'OBC மக்களை பாமக கைவிட்டாலும்..' - திருமாவளவன் சொன்ன அந்த வார்த்தை!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  'Obc மக்களை பாமக கைவிட்டாலும்..' - திருமாவளவன் சொன்ன அந்த வார்த்தை!

'OBC மக்களை பாமக கைவிட்டாலும்..' - திருமாவளவன் சொன்ன அந்த வார்த்தை!

Published Mar 19, 2024 04:23 PM IST Karthikeyan S
Published Mar 19, 2024 04:23 PM IST

  • Thirumavalan: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "விடுதலை சிறுத்தைகள் கட்சி பானை சின்னத்தில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறது. கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் 2-வது முறையாக விழுப்புரம் தொகுதியிலும், 6-வது முறையாக நான் சிதம்பரம் தொகுதியிலும் போட்டியிடுகிறோம். திமுக தலைமையிலான கூட்டணி பாண்டிச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் வெற்றிபெறும். இந்த தேர்தல் மக்களுக்கும் பாஜக தலைமையிலான சங் பரிவார் கும்பலுக்கும் இடையேயான யுத்தம். திமுக அதிமுக எதிரெதிர் அணியாக இருந்தாலும் சமூகநீதி என்று வந்துவிட்டால் அவர்கள் ஒருங்கிணைந்த சிந்தனை உடையவர்கள்.. ஆனால் பாஜக அப்படி அல்ல. பா.ம.க பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்திருப்பது அவர்களின் விருப்பம். அதில் கருத்துச் சொல்ல எதுவும் இல்லை. ஆனால், இரண்டு கட்சிகளும், மதம், சாதிய வாத அரசியலில் திளைத்திருக்கிறார்கள். பா.ம.க-வின் இந்த முடிவு ஒ.பி.சி, எம்.பி.சி மக்களுக்கு எதிரான நடவடிக்கை." என்றார்.

More