MGR: இரட்டை வேடங்களில் எம்ஜிஆர்.. திரையரங்குகளை தெறிக்க விட்ட படம்.. மிகப்பெரிய வசூல் சாதனை செய்த குடியிருந்த கோயில்
இன்று வரை தமிழ் சினிமாவில் எந்த படமும் குடியிருந்த கோயில் திரைப்படத்தின் வசூல் சாதனையை முறியடிக்கவில்லை என்று கூறினால் அது மிகையாகாது. அந்த அளவிற்கு எம்ஜிஆர் திரை வரலாற்றில் மிகப் பெரிய ஹிட் கொடுத்து வசூல் சாதனை செய்த திரைப்படங்களில் இது சிறந்த படமாகும்.

தமிழ் சினிமாவில் தலைசிறந்த நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் எம்ஜிஆர். எம்.ஜி. ராமச்சந்திரன் என பெயர் எம் ஜி ஆர் ஆக மக்கள் மனதில் பதிந்தது. தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்தவர் இவர். பொன்மனச் செம்மல், புரட்சித் தலைவர், மக்கள் திலகம் என பல பெயர்களில் ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.
இல்லாதவர்களுக்கு அனைத்தையும் அள்ளி வாரி கொடுத்து வழங்கிய வள்ளலாக எம்ஜிஆர் இருந்த காரணத்தினால் சினிமா துறையில் மட்டுமல்லாது அரசியல் துறையிலும் வெற்றி கண்டார். சினிமாவிலும் முதல்வராகவும், அரசியலிலும் முதல்வராகவும் இருந்தவர் எம்ஜிஆர்.
மக்கள் மத்தியில் இவரை வெளிக்கொணர்ந்தது சினிமா தான். ஏகப்பட்ட படங்களில் சமுதாய கருத்துகளை எடுத்துக் கூறி புரட்சி படங்களின் மூலம் புரட்சித் தலைவராக உருவெடுத்தார் எம்.ஜி.ஆர். திரையிடப்படும் படங்களெல்லாம் வெற்றி, திரையரங்குகள் முழுவதும் ஹவுஸ் புல் போர்டு இருந்தன.
