Premalu Collection : வேற மாறி.. தமிழ்நாட்டில் ஹவுஸ் ஃபுல்.. ரூ.100 கோடி வசூலைக் கடந்தது பிரேமலு திரைப்படம்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Premalu Collection : வேற மாறி.. தமிழ்நாட்டில் ஹவுஸ் ஃபுல்.. ரூ.100 கோடி வசூலைக் கடந்தது பிரேமலு திரைப்படம்!

Premalu Collection : வேற மாறி.. தமிழ்நாட்டில் ஹவுஸ் ஃபுல்.. ரூ.100 கோடி வசூலைக் கடந்தது பிரேமலு திரைப்படம்!

Divya Sekar HT Tamil
Mar 13, 2024 08:53 AM IST

ஐந்து கோடி செலவில் எடுக்கப்பட்ட பிரேமலு படம் 100 கோடிக்கு மேல் தாண்டி வசூல் செய்து வருகிறது. காதலை மையமாக வைத்து உருவாகி உள்ள பிரேமலு படம் தமிழ்நாட்டில் ஹவுஸ் ஃபுல் காட்சிகளுடன் ஓடிக்கொண்டிருக்கிறது.

பிரேமலு
பிரேமலு

பிரேமம், ஹிருதயம்,மின்னல் முரளி, ஐயப்பனும் கோஷியும் என பல படங்களை சொல்லிக்கொண்டே போகலாம். அப்படி தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்த படங்களின் வரிசையில் சமீபத்தில் வெளியாகி மக்கள் மனதை கொள்ளையடித்த படம் பிரேமலு.

இயக்குனர் கிரீஷ் ஏ.டி இயக்கத்தில் மமிதா பைஜு, நஸ்லென் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள படம் பிரேமலு. மலையாள பிரபல நடிகர் ஃபகத் ஃபாசில் தயாரிப்பில் உருவான இந்த படம் கடந்த மாதம் 9 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியானது.

தண்ணீர் மாத்தன் தினங்கள் மற்றும் சூப்பர் சரண்யா போன்ற வெற்றி படங்களை இயக்கியதற்காக புகழ் பெற்ற இயக்குநர் தான் கிரீஷ் ஏ.டி. இந்த படத்தின் மூலம் மீண்டும் பார்வையாளர்களின் இதயங்களைக் கவர்ந்து உள்ளர் இயக்குநர் கிரீஷ். ரோம்-காம் வடிவில் உருவாகி உள்ள இந்த மலையாளத் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து வருகிறது.

நஸ்லென் கே. கஃபூர் மற்றும் மமிதா பைஜு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். பிரேமலு படம் தற்போதைய சினிமா உலகில் வெளியாகியுள்ள வித்தியாசமான காதல் திரைப்படம் ஆகும்.

இப்படம் பல இளைஞர்களின் மனதை கட்டி இழுதுள்ளது. கிரிஷ் ஏ.டி.யின் திறமையான இயக்கம் இந்த படத்தை நகைச்சுவையையும், இதய பூர்வமான படமாகவும் ஒரு தரமான சினிமா அனுபவத்தை நமக்கு தருகிறது.

எளிமையான அதே சமயம் வசீகரிக்கும் கதை களத்தை கொண்டிருக்கும் பிரேமலு படம் நகைச்சுவையுடன் நல்ல காதல் கதையையும் கொண்டிருப்பது வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது. நஸ்லென் கஃபூர் மற்றும் மமிதா பைஜு ஆகியோருக்கு இடையில் நடக்கும் அழகான காதல் ரசிகர்களுக்கு புதுவித சினிமா அனுபவத்தையும், அதே சமயம் பல இடங்களில் சிரிப்பையும் வர வைக்கிறது.

தனது இலட்சியங்களுக்கும் எதிர்பாராத காதலுக்கும் இடையில் சிக்கி தவிக்கும் ரீனுவாக மமிதா பைஜூவின் கதாபாத்திரம் கவனத்தை பெறுகிறது. இதனுடன், நஸ்லன் கஃபூர் சச்சினாக நிறைய இடங்களில் கைதட்டல்களை பெறுகிறார். அவரது கதாபாத்திரம் இயல்பான, அதே சமயம் அழகையும் அப்பாவித்தனத்தையும் கொண்டு உள்ளது.

சங்கீத் பிரதாப்பின் அமல் டேவிஸின் கதாபாத்திரம் கதைக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. கிரீஷ் ஏ.டி.யின் இயக்கத்தில் உருவாகி இயக்கும் இந்த பிரேமலு மலையாள சினிமாவில் வெளியாகி உள்ள மற்றொரு சிறந்த படமாக அமைந்துள்ளது. உண்மையில், இந்தப் படம் ஒரு மறக்க முடியாத சினிமா அனுபவமாக இருக்கும், இது "பிரேமம்" மற்றும் "லவ் டுடே" போன்ற சிறந்த ரோம்-காம் படங்களுக்கு போட்டியாக உள்ளது.

கூடுதலாக, மொழித் தடைகள் இல்லாத இத்திரைப்படத்தின் உலகளாவிய ஈர்ப்பு, கேரளாவில் மட்டுமின்றி, பிற மாநிலங்களிலும் பரவலான வசூலில் பங்களிதுள்ளது. மேலும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து டிரெண்டிங்கில் உள்ளது. பிரேமலு பாக்ஸ் ஆபிஸ் வெற்றியாக மட்டுமல்லாமல், மலையாள சினிமாவின் ட்ரெண்ட்செட்டர் ஆக மாறி உள்ளது. உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு ஒரு மறக்க முடியாத சினிமா பயணமாக இப்படம் மாறி இருக்கிறது.

காதலை மையமாக வைத்து உருவாகி உள்ள பிரேமலு படம் தமிழ்நாட்டில் ஹவுஸ் ஃபுல் காட்சிகளுடன் ஓடிக்கொண்டிருப்பதால் பாக்ஸில் வசூலை அள்ளி வருகிறது. ஐந்து கோடி செலவில் எடுக்கப்பட்ட இப்படம் 100 கோடிக்கு மேல் தாண்டி வசூல் செய்து வருகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.