19 Years of Chandramukhi : ‘ராரா சரசக்கு ராரா’ திரையை மிரட்டிய சந்திரமுகி வெளியாகி எத்தனை ஆண்டுகள் தெரியுமா?
19 Years of Chandramukhi : சந்திரமுகி மலேசியா, ஸ்ரீலங்கா, அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலக நாடுகளிலும் வெளியானது. ஜப்பானின் 18வது டோக்கியோ திரைப்பட விழாவில் இந்த படம் திரைப்படப்பட்டது. இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
சந்திரமுகி, பேய், காமெடி, மனோதத்துவம் மூன்றும் கலந்த திரைப்படம். முக்கிய கதாபாத்திரத்தில் ரஜினி, ஜோதிகா, பிரபு, நயன்தாரா ஆகியோர் நடித்திருப்பார்கள். இந்தப்படத்தை எழுதி இயக்கியவர் பி.வாசு. இது வாசுவின் ஆப்தமித்ரா என்ற படத்தின் கன்னட படம்தான் சந்திரமுகி.
இந்தப்படம் 1993ம் ஆண்டு வெளியான மணிச்சித்திரதாழு என்ற மலையாளப் படத்தின் அடிப்படைதான். படத்தில் நாசர், வடிவேலு, விஜயகுமார், கே.ஆர்.விஜயா, வினித், மாளவிகா உள்ளிட்ட பலர் நடித்திருப்பார்கள்.
சந்திரமுகியின் கதை
அமெரிக்காவில் இருந்து வந்த உளவியல் நிபுணர் சரவணன். செந்தில்நாதன் மற்றும் அவரது மனைவி கங்காவின் நண்பர். செந்திலின் தாயார் கஸ்தூரி அவரது உறவினர் பிரியாவை அவருக்கு திருமணம் செய்து வைக்க விரும்புவார். ஆனால் செந்தில், கங்காவை விரும்பி திருமணம் செய்துகொள்வார்.
இதனால் அவர்களின் உறவு பாதிக்கப்படும். இந்நிலையில் பிரியாவின் வீட்டிற்கு செந்திலும், கங்காவும் செல்வார்கள். இருவரும் சமாதானம் பேசுவார்கள். அந்த ஊரில் உள்ள அரண்மனையை வாங்குவார்கள். அங்கு அனைவரும் ஒன்றாக தங்குவார்கள்.
அந்த அரண்மனையில் துர்காவும், அவரது தாத்தாவுடன் தங்கியிருப்பார். இந்நிலையில் அந்த அரண்மனையில் பேய் இருப்பதாக கூறப்படும். இதில் ஆர்வமடைந்த கங்கா அரண்மனையில் செல்லக்கூடாது என்று கூறப்பட்ட பகுதிக்கு செல்வார்.
அங்கு அந்த அரண்மனையில் ஏற்கனவே வாழ்ந்து கொல்லப்பட்ட சந்திரமுகியின் பொருட்கள் இருக்கும். அவற்றையெல்லாம் அணிந்து மகிழ்வார். இதனால் அவர் சந்திரமுகியாகியாக தன்னை எண்ணிக்கொள்வார்.
இந்நிலையில், அவர் வேட்டைய மகாராஜாவை கொல்லவேண்டும் என்று எண்ணுவார். அதுமுதல் வீட்டில் பல்வேறு அசம்பாவிதங்கள் நடைபெறும். சந்திரமுகி, தனது எதிர்வீட்டில் இருக்கும் குணசேகரனை காதலிப்பார். இப்போது சந்திரமுகியாக தன்னை எண்ணிக்கொள்ளும் கங்காவும், எதிர்வீட்டில் வசிக்கும் விஸ்வநாதனை காதலிக்கத் துவங்குவார்.
ஆனால் உண்மையில் விஸ்வநாதனும், பிரியாவுன் காதலிப்பார்கள். அவர்கள் பெற்றோரின் சம்மதம் பெறுவதற்காக காத்துக்கொண்டிருப்பார்கள். ஆனால், தன்னை சந்திரமுகியாக எண்ணிக்கொள்ளும் கங்கா விஸ்வநாதனிடம் தவறாக நடந்துகொள்ளும்போது, இந்த பிரச்னைகள் அனைத்தும் வெளிச்சத்திற்கு வரும்.
இதற்கிடையில், சந்திரமுகியால் பாதிக்கப்பட்டவராக அனைவரும் துர்காவை கருதுவார்கள். இந்நிலையில், இந்தப்பிரச்னைகளை தீர்க்க வந்த சரவணனும், ஜோதிட ரீதியாக பிரச்னைகளை தீர்க்கவும் முயற்சிகள் எடுத்து கிளைமேக்ஸில் கங்கா தெளிவாரா? சந்திரமுகி அழிவாரா? செந்தில்நாதனின் நிலை என்னவாகும் என்பது தெரியும்.
கங்கா மற்றும் சந்திரமுகியாக மாறி மாறி நடித்து ஜோதிகா அதகளப்படுத்தியிருப்பார். ராரா சரசக்கு ராரா என்ற பாடல் படம் வெளியான காலத்தில் பட்டிதொட்டியெல்லாம் பரவியது.
வித்யாசாகரின் இசையில் தேவுடா தேவுடா, கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம், அத்திந்தோம், கொக்கு பரபர கோழி பரபர, அண்ணனோட பாட்டு, ராரா ஆகிய பாடல் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட். இந்தப்படம் 2005ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டுக்கு வெளியானது.
சந்திரமுகி மலேசியா, ஸ்ரீலங்கா, அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலக நாடுகளிலும் வெளியானது. ஜப்பானின் 18வது டோக்கியோ திரைப்பட விழாவில் இந்த படம் திரைப்படப்பட்டது. இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் நல்ல விமர்சனத்தையும் பெற்றது. பல அங்கீகாரங்களையும், விருதுகளையும், பாராட்டுக்களையும் பெற்றது. 20 ஆண்டுகளை நெருங்கும் சந்திரமுகி படம் குறித்து ஹெச்.டி. தமிழ் பகிர்ந்துகொள்கிறது.
டாபிக்ஸ்