தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Prajwal Revanna Scandal: ’செக்ஸ் புகாரில் சிக்கிய ரேவண்ணா தப்பியது எப்படி?’ மோடி அமித்ஷாவை விளாசும் பிரியங்கா!

Prajwal Revanna scandal: ’செக்ஸ் புகாரில் சிக்கிய ரேவண்ணா தப்பியது எப்படி?’ மோடி அமித்ஷாவை விளாசும் பிரியங்கா!

Kathiravan V HT Tamil
Apr 29, 2024 08:45 PM IST

”"நானோ அல்லது எதிர்க்கட்சித் தலைவர்களோ எங்கு சென்றோம் என்பது அவர்களுக்குத் தெரியும், ஆனால் இந்த கிரிமினல், இந்த வகையான பேய் நாட்டை விட்டு சென்றது தெரியாதா? என பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பினார்”

பாலியல் புகாரில் சிக்கிய மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி வேட்பாளர் ரேவண்ணா வெளிநாடு தப்பியது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி
பாலியல் புகாரில் சிக்கிய மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி வேட்பாளர் ரேவண்ணா வெளிநாடு தப்பியது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி (PTI)

ட்ரெண்டிங் செய்திகள்

கர்நாடக மாநிலம் கல்புர்கியில் பேசிய அவர், பிரதமர் மோடியுடன் மேடையைப் பகிர்ந்து கொண்ட பிரஜ்வல் ரேவண்ணா, யாருக்காக மோடி வாக்கு கேட்டாரோ, அவர் ஆயிரக்கணக்கான பெண்களுக்கு அட்டூழியம் செய்து உள்ளார். இது குறித்து பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா என்ன சொல்ல போகிறார்கள். 

கடந்த காலங்களில் வெளிநாட்டில் உள்ள எனது மகளை சந்திக்க மூன்று நாட்கள் சென்றபோது, மோடியும், அமித்ஷாவும் என்னை வெளிநாடு சென்றுவிட்டதாக கூறத் தொடங்கினர்.

"நானோ அல்லது எதிர்க்கட்சித் தலைவர்களோ எங்கு சென்றோம் என்பது அவர்களுக்குத் தெரியும், ஆனால் இந்த வகையான கிரிமினல், இந்த வகையான பேய் நாட்டை விட்டு சென்றது தெரியாதா? என பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பினார். 

"நாம் எப்படி அவர்களை நம்ப முடியும்? அனைத்து தகவல்களும் அவர்களுக்குச் செல்கின்றன, அவர்கள் எங்கு செல்கிறார்கள் என்பதை அவர்கள் கண்காணிக்கிறார்கள், ஆனால் இவ்வளவு பெரிய குற்றத்தைச் செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறிய ஒருவரை அவர்களிடம் தகவல் இல்லை” என பிரியங்கா கூறினார். 

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியவர் வெளிநாட்டில் இருந்து திரும்பும் வரை மோடி யாருடைய 'தாலி' பற்றியும் பேசத் துணிய கூடாது என்ற பிரியங்கா காந்தி, "பிரதமர் நரேந்திர மோடி தாலி குறித்தும் பெண்களின் நகைகள் பற்றியும் பேசுகிறார். ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீராங்கணைகள் மீது அட்டூழியங்கள் நடந்தபோது அவர் எங்கே இருந்தார்? ஹத்ராஸ் மற்றும் உன்னாவ் ஆகிய இடங்களில் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரிக்கப்பட்டபோது அவர் எங்கே இருந்தார்? என பிரியங்கா கேள்வி எழுப்பினார். 

கடந்த ௭௦ ஆண்டுகளில் என்ன நடந்தது என்பதைப் பற்றி மட்டுமே பிரதமர் பேசுகிறார். ஆனால் மோடி 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ளார், அவர் எத்தனை பல்கலைக்கழகங்களைத் திறந்தார் என்பதை அவர் நாட்டிற்கு சொல்ல வேண்டும். 

ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ், இஸ்ரோ, டிஆர்டிஓ போன்ற நிறுவனங்களை காங்கிரஸ் தொடங்கி உள்ளது. தனியார் மற்றும் பொதுத் துறைகளை வலுப்படுத்தியதன் மூலம் உங்களுக்கு வேலை கிடைக்கும். மோடி எத்தனை வேலை வாய்ப்புகளை உருவாக்கினார். 

கர்நாடகா அரசியலை உலுக்கும் செக்ஸ் வீடியோக்கள்!

பெண்களின் பாதுகாப்புக்காக அவர் என்ன செய்தார்? பெண்களுக்கு எதிரான கொடுமைகளை இழைத்தவர்களை மட்டுமே அவர் பாதுகாத்தார். அவருக்கு தைரியம் இருந்தால் அவரது வேலை இன்மையை பற்றி பேசட்டும். அவருக்கு தைரியம் இல்லை" 

மதச்சார்பற்ற ஜனதா தள தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடாவின் பேரனும், பிரஜ்வல் பாலியல் புகாரும் விசாரிக்க கர்நாடக அரசு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்துள்ளது.

பிரஜ்வால் மற்றும் அவரது தந்தையும் எம்.எல்.ஏ.வும் முன்னாள் அமைச்சருமான எச்.டி.ரேவண்ணா ஆகியோர் மீது பாலியல் துன்புறுத்தல் மற்றும் கிரிமினல் மிரட்டல் ஆகியவற்றிற்காக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ரேவண்ணா மற்றும் பிரஜ்வால் ஆகியோருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர் சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

ஹாசன் தொகுதியில் பாஜக-மஜத கூட்டணி வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணா சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் சில ஆபாச வீடியோ கிளிப்புகள் சமீபத்திய நாட்களில் ஹாசனில் வலம் வரத் தொடங்கின.

காவல்துறைக்கு கிடைத்த தகவல்களின்படி, பிரஜ்வால் (வாக்குப்பதிவு முடிந்ததும்) நாட்டை விட்டு வெளியேறினார் என்று முதல்வர் சித்தராமையாவின் அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

WhatsApp channel