24 Years of Kandukondain Kandukondain : இசை, ரொமான்ஸ் என பட்டையை கிளப்பிய கண்டுகொண்டேன்; கண்டுகொண்டேன் படம்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  24 Years Of Kandukondain Kandukondain : இசை, ரொமான்ஸ் என பட்டையை கிளப்பிய கண்டுகொண்டேன்; கண்டுகொண்டேன் படம்!

24 Years of Kandukondain Kandukondain : இசை, ரொமான்ஸ் என பட்டையை கிளப்பிய கண்டுகொண்டேன்; கண்டுகொண்டேன் படம்!

Priyadarshini R HT Tamil
May 05, 2024 06:00 AM IST

24 Years of Kandukondain Kandukondain : இசை, ரொமான்ஸ் என பட்டையை கிளப்பிய கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படம், வெள்ளி விழா ஆண்டை நெருங்குகிறது.

24 Years of Kandukondain Kandukondain : இசை, ரொமான்ஸ் என பட்டையை கிளப்பிய கண்டுகொண்டேன்; கண்டுகொண்டேன் படம்!
24 Years of Kandukondain Kandukondain : இசை, ரொமான்ஸ் என பட்டையை கிளப்பிய கண்டுகொண்டேன்; கண்டுகொண்டேன் படம்!

அஜீத் மற்றும் அப்பாஸ் இருவரும் வெவ்வேறு பணிகளுக்காக அந்த கிராமத்திற்கு வருவார்கள். அப்போது தபு மீது அஜீத்தும், ஜஸ்வர்யா ராய் மீது அப்பாசும் காதல் வயப்படுவார்கள். 

இவர்களின் நண்பராக இருப்பவர் மம்முட்டி, ராணுவ வீரராக பணிபுரிந்தபோது, இந்திய அமைதிப்படையில் மேஜராக இருப்பார். அப்போது அவர் போரில் தனது கால்களை இழந்திருப்பார்.

அஜீத், தான் ஒரு இயக்குனராக வேண்டும் என்ற லட்சியத்துடன் உழைத்துக்கொண்டிருப்பார். இந்நிலையில், ஸ்ரீவித்யாவின் தந்தை இறந்துவிடவே அவரது உயில் படி அவரது சொத்துக்கள் அனைத்தும் அவரது மகனுக்கே சென்றுவிடும். 

இந்நிலையில் அவரது குடும்பத்தினர் தங்கள் சொந்த வீட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படும்.

அவர்கள் சென்னைக்கு குடிபெயர்ந்து சிரமப்பட்டுக்கொண்டிருப்பார்கள். முதலில், தபுவுக்கு ஒரு வேலை கிடைக்கும். அதில் வரும் வருமானத்தை வைத்து அவர்களின் குடும்பம் நடத்திக்கொண்டிருப்பார்கள். ஜஸ்வர்யா ராய், நன்றாக பாடுவார். அவர் சினிமாவுக்காக பாடல் பாடிக்கொண்டிருப்பார்.

இந்நிலையில் அஜீத் ஒருபுறத்தில் தனது லட்சியத்தை நோக்கி, சென்றுகொண்டிருப்பார். ஆனால் அப்பாஸ், குடும்பத்தினரின் நன்மைக்காக வேறு ஒரு பெண்ணை திருமண் செய்துகொள்வார்.

இந்த விவரம் ஜஸ்வர்யா ராய்க்கு தெரியவர, அவர் ஒரு விபத்தில் சிக்குவார். அவரை ஒரு தலையாக காதலித்த மம்மூட்டி ஜஸ்வர்யா ராயை காப்பாற்றி தேற்றுவார். அவர்கள் இருவருக்குள்ளும் ஒரு புரிதல் ஏற்படும்.

அஜீத், தொடர்ந்து தனது லட்சிய பயணத்துக்காக ஓடிக்கொண்டிருக்கும்போது, தபுவை ராசியில்லாதாவர் என அனைவரும் கூறுவார்கள். அதனால் தபு, அஜீத்திடம் இருந்து விலக நினைப்பார். இவர்களின காதல் என்னவாகும். இவர்களின் பொருளாதார நிலையும் என்னவாகும் என்பதுதான் கதை.

இந்தப் படத்தை ராஜிவ் மேனன் இயக்கியிருப்பார். தாணு தயாரித்திருப்பார். இந்த படத்தின் டயலாக்குகளை சுஜாதா எழுதியிருப்பார். ரவி கே.சரண் ஒளிப்பதிவும், சுரேஷ் அர்ஸ் எடிட்ங்கும் செய்திருப்பார்கள். 

ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் அனைத்து பாடல்களும் ஹிட். 2000மாவது ஆண்டு மே 5ம் தேதி இந்தப்படம் வெளியானது. வெள்ளி விழா ஆண்டை இந்தப்படம் தற்போது நெருங்குகிறது.

இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் இன்று வரை நினைவில் நிற்பவை. என்ன சொல்லப் போகிறாய், கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன், கண்ணாமூச்சி ஏனடா, சுட்டும் விழிச்சுடர்தான், கொஞ்சம் மைனாக்களே, கொஞ்சும் மைனாக்களே, எங்கே எனது கவிதை என அனைத்து பாடல்களும் இன்று வரை விரும்பப்படுபவை என்பதால், இந்தப்படம் இசை ஹிட்டானது. ரொமான்சும் நன்றாக இருக்கும். பாடல்கள் அனைத்தையும் வைரமுத்து எழுதியிருப்பார்.

இந்தப் படத்துக்கு நல்ல விமர்சனமும் கிடைத்தது. பத்திரிக்கைகள் இந்தப் படத்தை பாராட்டின. பெண்கள் முன்னேற்றத்தை சித்தரிக்கிறது என்ற நேர்மறையான விமர்சனம் இந்த படம் ஹிட்டாக உதவியது.

இந்தப்படம் மில்லினியம் ஆண்டின் முதல் படமாக 2000மாவது ஆண்டு ஜனவரி 1ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் அது நடக்கவில்லை. இந்தப்படம் வெளியான நாளில் இந்தப்படம் குறித்த சில விஷயங்களை ஹெ.டி. தமிழ் நினைவுகூறுகிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.