HBD Manju Warrier : மலையாள சினிமாவின் முடிசூடா ராணி மஞ்சு வாரியர் பிறந்த தினம் இன்று!-hbd manju warrier today is the birthday of manju warrier the crowning queen of malayalam cinema - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Manju Warrier : மலையாள சினிமாவின் முடிசூடா ராணி மஞ்சு வாரியர் பிறந்த தினம் இன்று!

HBD Manju Warrier : மலையாள சினிமாவின் முடிசூடா ராணி மஞ்சு வாரியர் பிறந்த தினம் இன்று!

Priyadarshini R HT Tamil
Sep 10, 2023 08:20 AM IST

HBD Manju Warrier : ஹவ் ஓல்ட் ஆர் யு? என்ற படத்தின் மூலம் அவர் மீண்டும் சினிமாவில் நடிக்கத்துவங்கினார். அப்போது உங்கள் கனவுகளை துரத்திச் செல்வதற்கு வயது ஒரு தடையல்ல என்று அவர் பேசியது வைரலானது. மத்திய வயதிலும் நடிக்க வந்து நடிப்பில் கலக்கினார்.

HBD Manju Warrier : மலையாள சினிமாவின் முடிசூடா ராணி மஞ்சு வாரியர் பிறந்த தினம் இன்று!
HBD Manju Warrier : மலையாள சினிமாவின் முடிசூடா ராணி மஞ்சு வாரியர் பிறந்த தினம் இன்று!

1995ம் ஆண்டு சாஷ்யாம் என்ற மலையாள சினிமாவில் அறிமுகமானார். அப்போது அவருக்கு வயது 17. இவர் நடித்த படங்களில் குறிப்பிடும்படியானது என்றால், அவை தூவல் கொட்டாரம், சல்லப்பம், ஏ புழையும் காடானு மற்றும் ஆராம் தம்புரான் ஆகியவை ஆகும்.

இவர் தமிழ்நாடு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோயில் நகரில் பிறந்தார். இவரது குடும்பத்தினர் கேரளாவின் திரிசூர் மாவட்டத்தில்உ உள்ள புல்லு கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர்கள். இவரது தந்தை மாதவன் அக்கவுண்டன்ட், தாய் கிரிஜா இல்லத்தரசி. இவருக்கு ஒரு அண்ணன் இருக்கிறார். அவரது பெயர் மது வாரியர். அவரும் சினிமாத்துறையில் நடிகர் மற்றும் தயாரிப்பாளராக உள்ளார்.

மஞ்சு, நாகர்கோயிலில் உள்ள சிஎஸ்ஐ பள்ளியில் படித்தார். அவரது தந்தை பணி உயர்வு பெற்ற பின்னர் இவர்கள் குடும்பம் கேரளாவில் உள்ள கண்ணூருக்கு சென்றுவிட்டனர்.

இவர் முதலில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான மோஹரவம் என்ற தொலைக்காட்சி தொடரில் நடிக்கத் துவங்கினார். பின்னர் தனது 17வது வயதில் சினிமாவில் நடிக்கத்துவங்கிவிட்டார். இவருடன் நடித்த திலீப் என்பவரையே திருமணம் செய்துகொண்டார்.

இவர் அப்போது 3 ஆண்டுகள் மட்டுமே நடித்தார். 20 மலையாள படங்களில் நடித்து, பல விருதுகளையும் பெற்றார். பின்னர் நடிப்பில் இருந்த விலகியிருந்தார். திருமணத்திற்குப்பின் 2012ம் ஆண்டு குச்சுப்புடி நடன நிகழ்ச்சிக்காக மீண்டும் மேடை ஏறினார். பின்னர் அவர் கல்யாண் ஜீவ்வலரியின் விளம்பரங்களில் அமிதாப்பச்சனுடன் நடித்தார்.

பின்னர் அதே விளம்பரத்தில் தெலுங்கில் நாகர்ஜீன் உள்ளிட்டோருடன் நடித்தார். பின்னர் விளம்பரங்களில் நடிக்கத்துவங்கினார். அவரது நினைவுகள் குறித்த ஒரு புத்தகத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

ஹவ் ஓல்ட் ஆர் யு? என்ற படத்தின் மூலம் அவர் மீண்டும் சினிமாவில் நடிக்கத்துவங்கினார். அப்போது உங்கள் கனவுகளை துரத்திச் செல்வதற்கு வயது ஒரு தடையல்ல என்று அவர் பேசியது வைரலானது. மத்திய வயதிலும் நடிக்க வந்து நடிப்பில் கலக்கினார்.

மஞ்சு வாரியர் – திலீப் தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த தம்பதி கருத்து வேறுபாடு காரணமான பிரிந்துவிட்டனர். அண்மையில் துணிவு படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து கலக்கியிருப்பார். முன்னதாக அவர் அசுரன் படத்தில் தனுசுடன் நடித்திருப்பார். அதுவரை மஞ்சு வாரியர் பற்றிய தகவல்களை மட்டுமே அறிந்திருந்த தமிழ் மக்கள் திரையில் அவரது நடிப்பை கண்டு வியந்தனர்.

இன்று பிறந்தநாள் காணும் மஞ்சு வாரியல் தனது வாழ்வில் எல்லா நலன்களும், வளங்களும் பெற்று வாழ வேண்டும் என்று ஹெச்.டி தமிழ் வாழ்த்துகிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.