Mayiladuthurai: 'திடீர் ட்விட்! ஒரு வழியாக மயிலாடுதுறை வேட்பாளரை அறிவித்த காங்கிரஸ்!’ யார் தெரியுமா?
”ராகுல் காந்தி உடன் பாரத் ஜோடா யாத்திரையில் வழக்கறிஞர் சுதா பங்கேற்று இருந்தார்”
மயிலாடுதுறை தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளராக வழக்கறிஞர் சுதாவை அக்கட்சித் தலைவர் அறிவித்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் 2024
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் மார்ச் 20ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 27 ஆகும். மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் நிலையில், வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 30ஆம் தேதி கடைசி நாள் ஆகும். பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
காங்கிரஸ் வேட்பாளர்கள்
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலை போலவே இந்த முறையும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உட்பட 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் திருவள்ளூரில் சசிகாந்த் செந்தில், கிருஷ்ணகிரியில் கோபிநாத், கடலூர் விஷ்ணுபிரசாத், சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம், விருதுநகரில் மாணிக்கம் தாகூர், கன்னியாகுமரியில் விஜய் வசந்த், கரூரில் ஜோதிமணி, புதுச்சேரியில் வைத்திலிங்கம் உள்ளிட்டோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.