தமிழ் செய்திகள்  /  Elections  /  Eps Vs Sasikala This Is The Reason Why Sasikala Fell On Her Feet Edappadi Palaniswami Breaks The Truth

EPS Vs Sasikala: 'சசிக்கலா காலில் விழுந்ததுக்கு இது தான் காரணம்' உண்மையை போட்டு உடைத்தார் எடப்பாடி பழனிச்சாமி

Pandeeswari Gurusamy HT Tamil
Mar 29, 2024 09:59 AM IST

EPS Vs Sasikala: தோல்வி பயத்தின் காரணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அதிமுகவை அவதூறாக பேசி வருகிறார்கள், பாஜகவுடன் கூட்டணியில் இருந்தோம், பாஜக கூட்டணியில் இருந்து வெளியேற பின்பு எதை பேசுவது, திமுக மாதிரி நாங்கள் அல்ல அதிமுக கூட்டணி தர்மத்தை கடைப்பிடிப்போம்.

'சசிக்கலா காலில் விழுந்ததுக்கு இது தான் காரணம்' உண்மையை போட்டு உடைத்தார் எடப்பாடி பழனிச்சாமி
'சசிக்கலா காலில் விழுந்ததுக்கு இது தான் காரணம்' உண்மையை போட்டு உடைத்தார் எடப்பாடி பழனிச்சாமி

ட்ரெண்டிங் செய்திகள்

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் டாக்டர் சரவணனுக்காக மதுரை கே.கே.நகரில் அமைக்கப்பட்டு உள்ள தேர்தல் பணிமனை அலுவலகத்தை எடப்பாடி கே.பழனிச்சாமி திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். இதையடுதது செய்தியாளர்களை எடப்பாடி பழனிச்காமி சந்தித்தார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி கூறுகையில் "நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தேமுதிக கூட்டணி ஏற்பட்டதை அடுத்து நிர்வாகிகள் தொண்டர்கள் எழுச்சியோடு செயல்பட்டு வருகிறார்கள், அதிமுக கூட்டணிக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு ஏற்பட்டுள்ளது, நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெறும், தமிழகத்தில் ஒரே அலை தான் வீசுகிறது, அது அதிமுக அலையாக வீசுகிறது.

அதிமுக என்னென்ன சாதனைகள் செய்தோம் இனி என்ன சாதனைகள் செய்யப் போகிறோம் என மக்களிடம் கூறுவதால் மக்கள் அதிமுக கூட்டணியை விரும்புகிறார்கள், அதிமுக கள்ளக்கூட்டணி வைத்துள்ளது என முதலமைச்சர் விமர்சனம் செய்வதற்கு அவரே விளக்கம் அளிக்க வேண்டும். இப்படி எல்லாம் யாரும் விமர்சனம் செய்ததே இல்லை, ஒவ்வொரு தேர்தல் சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டணி அமைக்கப்படுகிறது.

பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய பின்பும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வேண்டுமென்றே திட்டமிட்டு அதிமுக மீது அவதூறு பரப்பி வருகின்றனர்.

தோல்வி பயத்தின் காரணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அதிமுகவை அவதூறாக பேசி வருகிறார்கள். பாஜகவுடன் கூட்டணியில் இருந்தோம், பாஜக கூட்டணியில் இருந்து வெளியேற பின்பு எதை பேசுவது, திமுக மாதிரி நாங்கள் அல்ல அதிமுக கூட்டணி தர்மத்தை கடைப்பிடிப்போம். கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டாலும் பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம், கூட்டணியில் இருக்கும் போது கட்சியினரை விமர்சனம் செய்யக்கூடாது, அப்படி விமர்சனம் செய்தால் உள்ளடி வேலை செய்வதாக அர்த்தம் கூட்டணி கட்சிகளை விமர்சனம் செய்வது திமுகவிற்கு கைவந்த கலை. ஆனால் கூட்டணி கட்சியினருக்கு அதிமுக என்றுமே விசுவாசமாக இருக்கும்.

தேர்தலில் நிற்க பணம் இல்லை என நிர்மலா சீதாராமன் கூறி இருப்பது அவருடைய சொந்த பிரச்சனை இது குறித்து அவர் தான் கருத்து கூற வேண்டும், ஜனநாயக நாட்டில் யாரும் பெரியவர்களில் அனைவரும் சமமாக உள்ளனர், ஓ பன்னீர்செல்வத்தை எதிர்த்து தேர்தலில் போட்டியிடக் கூடிய 5 ஓ.பன்னீர்செல்வமும் தேர்தலில் நிற்க தகுதியானவர்கள், அதிமுகவில் 2 கோடி தொண்டர்களில் நானும் ஒருவன், அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது 2 கோடி அதிமுக தொண்டர்கள் எடுத்த முடிவு, ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவிலிருந்து நீக்க எடப்பாடி பழனிச்சாமி எடுத்த முடிவு அல்ல, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரதமரை எதிர்ப்பது போல் வெளியில் வீரவசனம் பேசி வருகிறார், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருப்புக்குடை பிடித்தால் பிரதமர் கோபித்துக் கொள்வார் என வெள்ளைக்கொடை பிடிக்கிறார்.

தமிழ்நாட்டில் திட்டங்களை நிறைவேற்றுவதற்காக அமைச்சர் உதயநிதி ஓடோடி சென்று பிரதமரை அழைத்து வருகிறார் பிரதமர் இடத்தில் சரணாகவி அடைந்து விட்டு வெளியே பிரதமரை எதிர்ப்பது போல் இரட்டை விடும் போடுகிறார்கள், தேர்தலில் மிட்டா மிராசுகள் நின்ற காலம் போய் சாமானிய தொண்டனும் போட்டியிடலாம் என்கிற நிலை உருவாகி இருக்கிறது" என பேசினார்

அப்போது சசிகலா காலில் விழுந்தது தொடர்பான அமைச்சர் உதயநிதியின் விமர்சனம் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, “நான் பெரியவர்களிடம் ஆசி வாங்குவது தவறா? வேறு யாரிடமோ மூன்றாவது நபரிடமோ ஆசி வாங்கவில்லையே” என எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

WhatsApp channel