Lok sabha Election: ’மகாராஷ்டிராவில் பூதாகரமாகும் வீர சாவர்க்கர் விவகாரம்! உத்தவ் தாக்கரேவுக்கு அமித்ஷா சரமாரி கேள்வி!’
தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Lok Sabha Election: ’மகாராஷ்டிராவில் பூதாகரமாகும் வீர சாவர்க்கர் விவகாரம்! உத்தவ் தாக்கரேவுக்கு அமித்ஷா சரமாரி கேள்வி!’

Lok sabha Election: ’மகாராஷ்டிராவில் பூதாகரமாகும் வீர சாவர்க்கர் விவகாரம்! உத்தவ் தாக்கரேவுக்கு அமித்ஷா சரமாரி கேள்வி!’

Kathiravan V HT Tamil
May 03, 2024 07:52 PM IST

“உத்தவ் தாக்ரே பிரிவுகளின் சிவசேனா கட்சிகள் வீர சாவர்க்கரை புரட்சிகர தலைவராக கருதும் நிலையில், சாவர்க்கர் மீது கடுமையான விமர்சனங்களை உத்தவ் தாக்ரே கட்சி உடன் கூட்டணியில் இருக்கும் ராகுல் காந்தி வைத்துள்ளார்”

மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா (PTI)

மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ”போலி சிவசேனா கட்சியின் தலைவராக உள்ள உத்தவ் தாக்கரேவுக்கு தைரியம் உள்ளதா என கேள்வி எழுப்பினார்.” மேலும் உண்மையான சிவசேனா கட்சியை ஏக்நாத் ஷிண்டேதான் நடத்துவதாகவும் அவர் கூறினார். 

370 வது பிரிவைப் பற்றி குறிப்பிடுகையில், பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கம் சர்ச்சைக்குரிய பிரிவை ரத்து செய்ததாகவும், காங்கிரஸ் கட்சி இத்தனை ஆண்டுகளாக அதைத் தொடர்ந்ததாகவும் உள்துறை அமைச்சர் கூறினார்.

ஸ்ரீநகரில் உள்ள லால் சவுக்கிற்கு செல்வது கடினமாக இருந்தபோதிலும், இப்போது ஜன்மாஷ்டமி ஊர்வலங்கள் பெருமையுடன் அங்கு மேற்கொள்ளப்படுகின்றன என்று அமித் ஷா கூறினார்.

"நீங்கள் முதல்வராவதற்காக யாருடைய காலில் விழுந்தீர்களோ, அந்த காங்கிரஸும் சரத் பவாரும் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று உத்தவ் தாக்கரேவிடம் நான் கேட்க விரும்புகிறேன்?... 370-வது பிரிவை ரத்து செய்ய அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்." என்று அமித் ஷா கூறினார்.

இது நரேந்திர மோடியின் அரசு. முன்பு லால் சௌக்கிற்கு செல்வது கடினமாக இருந்தது, ஆனால் இப்போது கிருஷ்ண ஜன்மாஷ்டமியின் ஊர்வலம் பெருமையுடன் கொண்டு செல்லப்படுகிறது, "என்று அவர் கூறினார்.

370வது பிரிவின் பாதுகாவலர்கள் வேண்டுமா? அல்லது முதலமைச்சர் பதவி வேண்டுமா என்பதை உத்தவ் தாக்ரே தெளிவுபடுத்த வேண்டும்.  ராகுல் காந்தி மற்றும் சரத் பவாருடன் அதிகாரத்திற்காக சென்ற ஒருவரால் மகாராஷ்டிராவின் பெருமையை ஒருபோதும் நிர்வகிக்க முடியாது என அமித் ஷா பேசினார். 

மகாராஷ்டிராவில் பேசு பொருள் ஆகி உள்ள வீர சாவர்க்கர் விவகாரம்!

மகாராஷ்டிர மாநில அரசியலை பொறுத்தவரை 'வீர சாவர்க்கர்' பிரச்சினை முக்கிய பேசுபொருளாக மாறி உள்ளது. ஏக்நாத் ஷிண்டே மற்றும் உத்தவ் தாக்ரே பிரிவுகளின் சிவசேனா கட்சிகள் வீர சாவர்க்கரை புரட்சிகர தலைவராக கருதும் நிலையில், சாவர்க்கர் மீது கடுமையான விமர்சனங்களை உத்தவ் தாக்ரே கட்சி உடன் கூட்டணியில் இருக்கும் ராகுல் காந்தி வைத்துள்ளார்.

மகாராஷ்டிர அரசியல் நிலவரம்

பிளவுபடாத சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து 2019-2022 வரை கூட்டணி அமைத்து மகாராஷ்டிர அராசங்கத்தை நடத்தி வந்தன .

அதன் பின் ஒருங்கிணைந்த சிவசேனா பிளவுபட்ட நிலையில், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான ஒரு பிரிவு கட்சியில் இருந்து பிரிந்து பாஜகவின் ஆதரவுடன் அரசாங்கத்தை அமைத்தது.

மகாராஷ்டிராவில் மொத்தம் 48 மக்களவை தொகுதிகள் உள்ள நிலையில், வரும் மே 7 ஆம் தேதி 11 தொகுதிகளில் மூன்றாம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெற உள்ளது.

2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 23 இடங்களை வென்றது. அதன் கூட்டணி கட்சியான பிளவுபடாத சிவசேனா 18 இடங்களை வென்றது. தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் முறையே நான்கு மற்றும் ஒரு இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது.

 

 

Whats_app_banner
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள், மக்களவைத் தேர்தல்கள், அதன் முடிவுகள் குறித்த அனைத்து செய்திகளையும் இந்தப்பிரிவில் பார்க்கலாம்.