 12ஆம் தேதி தசரா கொண்டாடப்பட இருக்கும் நிலையில், இரண்டு நாள்கள் முன்னரே படம் வெளியாகும் என அறியப்படுகிறது. 

மேலும் அப்போது வெளியாக இருக்கும் ‘’தேவரா’’ படத்துடன் மோதுகிறது. இப்படத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோ ஜூனியர் என்.டி.ஆரும், ஜான்வி கபூரும் இணைந்து நடித்துள்ளனர். 

இந்நிலையில் ‘வேட்டையன்’ திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி ரூ. 65 கோடிக்கு கைப்பற்றியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ‘வேட்டையன்’ திரைப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் ப்ரைம் ஓடிடி நிறுவனம் ரூ.90 கோடிக்கு கைப்பற்றியுள்ளதாகத் தெரிகிறது.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.