Annamalai vs Sellur Raju: ’ஒரு லட்சம் ஓட்டு காணோமா? அதிபுத்திசாலி ஐபிஎஸ் முன்பே பேசாதது ஏன்?’ செல்லூர் ராஜூ கேள்வி!
தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Annamalai Vs Sellur Raju: ’ஒரு லட்சம் ஓட்டு காணோமா? அதிபுத்திசாலி ஐபிஎஸ் முன்பே பேசாதது ஏன்?’ செல்லூர் ராஜூ கேள்வி!

Annamalai vs Sellur Raju: ’ஒரு லட்சம் ஓட்டு காணோமா? அதிபுத்திசாலி ஐபிஎஸ் முன்பே பேசாதது ஏன்?’ செல்லூர் ராஜூ கேள்வி!

Kathiravan V HT Tamil
Apr 26, 2024 02:26 PM IST

”ஒருவர் போனில் பேசியதை மறைமுகமாக டேப் செய்து வெளியிடக்கூடிய திறமைப்படைத்த அவர், வாக்காளர் பட்டியலில் பாஜகவினர் பெயர் விடுபட்டு இருப்பதை ஒரு வாரம் முன்கூட்டியே சொல்லி இருக்க வேண்டும்”

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம்
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம்

கேள்வி:- வாக்காளர் பட்டியலில் பலரது பெயர்கள் விடுபட்டு போய்விட்டதாக புகார்கள் எழுந்து உள்ளதே?

உண்மையிலேயே விடுபட்டு உள்ளது, தேர்தல் ஆணையத்தின் மெத்தன போக்கு என சொல்வதா என்று தெரியவில்லை. கடந்த காலங்களில் ஒவ்வொரு அரசியல் இயங்கங்களும் பூத் சிலிப்களை வாக்காளர்களுக்கு தருவது வழக்கமானது. ஆனால் தேர்தல் ஆணையம் அதை தடை செய்துவிட்டார்கள். அரசு அலுவலர்கள் மூலம் பூத் சிலிப்பை கொடுத்து வருகின்றனர். ஆனால் திமுக அரசு வந்த பிறகு ஒப்பந்த பணியாளர்கள் மூலம் பூத் சிலிப் தரப்படுகிறது. இதில் அவர்கள் கவனம் செலுத்தவில்லை. பூத் சிலிப்களை அரசியல் இயங்கள் கொடுக்கலாம் என்ற முறையை கொண்டு வந்தால் இந்த பிரச்னை ஏற்படாது.

பாஜகவினரின் ஒரு லட்சம் வாக்கு விடுபடுவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளதே?

அதிபுத்திசாலி, ஐபிஎஸ் படித்தவர் இதை பற்றி என்று சொல்லி இருக்க வேண்டும். வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் எங்களுக்கு 4 முறை கொடுத்துவிட்டார்கள். அதை பார்த்து இருக்கலாம். பாஜக வாக்காளர்கள் மட்டும் விடுபட்டு இருக்கிறது என்று சொன்னால் நாங்கள் சொல்லி வந்ததைதான் அது குறிக்கிறது என நான் கருதுகிறேன். பாஜக தலைவர் தேர்தல் அன்று இதை சொல்கிறார் என்றால் இந்த தேர்தலில் தனக்கு சரியான வாக்கு கிடைக்கவில்லை என்பதால் கூறுகிறார்.

ஒரு தொகுதியிலேயே ஒரு லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டு இருந்தால் அந்த புகாரை முன் கூட்டியே கொடுத்து இருக்கனும்.

ஒருவர் போனில் பேசியதை மறைமுகமாக டேப் செய்து வெளியிடக்கூடிய திறமைப்படைத்த அவர், வாக்காளர் பட்டியலில் பாஜகவினர் பெயர் விடுபட்டு இருப்பதை ஒரு வாரம் முன்கூட்டியே சொல்லி இருக்க வேண்டும்.

இவர் பிரச்சாரத்திற்காக கேரளா, கர்நாடகத்திற்கு செல்கிறார். அவரை பற்றி கேட்டே அவரை பெரிய ஆள் ஆக்கிக்கொண்டே இருக்கின்றனர்.

அடுத்து ஆட்சிக்கு வரப்போவது மோடியா? ராகுலா?

யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும், தமிழ்நாட்டுக்கு நல்லதை செய்தால் யாராக இருந்தாலும் வரவேற்போம். தமிழ்நாட்டுக்கு பாதம் செய்யும் வகையில் யார் ஆட்சி செய்தாலும் அவர்களை எதிர்ப்போம். தமிழ்நாடு உரிமைக்காக நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டு இருப்போம்.

சிறுபான்மயினரை தாக்கி மோடி பேசுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டுகிறதே?

இந்தியா மதசார்பற்ற நாடு, ஒரு மதத்தை குறி வைத்து பேசுவது என்பது மோடிஜி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் சொல்லக்கூடாது என்று எங்கள் பொதுச்செயலாளர் கூறி உள்ளார்.

சித்திரைத் திருவிழாவில் பட்டக்கத்தி குத்து நடந்து உள்ளதே?

உண்மையிலேயே வருத்தப்படக்கூடிய ஒன்று, இன்றைக்கு உள்ள இளைஞர்களை காப்பாற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் மத்திய மாநில அரசுகளுக்கு உள்ளது. தமிழ்நாட்டில் போதை தலைக்கேறிவிட்டது. சித்தரை திருவிழாவில் ஆற்றில் அழகர் இறங்கும்போது இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி தன்னையே மறந்து போகும் போது ஒரு தகப்பனாக ரொம்ப வருத்தப்பட்டேன். போதை பொருட்களை விற்பவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.

Whats_app_banner
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள், மக்களவைத் தேர்தல்கள், அதன் முடிவுகள் குறித்த அனைத்து செய்திகளையும் இந்தப்பிரிவில் பார்க்கலாம்.