தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Dmk: ’ஸ்ட்ராங் ரூம்கள் அருகே ட்ரோன்கள் பறக்க கூடாது!’ தேர்தல் ஆணையத்தை கேட்கும் திமுக! களத்தில் குதித்த என்.ஆர்.இளங்கோ

DMK: ’ஸ்ட்ராங் ரூம்கள் அருகே ட்ரோன்கள் பறக்க கூடாது!’ தேர்தல் ஆணையத்தை கேட்கும் திமுக! களத்தில் குதித்த என்.ஆர்.இளங்கோ

Kathiravan V HT Tamil
Apr 29, 2024 04:01 PM IST

”ஸ்ட்ராங் ரூமை சுற்றி உள்ள இடங்களில் எந்த ட்ரோன் போன்ற கருவிகள் பறக்க கூடாது என்றும் தேர்தல் ஆணையத்திடம் கேட்டு உள்ளோம் என தெரிவித்தார்”

நீலகிரி ஸ்ட்ராங்க் ரூமில் சிசிடிவி கேமிரா அணைந்தது தொடர்பாக திமுக சார்பில் என்.ஆர்.இளங்கோ தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்து உள்ளார்
நீலகிரி ஸ்ட்ராங்க் ரூமில் சிசிடிவி கேமிரா அணைந்தது தொடர்பாக திமுக சார்பில் என்.ஆர்.இளங்கோ தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்து உள்ளார்

ட்ரெண்டிங் செய்திகள்

இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்த பின்னர் திமுக எம்.பியும், வழக்கறிஞருமான என்.ஆர்.இளங்கோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நீலகிரி பாராளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்து பதிவான வாக்குகளை வைத்துள்ள ஸ்ட்ராங் ரூமில் உள்ள சிசிடிவி கேமிராக்கள் கடந்த 27ஆம் தேதி அன்று 20 நிமிடங்களுக்கு இயங்காமல் போய் உள்ளன. தொடர்ந்து சிசிடிவி கேமிராக்கள் இயங்கியதால் மின் இணைப்புகளில் பழுது ஏற்பட்டு இயங்கவில்லை என்று நீலகிரி தேர்தல் அதிகாரி கூறி இருந்தார். 

இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள எந்த ஸ்ட்ராங் ரூமிலும், ஏற்படக்கூடாது என்பதற்காக திமுக சார்பில் கழகத் தலைவர் ஆணைக்கு இணங்க கோரிக்கை மனுவை தேர்தல் ஆணையத்திற்கு கொடுத்து உள்ளோம். தமிழ்நாட்டில் உள்ள எல்லா ஸ்ட்ராங் ரூம்களிலும், சிசிடிவி கேமராக்கள் எந்த பழுதும் இல்லாமல் முழுமையாக இயங்க வேண்டும். 

வாக்கு எண்ணிக்கு ஸ்ட்ராங் ரூம்கள் திறக்கப்படும்போது மட்டும்தான் சிசிடிவிக்கள் இயங்க வேண்டும். அதற்கான வீடியோ காட்சிகளை தேவைப்படும் போதெல்லாம் வேட்பாளர்களோ, வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் கேட்கும்போது தர வேண்டும் என மனு கொடுத்து உள்ளோம். 

ஸ்ட்ராங் ரூமை சுற்றி உள்ள இடங்களில் எந்த ட்ரோன் போன்ற கருவிகள் பறக்க கூடாது என்றும் தேர்தல் ஆணையத்திடம் கேட்டு உள்ளோம் என தெரிவித்தார்.  

கோவையில் வாக்காளர் பட்டியலில் ஒரு லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் விடுபட்டு உள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறி உள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், வாக்காளர் பட்டியல் என்பது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1950-இன் படி தயாரிக்கப்படுகிறது. இதனை தயாரிப்பது தேர்தல் ஆணையத்தின் முழு பணியாகும். அதில் வேறு யாரும் தலையிட முடியாது. வாக்காளர் பட்டியலை ஆண்டுதோறும் சீரமைத்துக் கொண்டே வருவார்கள், தேர்தல் வரும் ஆண்டில் குறைந்தபட்சம் மூன்று முறையாவது மாதிரி வாக்காளர் பட்டியலை வெளியிடுவார்கள். அதே போல் 4 வாரம் சிறப்பு முகாம்களையும் தேர்தல் ஆணையம் நடத்துகின்றனர். அதில் அரசியல் கட்சிகளின் ஏஜெண்டுகள், பெயர்சேர்ப்பு, பெயர் நீக்கம் குறித்து கோரிக்கை விடுக்கலாம். வேட்புமனு திரும்ப பெறும் முன் நாள் வரை வாக்காளர்கள் பட்டியலில் எந்த திருத்தமும் செய்ய முடியாது என தேர்தல் ஆணையமே சொல்லி உள்ளது. தங்கள் வாக்குகள் வாக்காளர்கள் பட்டியலில் தங்கள் பெயர்கள் இருப்பதை உறுதி செய்து கொள்வது வாக்காளர்களின் கடமை. 

இதனை மக்களோடு பணியாற்றக் கூடிய அரசியல் கட்சிகள் எல்லோரும் செய்வார்கள், வாட்ஸ் அப், பேஸ்புக்கில் கட்சி நடத்துவபர்களுக்கு அது தெரியாது என கூறினார். 

தலைமை தேர்தல் அதிகாரியிடம் வைத்த கோரிக்கைகள் என்ன என்பது குறித்த கேள்விக்கு, ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ள்ள மண்டலம் குறித்த உரிய அறிவிப்பை காவல்துறைக்கு அனுப்புவதாக கூறி உள்ளார். சிசிடிவி கேமராக்களை பழுது அடையாமல் பார்த்துக் கொள்வோம் என்ற உறுதியை கொடுத்து உள்ளார். எலெக்ட்ரிக்கல் ஷாட் சர்க்க்யூட் காரணமாக இது நடந்து உள்ளதாக கூறி உள்ளனர். எல்லா வேட்பாளர்களின் ஏஜெண்ட்களையும் அழைத்து சென்று காட்டி உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தரப்பில் சொல்லப்பட்டு உள்ளது. 

எங்கள் வேட்பாளரின் ஏஜெண்டுக்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, ஸ்ட்ராங் ரூமில் உள்ள சீல்கள் சரியாக இருந்தது, அந்த இடத்தில் எந்த பிரச்னையும் இல்லை. இந்த நிகழ்வில் தேர்தல் அதிகாரி சொல்லி உள்ள விளக்கம் எங்களுக்கு சரியானதாகபடுகிறது என கூறி உள்ளார். 

WhatsApp channel