தமிழ் செய்திகள்  /  Entertainment  /  35 Years Of Unnal Mudiyum Thambi Unnalal Mudiyum Thambi Is A Film That Shows That Change Is The Only Constant

35 Years of Unnal Mudiyum Thambi : மாற்றங்கள் மட்டுமே மாறாதது என்பதை சுட்டிக்காட்டிய படம் உன்னால் முடியும் தம்பி!

Priyadarshini R HT Tamil
Aug 12, 2023 04:30 AM IST

35 Years of Unnal Mudiyum Thambi : பின்னாளில் தந்தையை மகன் திருத்துவாரா என்பதுதான் படத்தின் கதை. கதாநாயகியாக சீதா, ஊரின் நன்மைக்காக கமல் செய்யும் செயல்களுக்கு துணைபுரிவார். சதாரணமான மரத்தை சுற்று டூயட் பாடும் கதாநாயகியாக அல்லாமல் சமூக சிந்தனை உள்ளவராக நடிப்பில் கலக்கியிருப்பார்.

உன்னால் முடியும் தம்பி பட போஸ்டர்
உன்னால் முடியும் தம்பி பட போஸ்டர்

ட்ரெண்டிங் செய்திகள்

புலமைபித்தன், இளையராஜா, முத்துராமலிங்கம் ஆகியோர் இந்தப்படத்தின் பாடல்களை பாடியிருந்தார்கள். படத்துக்கு இளையராஜ இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்துமே படு ஹிட். அக்கம் பக்கம் பாரடா சின்னராஜா, என்ன சமையலோ, புஞ்ஜை உண்டு, நஞ்ஜை உண்டு பொங்கிவரும் கங்கை உண்டு, மானிட சேவை, நீ ஒன்று தான் ஆகிய பாடல்கள் இன்றளவும் நினைவில் நிற்பவை. உன்னால் முடியும் தம்பி தம்பி பாடல் சோர்ந்திருந்த இளைஞர்களுக்கு உத்வேகமளிக்கும் பாடல். இதழில் கதை எழுதும் நேரம் இது பாடல் ரொமாண்டிக் டூயட் பாடல். இன்று வரை இளையராஜாவின் ஹிட் பாடல்களுள் இடம் பெற்றுள்ள பாடல்களுள் ஒன்று.

படம் ஃபிளாஷ்பேக் கதைதான். அந்த காலத்தில் ஃப்ளாஷ் பேக் கதைகளுக்கென்று ஒரு பிரத்யேக டெக்னிக்க இருக்கும். அது பிற்காலத்தில் கேலிக்கு உள்ளானது. எம்பியான வி.கே.ராமசாமி ஒரு கிராமத்திற்குள் நுழைவார். அந்த கிராமம் சுத்தமாக இருக்கும். ஒருவர் கூட குடிக்க மாட்டார்கள். இதைப்பார்த்த அவர் வியந்து இதற்கான காரணம் என்ன என்று கேட்பார். அப்போதுதான் இவையனைத்தும் கமல் மற்றும் சீதாவின் முயற்சி என்று தெரியவரும். இது எவ்வாறு சாத்தியமானது என்ற ஃபிளாஷ்பேக்தான் கதையே.

கமலின் தந்தையாக நடித்துள்ள ஜெமினி கணேசன், ஒரு கர்நாடக சங்கீத மேதை. அவரது இளைய மகன்தான் கமல், அவரு ஒரு பிரிவினரிடம் பாகுபாடு காட்டுவார். ஆனால் கமல் அதை எதிர்ப்பதுடன், அது தவறு என்றும் சுற்றிக்காட்டுவார். 

பின்னாளில் தந்தையை மகன் திருத்துவாரா என்பதுதான் படத்தின் கதை. கதாநாயகியாக சீதா, ஊரின் நன்மைக்காக கமல் செய்யும் செயல்களுக்கு துணைபுரிவார். சதாரணமான மரத்தை சுற்று டூயட் பாடும் கதாநாயகியாக அல்லாமல் சமூக சிந்தனை உள்ளவராக நடிப்பில் கலக்கியிருப்பார்.

ருத்ர வீணை என்ற தெலுங்கு படத்தின் ரீமேக்தான் உன்னால் முடியும் தம்பி படம். உதயமூர்த்தி என்ற உண்மையாக செயற்பாட்டாளரின் பெயர்தான் கமலுக்கு படத்தில் வைக்கப்பட்டிருக்கும். 

ஏனெனில் கமல் சமூக சிந்தனையுள்ள ஒரு நபராக படத்தில் நடித்திருப்பார். ஜெமினி கணேசன் பிலஹரி மார்த்தாண்டம் பிள்ளை என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். முதலில் இந்தப்படத்தில் கதாநாயகியாக நதியாதான் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவருக்கு வேறு படங்கள் இருந்ததால், சீதா இந்தப்படத்தில் நடித்தார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்