MGR Shot: தொண்டையில் பாய்ந்த குண்டு.. நேரம் பார்த்து கோலி அடித்த TMS!..பதம் பார்த்த பணவெறி.. எம்.ஜி.ஆர் மீண்டெழுந்த கதை!
1967 காலக்கட்டங்களில் அவர் மீது துப்பாக்கிச்சூடு நிகழ்த்தப்பட்டது. அப்போதும் சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்களில் அவரின் வாழ்க்கையும் முடிந்து விட்டது என்று பேசத்தொடங்கினர்.
இது குறித்து பிரபல பத்திரிகையாளர் துரை கர்ணா ஆகாயம் தமிழ் யூடியூப் சேனலுக்கு பேசும் போது, “ 1959 ல் எம்.ஜி.ஆருக்கு கால் முறிவு ஏற்பட்டது. அப்போது சினிமாவில், எம்.ஜி.ஆரின் கதை முடிந்து விட்டது; இனி அவர் அவ்வளவுதான் என்ற பேச்சு எழுந்தது. ஆனால் அதையும் மீறி அவர் மீண்டெழுந்து வந்தார்.
அதே போலத்தான் 1967 காலக்கட்டங்களில் அவர் மீது துப்பாக்கிச்சூடு நிகழ்த்தப்பட்டது. அப்போதும் சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்களில் அவரின் வாழ்க்கையும் முடிந்து விட்டது என்று பேசத்தொடங்கினர். அவரால் சரியாக பேச முடியவில்லை. ள,ழ வெல்லாம் அவருக்கு வசப்படவில்லை. இருப்பினும் அவர் விடவில்லை. விடாப்பிடியாக முயற்சி செய்து கொண்டிருந்தார்.
அப்போது சில தயாரிப்பாளர்கள் எம்.ஜி.ஆரை அணுகி.. பிரபல பாடகர் டி.எம். செளந்தர்ராஜனை உங்களின் பின்னணி குரலாக பயன்படுத்தலாம் என்று ஆலோசனை சொன்னார்கள். அந்த ஆலோசனையின் படி, டி.எம். செளந்தர்ராஜனை அணுகி இது குறித்து கேட்ட போது.. அவர் நான் எம்.ஜி,ஆருக்காக நூற்றுக்கணக்கான பாடல்களை பாடியிருக்கிறேன். அப்படியிருக்கையில் அவரின் பின்னணி குரலாகவும் நான் மாற வேண்டும் என்றால், எம்.ஜி.ஆருக்கு சம்பளமாக என்ன தொகை கொடுக்கிறீர்களோ, அதே தொகையை எனக்கும் கொடுக்க வேண்டும் என்று சொன்னார்.
இதை எம்.ஜி. ஆரிடம் சொன்ன போது, அவருக்கும் நான் வாங்கும் சம்பளம் கொடுக்கப்பட்டால் தயாரிப்பாளருக்கு இரட்டிப்பு செலவு ஏற்படும். ஆகையால் நானே முயற்சி செய்கிறேன் என்று டப்பிங் பேசினார். அவருக்கு அந்தளவு மன உறுதி இருந்தது.” என்று பேசினார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்