Minister KN Nehru: ’நான் முத்தரையர்களுக்கு எதிரியா?’ செண்டிமண்டாக பேசிய அமைச்சர் கே.என்.நேரு!
”திருச்சி தொகுதி திமுகவுக்கு கிடைத்து இருந்தால் நிச்சயமாக அது நடந்து இருக்கும். ஆனால் கடைசி நேரத்தில் மாறிவிட்டது”
தேர்தல் பரப்புரையில் அமைச்சர் கே.என்.நேரு
கே.என்.நேரு முத்தரையர் சமூதாயத்திற்கு எதிரானவர் என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்ட நிலையில், நான் யாருக்கும் எதிரி கிடையாது, உங்கள் முன்னேற்றத்திற்காக நிற்பவன் என அமைச்சர் கே.என்.நேரு கூறி உள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழ்நாட்டில் தேர்தல் பரப்புரை சூடுபிடித்துள்ளது.
திமுகவில் முத்தரையர், கள்ளர் சமூகத்தை சேர்ந்த கட்சி நிர்வாகிகளை அரசியலில் வளரவிடாமல் கே.என்.நேரு அரசியல் செய்ததாக திருச்சி அமமுக மாவட்ட செயலாளர் ராஜசேகர் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் குற்றம் சாட்டி இருந்தார். 15 முத்தரையர் இன தலைவர்கள் திமுகவில் திட்டமிட்டு ஒடுக்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டி இருந்தார்.