தமிழ் செய்திகள்  /  Elections  /  Parliamentary Elections 2024: Pmk Candidate List Details

PMK Candidates: 'கடலூரில் களம் இறங்கும் இயக்குநர் தங்கர் பச்சான்!’ போட்டியிடாத அன்புமணி! பாமக வேட்பாளர் பட்டியல்

Kathiravan V HT Tamil
Mar 22, 2024 10:09 AM IST

”நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ளார்”

பாமக வேட்பாளர் பட்டியல்
பாமக வேட்பாளர் பட்டியல்

ட்ரெண்டிங் செய்திகள்

நாடாளுமன்றத் தேர்தல் 2024

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த மார்ச் 20ஆம் தேதி நடந்து வருகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 27 ஆகும். மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் நிலையில், வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 30ஆம் தேதி கடைசி நாள் ஆகும். பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

பாஜக-பாமக கூட்டணி 

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த மார்ச் 19ஆம் தேதி அன்று பாமக-பாஜக கட்சிகள் இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் பாஜக கூட்டணியில் 10 தொகுதிகள் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ராஜ்யசபா தொகுதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இது குறித்து ஒப்பந்தத்தில் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. 

இதன்படி தருமபுரி, சேலம், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திண்டுக்கல், காஞ்சிபுரம், விழுப்புரம், அரக்கோணம், ஆரணி உள்ளிட்ட தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாமக போட்டியிடும் 10 தொகுதிகளில் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ளார். 

பாமக வேட்பாளர் பட்டியல்

  1. திண்டுக்கல்-கவிஞர் ம.திலகபாமா, பி.காம், மாநிலப் பொருளாளர், பா.ம.க.
  2. அரக்கோணம்-வழக்கறிஞர் கே.பாலு, பி.காம்., பி.எல், செய்தித் தொடர்பாளர், பா.ம.க. தலைவர், வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவை
  3. ஆரணி-முனைவர் அ.கணேஷ் குமார், பி.இ., பி.எச்டி., முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர், மாவட்டச் செயலாளர், பா.ம.க. திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம்,
  4. கடலூர்-திரு. தங்கர் பச்சான், டி.எஃப்.டெக், எழுத்தாளர், திரைப்பட இயக்குனர்,
  5. மயிலாடுதுறை- ம.க.ஸ்டாலின், பி.எஸ்சி., மாவட்டச் செயலாளர், பா.ம.க. தஞ்சாவூர் வடக்கு மாவட்டம்
  6. கள்ளக்குறிச்சி- இரா. தேவதாஸ் உடையார், பி.ஏ.,பி.எல்., நாடாளுமன்ற மக்களவை முன்னாள் உறுப்பினர், மாநிலத் துணைத் தலைவர், பா.ம.க.
  7. தருமபுரி-அரசாங்கம், பி.காம்., மாவட்டச் செயலாளர், பா.ம.க. தருமபுரி கிழக்கு மாவட்டம்
  8. சேலம்- ந. அண்ணாதுரை, பி.ஏ.,பி.எல்., முன்னாள் மாவட்டச் செயலாளர், பா.ம.க. சேலம் தெற்கு மாவட்டம்
  9. விழுப்புரம்_ முரளி சங்கர், பி.காம்., மாநில செயலாளர், பா.ம.க. மாணவர் அணி
  10. காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளர் மட்டும் விரைவில் அறிவிக்கப்படுவார் என பாமக அறிவித்துள்ளது. 

தேர்தலில் போட்டியிடாத அன்புமணி ராமதாஸ்!

பாமக சார்பில் தருமபுரி அல்லது கடலூர் தொகுதியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸோ அல்லது அவரது மனைவி சௌமியா அன்புமணியோ களம் இறங்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அன்புமணி ராமதாஸ் மற்றும் சௌமியா அன்புமணி ஆகியோர் தேர்தலில் போட்டியிடவில்லை. மேலும் தற்போது ராஜ்ய சபா எம்பியாக இருக்கும் அன்புமணி ராமதாஸுக்கு இன்னும் ஓராண்டு பதவிக்காலம் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக சார்பில் போட்டியிட்ட அன்புமணி ராமதாஸ் 4,68,194 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார். 

கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட அன்புமணி ராமதாஸ், 5,74,988 வாக்குகளை பெற்ற திமுக வேட்பாளர் செந்தில் குமாரிடம் வெற்றி வாய்ப்பை இழந்திருந்தார். இதனை அடுத்து அதிமுக ஆதரவுடன் மாநிலங்களவை உறுப்பினராக அன்புமணி ராமதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

WhatsApp channel

டாபிக்ஸ்