தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Durai Murugan: ‘வாக்குச்சீட்டு வந்தால் பிரச்னை வரும்! Evmதான் வேணும்!’ ஓட்டு போட்ட பின் துரைமுருகன் பேட்டி!

Durai Murugan: ‘வாக்குச்சீட்டு வந்தால் பிரச்னை வரும்! EVMதான் வேணும்!’ ஓட்டு போட்ட பின் துரைமுருகன் பேட்டி!

Kathiravan V HT Tamil
Apr 19, 2024 10:39 AM IST

”நான் அந்த மாதிரி வசனம் பேசி ரொம்ப நாள் ஆகிவிட்டது. அவருக்கு இந்திய கூட்டணி வந்தால் எவ்வளவு உரிமை உள்ளதோ, அதே உரிமை இந்தியா கூட்டணியில் எங்களுக்கும் உள்ளது”

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி

ட்ரெண்டிங் செய்திகள்

வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மகனும் வேலூர் நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் ஓட்டு போட்டனர். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறுகையில், தமிழ்நாட்டின் எட்டுத்திக்கில் இருந்தும் தொடர்பு கொண்டு பேசினேன். அரக்கோணம், வேலூர் தொகுதியில் இந்திய கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பது போல் தமிழ்நாட்டிலும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. நிச்சயமாக மத்தியில் மாற்றம் இருக்கும் என்பது எனது கணிப்பு என்றார்.  

மேகதாது அணையை கட்டியே தீருவோம் என டி.கே.சிவக்குமார் கூறியது குறித்த கேள்விக்கு, அவ்வளவு பெரியவர், அப்படி தவறான செய்தியை சொல்லக்கூடாது. இது குறித்து பல்வேறு வழக்குகளை நாங்கள் போட்டு இருக்கிறோம். மேகதாது கட்டக்கூடாது என்பது தமிழ்நாட்டின் உரிமை. தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வரும் பகுதியை அது மறைக்கிறது. அதனை தேக்கி தண்ணீர் தருவோம் என்பது நடக்காத காரியம் என கூறினார். 

கேள்வி:- மேகதாது அணையை கட்டுவோம் என கூட்டணியில் இருந்து கொண்டே டி.கே.சிவக்குமார் பேசுகிறாரே?

தாயாக இருந்தாலும், பிள்ளையாக இருந்தாலும் வயிறு வேறுவேறுதான்!

கேள்வி:- மேகதாது அணையை கட்டத்தான் நீர்வளத்துறை அமைச்சர் ஆகி உள்ளதாக டி.கே.சிவக்குமார் கூறி உள்ளரே?

நான் அந்த மாதிரி வசனம் பேசி ரொம்ப நாள் ஆகிவிட்டது. அவருக்கு இந்திய கூட்டணி வந்தால் எவ்வளவு உரிமை உள்ளதோ, அதே உரிமை இந்தியா கூட்டணியில் எங்களுக்கும் உள்ளது. 

கேள்வி:- வாக்காளர்களுக்கு சொல்ல விரும்புவது என்ன? 

ஒழுங்காக வந்து வாக்கு மட்டும் போட்டால் போதும்.

கேள்வி:- நாடு முழுவதும் இந்தியா கூட்டணி எவ்வளவு இடங்களை வெல்லும்?

எனக்கு அதெல்லாம் தெரியாது, ஆனால் மெஜாரிட்டி வரும். 

கேள்வி:- மேகாதது அணை கட்டினால் தமிழ்நாட்டுக்கு பயன் என டி.கே.சிவக்குமார் கூறுகிறாரே?

எப்படி சார் தமிழ்நாட்டுக்கு பலன், இப்போது இருக்கும் தண்ணீரையே அவர்கள் தருவதில்லை. 

கேள்வி:- மலை கிராமங்களில் சாலை வசதி இல்லாமல் ஓட்டு பேட்டிகள் கழுதைகளில் கொண்டு செல்லும் நிலை இப்போதும் உள்ளதே?

வருத்தப்பட வேண்டிய செய்தி! காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு, அந்த நாட்டில் பல்வேறு மூலைமுடுக்குகள் உள்ளது. அதில் இப்படிப்பட்ட இடங்கள் விட்டுப்போய் விடுகிறது. இது மனம் உறுத்தலாக உள்ளாது. 

கேள்வி:- தேர்தல் ஆணையம் சரியாக செயல்படுகிறதா?

எப்போதும் சரியாக இருக்காது, ஆளும் கட்சிக்கு சாதகமாக இருக்கும்.

கேள்வி:- நதிநீர் இணைப்பு சாத்தியமா?

யார் வந்தாலும் அந்த முயற்சி எடுக்க வேண்டும். இது பற்றி பேசுவதோடு நிறுத்தி கொள்கின்றனர். ஆனால் நாம் அதற்கு தயார். நமக்கு தண்ணீர் வேண்டும். 

கோதாவரி - காவிரி இணைப்புக்கு சாத்தியம் உண்டு. அதற்கு மத்திய அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

கேள்வி:- வாக்குச்சீட்டு முறை சிறந்ததா? மின்னனு வாக்குப்பதிவு முறை சிறந்ததா? 

அதெல்லாம் வந்தால் மறுபடியும் பெரிய பிரச்னைகள் இருக்கும்.  இதைவிட ஒரு நல்ல முறை இப்போது உள்ளதில் இல்லை. 

WhatsApp channel