Aavesham Box office: பட்டையை கிளப்பும் ஃபஹத் ஃபாசில்.. ஆவேசம் படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?-fahadh faasil jithu madhavan aavesham box office collection day 5 - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Aavesham Box Office: பட்டையை கிளப்பும் ஃபஹத் ஃபாசில்.. ஆவேசம் படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

Aavesham Box office: பட்டையை கிளப்பும் ஃபஹத் ஃபாசில்.. ஆவேசம் படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

Kalyani Pandiyan S HT Tamil
Apr 16, 2024 04:17 PM IST

மொத்தமாக ஆவேசம் திரைப்படம் 5 நாள் முடிவில் 19.85 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக குறிப்பிட்டு இருக்கும் Sacnilk தளம், ஆறாம் நாளான இன்றைய தினம் திரைப்படம் 1.36 கோடி ரூபாய் வசூல் ஈட்ட வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறது.

ஆவேசம் திரைப்படத்தின் வசூல்!
ஆவேசம் திரைப்படத்தின் வசூல்!

Sacnilk தளம் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி, ஆவேசம் திரைப்படம் முதல் நாளில், இந்தியாவில் 3.65 கோடி ரூபாய் வசூல் செய்தது. 2 வது நாளில் 3.35 கோடி ரூபாயும், 3 வது நாளில் 4.25 கோடி ரூபாயும், 4 வது நாளில் 4.75 கோடி ரூபாயும் வசூல் செய்திருக்கிறது. 5 வது நாளான நேற்றைய தினம், இந்தத்திரைப்படம் 3.85 கோடி ரூபாய் வசூல் செய்து இருக்கிறது. 

மொத்தமாக ஆவேசம் திரைப்படம் 5 நாள் முடிவில் 19.85 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக குறிப்பிட்டு இருக்கும் Sacnilk தளம், ஆறாம் நாளான இன்றைய தினம் திரைப்படம் 1.36 கோடி ரூபாய் வசூல் ஈட்ட வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறது. 

உலக அளவில் இந்தத்திரைப்படம் 42 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தியா தவிர்த்து பிற இடங்களில் மட்டும் இந்தத்திரைப்படம் 23.5 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.

ரங்கா கதாபாத்திரத்தில் நடிக்கும் ஃபஹத் பாசில் சக நடிகர்களுடன் இணைந்து, கேங்கஸ்டர் காமெடி ஜானரில் வெளுத்து வாங்கி இருக்கிறார். 

இயக்குநர் ஜித்து மாதவனின் முந்தைய படத்தைப் போலவே, ஆவேசம் பெங்களூரில் அமைக்கப்பட்டு கல்லூரி மாணவர்களின் குழுவைச் சுற்றி வருகிறது.

மூன்று புலம் பெயர்ந்த மலையாளி கல்லூரி மாணவர்கள் - பீபி (மிதுன்), அஜு (ஹிப்ஸ்டர்) மற்றும் சாந்தன் (ரோஷன் ஷானவாஸ்) - ராகிங் செய்வதைத் தடுக்க முயற்சி செய்கிறார்கள். அந்த முயற்சி தோல்வி அடைகிறது. அது மட்டுமில்லாமல் அவர்கள் கடத்தப்பட்டு தாக்கப்படுகிறார்கள். இதனையடுத்து அவர்கள் பழிவாங்க விரும்புகிறார்கள். அதன் பின்னர் என்ன ஆனது என்பது கதையாக விரிகிறது. 

கேங்ஸ்டர் நகைச்சுவை காட்சிகள் வாயிலாக மீண்டும் தன்னுடைய திறமையை நிரூபித்து இருக்கிறார் இயக்குநர் ஜித்து மாதவன் 

கல்லூரி கதை சினிமாவில் அடிக்கடி பார்க்கப்படும் கதை என்றாலும், அதை ஒரு மாஸ் மசாலா காமிக்காக மாற்றுவதில், ரங்காவின் கதாபாத்திரம் முக்கியமானதாக அமைந்து இருக்கிறது. வசனங்கள் படத்திற்கு நிறைய நகைச்சுவையை சேர்த்து இருக்கின்றன. 

ரங்காவாக ஃபஹத் பாசிலை நடிக்க வைத்தது புத்திசாலித்தனமாக இருந்தது. ஏனெனில் அவர் அதிக மாஸ் மசாலா படங்களில் நடிக்கவில்லை. ஆனால் இந்தப்படத்தில் அவர் சந்தேகத்திற்கு இடமின்றி மாஸ் கிளப்பி இருக்கிறார். படத்தை சிரமமின்றி தனது தோள்களில் சுமக்கிறார். 

அவர் வெளிப்படுத்தும் நடிப்பில், அவரது நகைச்சுவை உணர்வு சரியாக வெளிப்படுகிறது. இசையமைப்பாளர் சுஷின் ஷியாமின் பாடல்கள் மிகவும்  இளைஞர்களை ஈர்க்கும் விதமாக அமைந்து இருக்கிறது. எடிட்டிங் இன்னும் சிறப்பாக  இருந்திருக்கலாம். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.