DMK: பெரம்பலூர் கல்குவாரி கும்மாங்குத்து! 12 திமுகவினரை தூக்கிய போலீஸ்! சி.எம் போட்ட ஆர்டர்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Dmk: பெரம்பலூர் கல்குவாரி கும்மாங்குத்து! 12 திமுகவினரை தூக்கிய போலீஸ்! சி.எம் போட்ட ஆர்டர்!

DMK: பெரம்பலூர் கல்குவாரி கும்மாங்குத்து! 12 திமுகவினரை தூக்கிய போலீஸ்! சி.எம் போட்ட ஆர்டர்!

Kathiravan V HT Tamil
Nov 01, 2023 08:16 AM IST

“இச்சம்பவம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி கவனம் செலுத்தி விவரத்தை கேட்டறிந்ததாகவும் கூறப்படுகிறது”

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - கல்குவாரி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - கல்குவாரி

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எளம்பலூர், நாராயண மங்கலம், நாட்டார் மங்கலம், பாடாலூர், கல்பாடி வடக்கு, செங்குணம் உள்ளிட்ட 31 கிராமங்களில் கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்குவாரிகளில் கற்களை வெட்டி எடுத்து விற்பனை செய்வதற்கான மறைமுக ஏலம் இன்று நடைபெற இருந்தது.

இந்த மறைமுக ஏலத்தில் கலந்து கொள்வதற்கான விண்ணப்பத்தை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் உள்ள பெட்டியில் போட வேண்டும். இந்த பெட்டியானது இன்று உடைக்கப்பட்ட ஏலம் எடுத்த நபர்களின் பெயர்கள் அறிவிக்கப்படுவதாக இருந்தது.

விண்ணப்பங்களை சமர்பிக்க நேற்று கடைசிநாள் என்பதால் பல்வேறு கட்சிகளை சேர்ந்த ஒப்பந்ததாரர்கள் தங்களது விண்ணப்பங்களை சமர்பிக்க பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் துணை இயக்குநர் அலுவலகத்திற்கு வந்தனர்.

அப்போது திமுகவை சேர்ந்த கட்சி பிரமுகர்களும் மற்ற நிர்வாகிகளும் மாற்றுக் கட்சியினர் யாரும் ஏலத்தை எடுத்துவிடக் கூடாது என்று கூறி தகராற்றில் ஈடுபட்டனர். திமுகவினரை தவிர வேறு யாரும் ஏலம் கேட்பதற்கான விண்ணப்பத்தை பெட்டியில் போடக்கூடாது என தடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் வாக்குவாதம் முற்றியதால் இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பொதுமக்கள் குறைதீர்கூட்டம் ஆட்சியர் கற்பகம் தலைமையில் நடந்தபோது இந்த பிரச்னை ஏற்பட்டதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பகுதியில் பெரும் கூச்சல் குழப்பம் நிலவியது.

இதனை அடுத்து அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரின் உதவியாளர் மகேந்திரன், திமுவை சேர்ந்த ரமேஷ், கோவிந்த், செல்வம், விஜயகாந்த், தர்மா உள்ளிட்ட 10 பேர் மீது 8 வழக்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மோதலை தொடர்ந்து நேற்று நடைபெற இருந்த கல்குவாரி ஏலத்தை தேதி மாவட்ட ஆட்சியர் குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து இருந்த நிலையில் 12 திமுகவினரை இதுவரை கைது செய்துள்ளதாக பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷியாமளாதேவி தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி கவனம் செலுத்தி விவரத்தை கேட்டறிந்ததாகவும் கூறப்படுகிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.