தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு - விக்கிரவாண்டியில் என்ன தான் நடக்கிறது - முழு ரவுண்ட் அப்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு - விக்கிரவாண்டியில் என்ன தான் நடக்கிறது - முழு ரவுண்ட் அப்!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு - விக்கிரவாண்டியில் என்ன தான் நடக்கிறது - முழு ரவுண்ட் அப்!

Marimuthu M HT Tamil
Oct 25, 2024 05:43 PM IST

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு - விக்கிரவாண்டியில் என்ன தான் நடக்கிறது - முழு ரவுண்ட் அப் குறித்துப் பார்ப்போம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு - விக்கிரவாண்டியில் என்ன தான் நடக்கிறது - முழு ரவுண்ட் அப்!
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு - விக்கிரவாண்டியில் என்ன தான் நடக்கிறது - முழு ரவுண்ட் அப்!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகரான விஜய் அரசியல் கட்சி தொடங்குவார் என அவரது ரசிகர்கள் பல ஆண்டுகளாக காத்திருந்தனர். அதற்குத் தீனிபோடும் விதமாக, சமீபத்தில் ’’தமிழக வெற்றிக் கழகம்’’ என்ற கட்சிப்பெயரை அறிவித்து, அதைத் தேர்தல் ஆணையத்தில் பதிவும் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார், விஜய். இதனைத் தொடர்ந்து, அவரது ரசிகர் மன்றமான தளபதி மக்கள் இயக்கம் அப்படியே, அவரது கட்சியாக மாறியது. அதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் பணிகளில் ஈடுபடத் தொடங்கினார், விஜய். அதைத் தொடர்ந்து வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் என்பதுவே தமது இலக்கு என தெளிவாகத் தெரிவித்திருந்தார், விஜய்.

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. அதற்கான ஆயத்தப்பணிகள் விக்கிரவாண்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விக்கிரவாண்டியில் வைக்கப்பட்ட பல தலைவர்களின் கட்-அவுட்கள்:

இதற்காக விக்கிரவாண்டி வி.சாலையில் உருவாகி வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுத் திடலில் தமிழன்னை, சேரர், சோழர், பாண்டியர், சுதந்திரப்போராட்ட வீராங்கனை வேலுநாச்சியார், பெருந்தலைவர் காமராஜர், பெரியார், பி.ஆர். அம்பேத்கர், அஞ்சலையம்மாள் ஆகியோரின் கட் அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டிற்கு களப்பணி ஆற்ற வந்த கட்சி நிர்வாகி இதுதொடர்பாகப் பேசுகையில், ‘’தமிழகம் முழுக்க இருக்கும் மாவட்டத் தலைவர்கள் வந்து களப்பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். 33 குழுக்கள் அமைத்து இருக்காங்க. வரும் தொண்டர்களை மாநாட்டுக்கு வந்ததில் இருந்து வீடு திரும்பும் வரை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 9 இடங்களில் வாகனத்தை நிறுத்தலாம். வந்து நிறுத்துறவங்களுக்கு ஒரு டோக்கன். வண்டியில் இருந்து இறங்கிப்போறவங்க மிஸ் ஆகாமல் இருக்க ஒரு டோக்கன் தரப்படுகிறது. அதே மாதிரி சுகாதாரக்குழு போட்டுருக்காங்க. மருத்துவர்களுக்குத் தனியாக ஒரு குழு போட்டுருக்காங்க. தீயணைப்பு மற்றும் மீட்புக்குத் தனியாக குழு போட்டுருக்காங்க.

ஆம்புலன்ஸ்க்கு தனியாக குழு போட்டுருக்காங்க. அப்படி எல்லா குழுக்களும் போட்டு தொண்டர்கள் பாதுகாப்பாக வீட்டுக்குச் செல்ல ஏற்பாடுகள் செய்கிறோம். அதே மாதிரி எல்லா மாவட்டத் தலைவர்களும் பணிகளைத் தானாகவே கையில் எடுத்துக்கொண்டு உழைச்சிட்டு இருக்கோம். சின்ன விஷயமாக இருந்தாலும் ஊடகம் மூலமாகவோ, தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் மூலமாகவோ, தமிழக வெற்றிக்கழக மாநாட்டுப் பணிகளைக் கண்காணித்து வருகிறார், தலைவர் விஜய்.

நாங்கள் வந்து ரசிகர் மன்றமாக இருந்து, நற்பணி மன்றமாக மாறி, அதன்பின் விஜய் மக்கள் இயக்கமாக மாறி, தற்போது தமிழக வெற்றிக் கழகமாக மாறி, கழகத்தோழர்களாக நாங்கள் மாறியிருக்கிறோம். எங்களுக்கு எல்லாமே அந்தப் பக்குவம் இருக்கு.

ஒவ்வொருவரும் கட்டுப்பாடோடு கலந்துகொள்வாங்க. கணக்கில்லாத ரசிகர்கள் தளபதி விஜய்க்கு இருக்காங்க. அதனால்,எத்தனைபேர் வருவாங்கன்னு சொல்லமுடியாது. அதனால் வரும் கழகத்தோழர்களையும் தோழிகளையும் வரவேற்க சந்தோஷமாகக் காத்திருக்கிறோம்’’ எனத் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக்கழக கொடிக்கம்பத்தின் சிறப்புகள்:

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு கொடிக்கம்பம் தயார் செய்தவர் அளித்த பேட்டியில், ’’தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமைக்கழகத்தில் பனையூரில் நாங்கள் தான் கொடிக்கம்பம் போட்டுக்கொடுத்தோம். அப்படி தான் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடுக்குக்கும் கொடிக்கம்பம் போடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதைச் செய்து கொடுத்தோம். இது முழுக்க இரும்புதான். 101 அடிக்குப் போடுகிறோம். இதனுடைய எடை 2ஆயிரம் கிலோ இருக்கும். இதை மூன்று பாகங்களாகப் பிரித்துக்கொண்டு வந்து மாட்டியிருக்கிறோம்.

துருப்பிடிக்காமல் இருப்பதற்காக கால்வனைசிங் செய்யப்பட்டு இருக்கிறது. இதிலேயும் இடிதாங்கி வைக்கப்படுகிறது. இதை நிலைநிறுத்துவதற்காக 6 அடி பள்ளம் தோண்டி, 6க்கு 12 அடி என்ற அளவில் ஃபவுண்டேசன் போட்டு இருக்கிறோம். இதில் பறக்கப்போகும் கொடியோட சைஸ் வந்து 20*30 அடி, அதாவது கிட்டத்தட்ட 600 சதுர அடி வரும் கொடியோட சைஸ் மட்டும்.

இந்த கொடி வந்து மோட்டார் ஃபங்ஷன் மூலமாக தான் கீழே இருந்து மேலே ஏறும். கொடி ஏறுகிற டைம் மட்டுமே 10 நிமிடங்கள் ஆகும். இந்தக் கொடிக்கம்பம் செய்யுறதுக்கு மட்டும் 10 நாட்கள் ஆச்சு. ஃபவுண்டேசன் ஒர்க் மட்டும் ஒரு வாரத்தில் செய்து முடிச்சுட்டோம். இன்றைக்கு கொடிக்கம்பத்தை நிறுத்திடுவோம்’’ என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வாழ்த்து தெரிவித்தார். மேலும், இந்த மாநாட்டுக்கு கிட்டத்தட்ட 5 லட்சம் தொண்டர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.