Needhikku Thalaivanangu: மக்களுக்காக மாற்றப்பட்ட கதை..கிளைமாக்ஸில் வியப்பை ஏற்படுத்திய எம்ஜிஆர்.. அதிரடி வெற்றி
Needhikku Thalaivanangu: 1976 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான் நீதிக்கு தலைவணங்கு. தமிழில் எம்ஜிஆரை வைத்து பா. நீலகண்டன் இயக்கினார். அந்த காலகட்டத்தில் இந்த திரைப்படத்தின் கிளைமாக்ஸ் மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது, அதேசமயம் வியப்பையும் ஏற்படுத்தியது.

இன்றோடு 48 ஆண்டுகளை கடக்கிறது நீதிக்கு தலை வணங்கு திரைப்படம். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.,யின் மெகா ஹிட் படங்களில் ஒன்று நீதிக்கு தலை வணங்கு. பி.நீலகண்டன் இயக்கத்தில், எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில், எம்.ஜி.ஆர்., லதா உள்ளிட்டோர் நடித்த திரைப்படம். படத்தின் தலைப்பை வைத்தே, படத்தின் கதையை கணித்து விட முடியும். அதில் ஒரு காட்சியை வைத்து, முடிவு செய்யலாம். இதோ அந்த அருமையான ஒரு காட்சி…
தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட தன் வீட்டு டிரைவரின் தங்கை ரோஜாரமணி (தனக்கு பதிலாக சிறை சென்ற கோபாலகிருஷ்ணனின் தங்கை)யை காப்பாற்றி தன் பாதுகாப்பில் வைத்திருப்பார் எம்ஜிஆர். அவசரத்திற்கு லாட்ஜ் ஒன்றில் ரூம் புக் செய்து தங்க வைத்திருப்பார். தான் வெளியே சென்றுவிட்டு வருவதாக செல்வார். சிறிது நேரத்தில் அந்த ரூமில் நுழைந்த ராமதாஸ், ரோஜாரமணியிடம் தவறாக நடக்க முயற்சிப்பார். அதே நேரம் எம்ஜிஆர் உள்ளே வந்து ராமதாஸை புரட்டி எடுத்து துரத்திவிடுவார்.
ரோஜாரமணி உடனே தலைவரிடம் அண்ணா, அவனை போலீஸில் பிடித்து கொடுக்காமல் விரட்டி விட்டுவிட்டீர்களே? என்று ஆதங்கப்படுவார். அதற்கு தலைவர், தங்கச்சி..அவனை பிடித்து போலீஸில் ஒப்படைப்பது பெரிய காரியமல்ல. ஆனால், உடனே போலீசில் நீ யார்? உனக்கும் எனக்கும் என்ன உறவு? என்று கேட்பார்கள்..என்பார். அதற்கு ரோஜா ரமணி தான் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தபோது காப்பாற்றியவர் இந்த அண்ணன் என்பேன்..என்று சொல்வார். உடனே தலைவர், தற்கொலை முயற்சிக்கு தனியாக உன்மேல் ஒரு வழக்கு விழும்.