விருதுநகர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து..9 தொழிலாளர்கள் பலி!-9 dead 4 injured in firecracker factory explosion in virudhunagar - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  விருதுநகர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து..9 தொழிலாளர்கள் பலி!

விருதுநகர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து..9 தொழிலாளர்கள் பலி!

Karthikeyan S HT Tamil
Feb 17, 2024 02:26 PM IST

Firecracker Factory Explosion: விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் தரைமட்டமான பட்டாசு தயாரிக்கும் அறைகள்.
விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் தரைமட்டமான பட்டாசு தயாரிக்கும் அறைகள்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ராமுத்தேவன் பட்டியில் விக்னேஷ் என்பவருக்கு சொந்தமான வின்னர் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் சுமார் 40க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளது. இந்த ஆலையில் இன்று (பிப்.17) வழக்கம் போல் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்தநிலையில், எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் ஆலையின் 4 அறைகள் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் 5 பெண்கள் மற்றும் 4 ஆண்கள் என 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகிய நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயமடைந்த நான்கு பேர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த சிவகாசி, ஏழாயிரம்பண்ணை, வெம்பக்கோட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின்பு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மேலும் இந்த தீ விபத்து குறித்து ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டாசி ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒரே நாளில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.