School Education Director : பள்ளிக்கல்வித்துறை இயக்குனராக அறிவொளி நியமனம்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  School Education Director : பள்ளிக்கல்வித்துறை இயக்குனராக அறிவொளி நியமனம்

School Education Director : பள்ளிக்கல்வித்துறை இயக்குனராக அறிவொளி நியமனம்

Priyadarshini R HT Tamil
Jun 05, 2023 05:12 PM IST

பள்ளிக்கல்வித்துறைக்கு மீண்டும் இயக்குனர் நியமிக்கப்பட்டுள்ளார். 2 ஆண்டுகளுக்குபின் தமிழக அரசு இந்த மாற்றத்தை செய்துள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம்

திமுக ஆட்சி பொறுப்பேற்ற முதல் மாதத்திலேயே பள்ளிக்கல்வி துறையில் அதிகாரங்களைக்கொண்ட ஆணையர் பதவி உருவாக்கப்பட்டது.

இதன் மூலம், 150 ஆண்டுகளாக இயக்குனர் பதவியில் இருந்த அதிகாரம் ஆணையருக்கு மாறியது. இந்த அறிவிப்பு பல்வேறு அரசியல் கட்சிகள் இடையேயும், ஆசிரியர் சங்கங்களிடையேயும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டார். நந்தக்குமார் ஐஏஎஸ்ஸிடம் துறையின் தலைமை பொறுப்பு மற்றும் அதிகாரங்கள் ஒப்படைக்கப்பட்டன.

அவர் பள்ளிக்கல்வி நிர்வாக முறைகளில் மாற்றங்களைக்கொண்டு வந்தார். இதில் பணியாளர்கள் மத்தியில் ஆதரவு மற்றும் எதிர்ப்பு நிலவியது.

அதே நேரத்தில் பெரும்பாலான ஆசிரியர் சங்கங்கள் துறையின் தலைமை பொறுப்பை மீண்டும் இயக்குனர் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தன. ஆணையரை மாற்ற வேண்டும், ஆணையரை நீக்க வேண்டும் என்று பல சங்கங்கள் தரப்பில், முதல்வரிடம் மனு அளிக்கப்பட்டன.

இந்நிலையில் பள்ளிக்கல்வி ஆணையர் நந்தக்குமார் மாற்றப்பட்டு, மனித வள மேம்பாட்டுத்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். பள்ளிக்கல்வி ஆணையர் பதவிக்கு யாரும் நியமிக்கப்படவில்லை.

இதையடுத்து, பள்ளிக்கல்வியின் தலைமை பொறுப்பு, மீண்டும் இயக்குனர்களில் ஒருவருக்கு வழங்கப்படும் என்று தகவல்கள் பரவின. ஆனால், ஆணையர் பதவியை உருவாக்கி செயல்படுத்திவிட்டு, மீண்டும் இயக்குனர் பதவியை கொண்டு வருவது சிக்கலை உருவாக்கும் என அதிகாரிகள் கருதினர்.

மேலும் திமுக அரசுக்கு தங்கள் ஆதரவை அளிக்கும் ஆசிரியர் சங்கத்தின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் இயக்குனர் பதவிக்கு முக்கியத்துவம் அளிக்கலாம் என முதல்வருக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பள்ளிக்கல்வித்துறையில் இயக்குனர் பதவி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன்படி, பள்ளிக்கல்வித் துறை இயக்குநராக தொடக்கக் கல்வி இயக்குனர் அறிவொளி நியமிக்கப்பட்டிருக்கிறார்.

அதேபோல், கடந்த 2021ம் ஆண்டு இறுதியாக பள்ளிக் கல்வித் துறையின் இயக்குனராக இருந்த மு.கண்ணப்பன், தற்போது தொடக்கக் கல்வி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.