Water Hydrogel : பெங்களூர் நிபுணர்கள் அசத்தல் ஆய்வு! – நீரில் இருந்து பிளாஸ்டிக் துகள்களை நீக்கலாம்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Water Hydrogel : பெங்களூர் நிபுணர்கள் அசத்தல் ஆய்வு! – நீரில் இருந்து பிளாஸ்டிக் துகள்களை நீக்கலாம்!

Water Hydrogel : பெங்களூர் நிபுணர்கள் அசத்தல் ஆய்வு! – நீரில் இருந்து பிளாஸ்டிக் துகள்களை நீக்கலாம்!

Priyadarshini R HT Tamil
Apr 13, 2024 04:22 PM IST

Water : தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளிலும், அனைத்து மீன்களிலும் பிளாஸ்டிக் சிறுதுகள்கள் இருப்பது சமீபத்தில் ஆய்வில் உறுதிபடுத்தப்பட்ட நிலையில், தமிழக அரசு இத் தொழில்நுட்பத்தை விரைந்து பயன்படுத்தி குடிநீர், நீர்நிலைகளில் உள்ள பிளாஸ்டிக் சிறுதுகள்களை நீக்க முன்வந்தால் சிறப்பாக இருக்கும்.

Water Hydrogel : பெங்களூர் நிபுணர்கள் அசத்தல் ஆய்வு! – நீரில் இருந்து பிளாஸ்டிக் துகள்களை நீக்கலாம்!
Water Hydrogel : பெங்களூர் நிபுணர்கள் அசத்தல் ஆய்வு! – நீரில் இருந்து பிளாஸ்டிக் துகள்களை நீக்கலாம்!

சென்னை மற்றும் தமிழக குடிநீர் ஆதாரங்கள் மற்றும் மீன்களில் பிளாஸ்டிக் சிறுதுகள்கள் அதிகம் இருப்பது சமீபத்தில் ஆய்வுகளில் உறுதிபடுத்தப்பட்ட நிலையில், அதற்கான தீர்வை IISc பெங்களூரு அறிவியல் நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.

இதை நாம் பருகுவதால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. இதுகுறித்து உடனடியாக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் நிலவி வந்தன. அதற்காக சிறுசிறு ஆராய்ச்சிகளும் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், பிளாஸ்டிக் சிறுதுகள்களை நீரிலிருந்து நீக்கும், நீடித்துழைக்கும் நீர்பசை (Hydrogel) ஒன்றை அவர்கள் கண்டறிந்து அசத்தியுள்ளனர்.

உடம்பில் நுழையும் பிளாஸ்டிக் சிறுதுகள்கள் பல்வேறு சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்த முடியும் என்பது ஆய்வுகளில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

புதிதாக கண்டறியப்பட்ட நீர்பசையில் உள்ள பாலிமர்கள் (Polymers) பிளாஸ்டிக் சிறுதுகள்களோடு தன்னை இணைத்துக் கொண்டு அதைப் பிரித்தெடுப்பதுடன், புற ஊதாக் கதிர்களை பயன்படுத்தி அதை சிறுதுகள்களாக உடைத்து அதன் பிரச்னையை குறைக்கிறது.

அதற்கு முன்னர் அறிவியல் நிபுணர்கள் தகுந்த சவ்வுகளை (Filtering Membranes) பயன்படுத்தி பிளாஸ்டிக் சிறுதுகள்களை பிரித்தெடுக்கும்போது, அவை சவ்வுகளை அடைத்துக்கொள்வதால், அதை நீடித்து பயன்படுத்த முடியாமல் போகிறது.

அதனால் சூர்யசாரதி போஸ் தலைமையில் ஆராய்ந்த நிபுணர்கள், முப்பரிமாண நீர்பசையை (3D Hydrogel) உருவாக்கி, அதில் 3 பாலிமர் ஏடுகள் கைச்டோசான், பாலிவினைல் ஆல்கஹால், பாலிஅனிலின் 3ம் ஒன்றோடு ஒன்று பிணைந்து Interpenetrating Polymer Network (IPN)ஐ உருவாக்கியுள்ளனர்.

இம்முப்பரிமாண அமைப்பில் Copper substitute Polyoxometalateஐ (Cu-POM) இணைத்து அவை புறஊதாக் கதிர்களின் உதவியுடன் பிளாஸ்டிக் சிறுதுகள்களை, சிறு துகள்களாக பிரச்னையற்ற பொருளாக மாற்றும் வினையூக்கிகளாக செயல்படுகின்றன.

நீர்பசை மற்றும் நானோ காப்பர் துகள்கள் இரண்டும் இணைந்து, பிளாஸ்டிக் சிறுதுகள்களை பிரித்தெடுக்கவும் (Adsorbtion), அதை பின்னர் பிரச்னையற்ற சிறுதுகள்களாக உடைக்கவும் பயன்படுகிறது.

நீரில் உள்ள இருவித பிளாஸ்டிக் சிறுதுகள்களை (Microplastics), 95 சதவீதம், 93 சதவீதம் நீக்கி, பெருமளவு அவற்றை நீக்கும் பணியை புதிதாக உருவாக்கப்பட்ட இத்தொழில்நுட்பம் திறம்பட செய்கிறது.

Nanoscale எனும் அறிவியல் ஆய்விதழில் இக்கட்டுரை வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளிலும், அனைத்து மீன்களிலும் பிளாஸ்டிக் சிறுதுகள்கள் இருப்பது சமீபத்தில் ஆய்வில் உறுதிபடுத்தப்பட்ட நிலையில், தமிழக அரசு இத் தொழில்நுட்பத்தை விரைந்து பயன்படுத்தி குடிநீர், நீர்நிலைகளில் உள்ள பிளாஸ்டிக் சிறுதுகள்களை நீக்க முன்வந்தால் சிறப்பாக இருக்கும்.

தமிழக அரசு செவிசாய்க்குமா?

நன்றி – மருத்துவர். புகழேந்தி

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.