தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  A.r.rahman Speech: 'எனக்கு நண்பராக, வாத்தியாராக இருக்கிறார் இயக்குநர் மணிரத்னம்'

A.R.Rahman Speech: 'எனக்கு நண்பராக, வாத்தியாராக இருக்கிறார் இயக்குநர் மணிரத்னம்'

Kalyani Pandiyan S HT Tamil
Mar 29, 2023 10:54 PM IST

Ponniyin Selvan Part 2: 'சில சமயங்களில் மணி சார் எப்போது கம் பேக் தர போகிறார் என்று கேட்கிறார்கள். என்னையும் கேட்கிறார்கள். தயவுசெய்து ஊக்கப்படுத்துங்கள்.'

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், இயக்குநர் மணி ரத்னம்
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், இயக்குநர் மணி ரத்னம் (@MadrasTalkies_)

ட்ரெண்டிங் செய்திகள்

மணி சார் எனக்கு 31 வருடங்களாக வேலை கொடுத்து கொண்டு இருக்கிறார். அவர் எனக்கு நண்பனாக, வாத்தியாராக இருந்து இருக்கிறார்.

சில சமயங்களில் மணி சார் எப்போது கம் பேக் தர போகிறார் என்று கேட்கிறார்கள். என்னையும் கேட்கிறார்கள். தயவுசெய்து ஊக்கப் படுத்துங்கள்.

இந்திய படங்களை உலக அளவிற்கு அவர் எடுத்து சென்றிருக்கிறார் என்றார் ஏ.ஆர்.ரகுமான்.

நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது:

உயிரே உறவே தமிழே! எந்த மேடைக்கு போனாலும் இந்த வார்த்தை மாறாது. அது கீழே உட்கார்ந்து இருக்கும் சிம்புவுக்கு தெரியும்.

என்னிடம் என்னுடைய ஷெடியூல் என்ன என்று கேட்பார்கள். எப்படி இப்படி வேலை செய்கிறீர்கள் என்பார்கள்.

நான் வேலைக்கு சென்று மிக நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. நான் பிடித்ததை செய்ய பணம் கொடுக்கிறார்கள்.

எனக்கும் மணிக்குமான (இயக்குநர் மணிரத்னம்) தொடர்பு நாயகனுக்கு முன்பு தொடங்கியது. இப்போதும் தொடர்கிறது.

இதை மணிரத்னத்திற்கான பாராட்டு விழா என்று நினைத்து கொள்ளலாம். நேற்று முன்தினம் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பிரமாண்டமான ஆர்க்கெஸ்ட்ரா மூலம் இசை ஒன்றை எனக்கு செய்து காண்பித்தார். நான் நெகிழ்ந்து விட்டேன். என்னால் பேச கூட முடியவில்லை. பின்னர் ஏ. ஆர்.ரகுமானிடம் பேசினேன். இப்படிப்பட்ட கலைஞர்கள் ஒன்று சேர்ந்ததில் பெருமை.

நடிகர் கமல் ஹாசன்
நடிகர் கமல் ஹாசன்

காதலா வீரமா என்றார்கள்... அது மணிரத்னத்தின் காதல். கல்கியின் மீது அவர் கொண்ட காதல். நானும் அவருக்கு காதலர்தான். காதலும் வீரமும் முதலில் அதை தாண்டித்தான் பக்தி மயம்.

ஐஸ்வர்யாராய் மீண்டும் உலக அழகி என்பதை மணிரத்னம் காண்பித்து விட்டார்.

எல்லோரும் பொன்னியின் செல்வனை எப்படி எடுக்க முடியும் என்றார்கள். ஆனால் மணி செய்து காண்பித்துவிட்டார்.

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்