Vande Bharat Sleeper Train: முதல் வந்தே பாரத் படுக்கை வசதி ரயில்! வெளியான புகைப்படம் - என்னென்ன வசதி பாருங்க
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Vande Bharat Sleeper Train: முதல் வந்தே பாரத் படுக்கை வசதி ரயில்! வெளியான புகைப்படம் - என்னென்ன வசதி பாருங்க

Vande Bharat Sleeper Train: முதல் வந்தே பாரத் படுக்கை வசதி ரயில்! வெளியான புகைப்படம் - என்னென்ன வசதி பாருங்க

Apr 10, 2024 09:00 PM IST Muthu Vinayagam Kosalairaman
Apr 10, 2024 09:00 PM , IST

  • 13 மணி நேர பயணத்தை வெறும் 10 நேரத்தில் சென்றடையும் கோரக்பூர் - ஆக்ரா இடையிலான வந்தே பாரத் படுக்கை வசதி ரயில் சேவை விரைவில் தொடங்கப்படவுள்ளது. தற்போது வந்தே பாரத் படுக்கை வசதி ரயிலின் சில புகைப்படங்கள் வெளியிடப்படப்பட்டுள்ளது. 

நீண்ட தூர பயணத்தை குறைவான நேரத்தில் சென்றடையும் இந்திய தொழில்நுட்பத்தில் செயல்படக்கூடிய ரயிலாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் உள்ளன. நாட்டின் தகவல் தொடர்பு துறையில் புரட்சியை ஏற்படுத்தும் விதமாக இந்த வந்தே பாரத் ரயில்கள் உள்ளன. இதன் வருகைக்கு பின்னர் நாட்டின் பல்வேறு பிரதான நகரங்களுக்கு இடையிலான பயண நேரம் வெகுவாக குறைந்துள்ளது. 

(1 / 6)

இந்த ரயிலில் பயணம் செய்யும் லட்சக்கணக்கான பயணிகள் விரைவாகவே தாங்கள் செல்ல வேண்டிய இடத்தை அடைகிறார்கள். தற்போது வரை இந்த ரயில் பயணமானது உட்கார்ந்தவாறே இருந்த நிலை மாறி விரைவில், படுக்கும் வசதி பயணமாக உருமாறுகிறது. விரைவில் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், அந்த ரயில் பெட்டியின் உள்புறம் புகைப்படம் மூலம் அதில் இருக்கும் வசிதிகள் என்னென்ன என்பது தெரியவந்துள்ளது   

(2 / 6)

படுக்கை வசதி கொண்ட முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் உத்தரபிரதேசம் மாநிலம் ஆக்ராவில் இருந்து கோரக்பூர் வரை இயக்கப்படவுள்ளது. 13 மணி நேர ரயில் பயணமான இருக்கும் இந்த ரயில் பயணம் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மூலம் 10 மணி நேரமாக குறைகிறது. கோரக்பூரில் இருந்து கான்பூர் வழியாக ஆக்ராவை சென்றடைகிறது. இந்த ரயில் பின்னர் புதுடெல்லி வரை நீடிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது

(3 / 6)

வந்தே பாரத் படுக்கை வசதி ரயில் மணிக்கு 160கிமீ வேகத்தில் செல்லும் என கூறப்படுகிறது. பயணிகள் வசதிக்கு அனைத்து தொழில்நுட்ப வசதிகளுடன் முழுவதுமாக ஏசி பெட்டிகளுடன் இந்த ரயில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயிலின் உள்புறத்தில் சிறப்பு மிக்க பேப்ரிக் மற்றும் வண்ணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. டாய்லெட் உலக தரத்திலான வசதியில் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது

(4 / 6)

வந்தே பாரத் படுக்கை வசதி ரயிலின் புகைப்படத்தை இந்திய ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது. எல்ஈடி லைடிங், சீலிங் லைட்டிங் என விமானம் போல் பளபளப்பாக ரயில் முழுவதும் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேல்புற படுக்கைக்கு செல்வதற்கு ஏணி படி வசதியும் அமைக்கப்பட்டுள்ளது. படுக்கை வசதி கொண்ட இரண்டு ஓரப்பகுதி சீட்களிலும் சிறப்பு மஞ்சள் லைட்டுகள் பயன்படுத்தப்படுத்தப்பட்டுள்ளன

(5 / 6)

வந்தே பாரத் படுக்கை வசதி ரயிலை இயக்குவதற்கான அனைத்து தயார் நிலையில் பணிகளும் முடிவடைந்துள்ளதாக வடக்கு ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் கிருஷ்ணா கெளதம் கூறியுள்ளார். கோரக்பூர் கோட்டம் பொதுமேலாளரும் இந்த ரயில் இயக்குவதற்கான அனுமதி பெற்றுவிட்டாராம். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருப்பதால் வரும் ஜுன் 4 வரை எந்த அரசியல் தலைவர்களும் ரயில் இயக்கத்தை தொடங்கி வைக்க மாட்டார்கள் என தெரிகிறது

(6 / 6)

மற்ற கேலரிக்கள்