Thangar Bachan: ’கடலூரில் எனக்கு சவாலே கிடையாது!’ பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் இந்துஸ்தான் டைம்ஸ்க்கு Exclusive பேட்டி!
“Thangar Bachan interview: தமிழில் கட்டாய படிப்பு இல்லை. 55 ஆண்டுகளுக்கு மேலாக ஆளும் திராவிட கட்சிகள் தமிழை படிக்காமலேயெ எந்த உயரத்திற்கும் செல்லலாம் என்ற நிலையை ஏற்படுத்தி உள்ளது”

நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. பாஜக உடன் இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிடும் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கலில் கவிஞர் ம.திலகபாமா, அரக்கோணத்தில் வழக்கறிஞர் கே.பாலு, ஆரணியில் முனைவர் அ.கணேஷ் குமார், கடலூரில் தங்கர் பச்சான், மயிலாடுதுறையில் ம.க.ஸ்டாலின், கள்ளக்குறிச்சியில் இரா. தேவதாஸ் உடையார், தருமபுரியில் அரசாங்கம், சேலத்தில் அண்ணாதுரை, விழுப்புரத்தில் முரளி சங்கர் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
பாமக சார்பில் கடலூர் தொகுதியில் போட்டியிடும் இயக்குநர் தங்கர் பச்சான் இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி நிறுவனத்திடம் அளித்த நேர்காணல் இதோ:-
கேள்வி:- கடலூர் மக்களுக்காக கள செயற்பாட்டாளராக பணியாற்றி உள்ளீர்கள் தற்போது தேர்தலில் நிற்பதை எப்படி பார்க்கிறீர்கள்?
தானே புயல் உள்ளிட்ட பல்வேறு காலகட்டங்களில் கடலூர், விழுப்புரம் மக்களுக்காக களப்பணி செய்துள்ளேன். அம்மக்களின் பிரச்னைகளுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறேன். இந்த மக்களுக்காக தேர்தலில் நின்று குரல் கொடுக்க வேண்டும் என விரும்புகிறேன்.